நகைச்சுவை:-

v அவசரம்
(மாப்பிள்ளயாகப்போகும் நபர் தொலைபேசியில் கோயில் ஐயரிடம்)
நபர்:- வணக்கம் ஐயா.ஐயா என்னுடைய கலியாணவீட்டுக்கு ஒரு
நல்லநாள் பார்த்துச்சொல்லுங்கோ ஐயா.

ஐயர்:-நல்லவிசயம் பாருங்கோ.உங்கள் அதிஷ்டம்.. இந்த மாதம் ஒவ்வொரு சனி, ஞாயிறும் மதியம் 12 இலிருந்து 01 மணி வரை நல்லநாட்கள்.ஆனால் இந்தமாதம் கடந்தால் அவ்வளவு நல்லா யில்லைத்தம்பி .

நபர்:-என்ன ஐயா!அப்படிச் சொல்லுறியள் பொம்பிள்ளை இந்தமாதக்கடைசியிலதானே ஐயா வருகிறா.

ஐயர்:-ஒன்றுக்கும் பயப்பிட வேண்டாம் பாருங்கோ.அடுத்த மாதம் எண்டாலும் முதல் சனி 01 மணியிலிருந்து 02 மணிவரை சுபமுகூர்த்தம் தம்பி .

நபர்:-(தனக்குள்) என்ன!...என்னைவிடஐயாவுக்கேல்லோ அவசரமாயிருக்கு!

v புத்திசாலிகள்
சீதா: பாத்தியாடி!இந்தமாதம் ஷொப்பிங்கிலை ஒரு டொலர் மிச்சம் பிடிச்சிருகேனே!
மாதா:எப்பிடியடி?

சீதா:இந்தமாதம் நாலு முறை ஷொப்பிங் போயிருந்தேன் .ஒருமுறையும் 25 சதம் போட்டு ஷொப்பிங் கார்ட் எடுக்கவில்லையே!
மாதா:ஊகூம்.இது என்ன சேவிங்.நான் ஷொப்பிங் செய்யும்போது காசே செலவில்லையே!

சீதா: எப்பிடியடி?
மாதா:எல்லாத்தையும் கிரடிக்ட் கார்ட் பார்த்துக்கொள்ளுதே

0 comments:

Post a Comment