நாம் தமிழர்-(06)

பாருக்குள்ளே பெருவீடு கொண்டிடல் வேண்டும்,
ஊருக்குள்ளே நாலுபேர் பேசிடல் வேண்டும்,அங்கே
சமையல் இல்லாத குசினி வேண்டும்,மேலும்
விருந்தினை நுகராத விருந்தினர் வேண்டும்.
தூரம் ஓடாத ஜீப்பும் வேண்டும்,அதை
நம்பி வாழாத உறவுகள் வேண்டும்.
கொண்டாடி மகிழ்ந்திட ஐயரும் வேண்டும்,அன்று
கடித்து சுவைத்திட இறைச்சியும் வேண்டும்.
முடமே இல்லாத பெற்றோர் வேண்டும்,
ஜடமாய் வாழவர் பழகிடல் வேண்டும்.
குடமாய் குடித்திட மதுவும் வேண்டும்,
கடனே கேளாத  நண்பர்கள் வேண்டும்,
சட்டங்கள் சொல்லாத தமிழீழம் வேண்டும்,அங்கே
பட்டங்கள் மலிந்த கடைகள் வேண்டும்.
அடிக்கொரு ஆலயம் அமைந்திடல் வேண்டும்,அங்கே
அன்னத்தை அளிக்கும் அருளும் வேண்டும்.
-manuventhan

0 comments:

Post a Comment