ஒளிர்வு -05


புதுக்கவி:-நாம் தமிழர்
காலையில்
டொரோண்டோ நகர வீதிகளில்
போத்துக்கீசனைக்   கண்டால்
போம்ஜிய என்போம்
சீனனைக்   கண்டால்
சவான் என்போம்
இந்தியனைக்   கண்டால்
அச்சாசுத என்போம்
பிறேஞ்சுக்காரனைக்   கண்டால்
பொன்ஜோ என்போம்
இத்தாலிக்காரனைக்   கண்டால்
பொன்ஜோர்னோ என்போம்
ஆங்கிலேயனைக்   கண்டால்
குட்மோர்னிங் என்போம்
ஆனால்
தமிழனைக்   கண்டால்
தரை பார்த்து  நழுவுவோம்.
                                                                       -S.MANUVENTHAN 
         நினைவில் ஒரு பழமொழி-ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

4 comments:

  1. புதுக் கவி புதுமையாக இருக்கு

    அன்றாட நிஜ நிகழ்வுகள் கவியானது கண்டு மகிழ்ச்சி. வேற்று மொழியில் வணக்கம் சொல்லவும் கற்றுக்கொண்டோம்

    தங்கள் மொழிப் பற்றையும், சமூக சேவையையும் பாராட்டுகின்றோம்

    அன்புடன்
    கனகரத்தினம்-கனடா

    ReplyDelete
  2. பார்த்தால்,சிரிச்சால் கையோட கடனாய் காசு எல்லோ கேட்கினம்.

    ReplyDelete
  3. ந.இளங்கண்ணன்.
    தீபம் .கொம் மிற்கு நன்றிகள் பாராட்டுக்கள் அத்தோடு வாழ்த்துக்களும்.நாம்தமிழர் கவிதையைப் படித்தேன்.நடைமுறை
    யிலுள்ளதை அப்படியே படம்பிடித்துக் காட்டியுள்ளீர்.நன்றிகள்.வழிதெருவில் யாரும் தமிழரைக் கண்டால் தலையாட்டிச்
    சிரித்து வணக்கம் சொல்லத்தான் விருப்பம்.அப்படிச் சொன்னாலல்லே அடுத்தமுறை காணும்போது கடன்கேட்டுப் போடு
    வார்கள்.கடன்கொடுப்பதில் தவறோண்டும்மில்லை.ஆனால் அது திரும்பக் கிடைக்குமோ கிடைக்காதோ என்று கலங்கி
    நிற்ப்பது யார்.கடன்பட்டார் செஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்றுகம்பன் அன்று சொன்னான் ஆனால்
    இன்றோ கடன் கொடுத்தார் செஞ்சமல்லோ அடிவயிறும் சேந்து கலங்குகிறது
    கனவில் கண்ட பணம் செலவுக்குதவுமா.என்ற கதையையும் படித்தேன் இத்தலையங்கம் எட்டுச் சுரக்காய் கறிக்குதவுமா?
    என்ற பழமொழியில் இருந்து பிறந்ததுபோல் தெரிகிறது.கதைக்கும் தலையங்கத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத்தோன்ற
    வில்லை.தலையங்கத்தை விழலுக்கு இறைத்த நீர் போல.என்ற பழமொழியில்இருந்து எடுத்தால் பொருத்தமாய்இருக்கும்
    நன்றி வணக்கம்.
    ஊரின் மைந்தன் ந.இளங்கண்ணன். .

    ReplyDelete
  4. very nice comment

    ReplyDelete