ஆன்மீகம்:ஒரு கடிதம், ஒரு பதில்.

-ஆலயத்தில் திருட்டு, அது ஆண்டவனின் தவறா?
(மனுவேந்தனின் இ-மெயில் கடிதத்துக்கு குருதேவசித்தனன்தாஜி அவர்களின் பதில்)
   அன்புடையீர்,
உமது கடிதம் கிடைத்தது.உமது இணையத்தளத்தில் எமது கருத்துக்களும் இடம்பெறுவது அறிந்து சந்தோசம்.
மேலும் சில கருத்துக்களை பெறுவதற்காக என்னிடம் பின்வருமாறு கேட்டிருந்தீர்.
"ஆலயங்கள் உடைக்கப்படுகின்ற போது, களவாடப்படுகின்ற போது,ஆண்டவன் ஏன் அவர்களை த்தடுக்கவில்லை?” 
மகனே!
அறிவியலின் வாசனை அறவே அற்ற அந்தக் காலத்தில் அடியெடுத்து வைத்த மனிதன் மண்ணும், மலையும், மரமும்,செடியுமாய் காடே நாடாக காணக் கண்டான். குடும்பம் குடும்பமாய் வாழும் மனிதன், கூட்டம் கூடமாய் வாழ்ந்தான்.உண்பதும்,உறங்குவதும் மட்டுமே செய்துவந்தவன், உற்றுநோக்க ஆரம்பித்தான்.இடி-மழை-மின்னல் இவைதான், ஆறாம் அறிவிற்கு அப்பாற்ப்பட்டவற்றைக் கடவுள் என்றுக் காட்டியது.
அறிவுக்கு எட்டாதவற்றை அடுத்தவருக்கு எடுத்துச் சொல்வதற்காகக் கடவுளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டது.கடவுள் என்றக் கருவை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக மனிதர்கள் ஏற்படுத்திய எண்ணங்களின் வெளிப்பாடே மதங்கள் ஆயிற்று.
கடவுள் ஒருவன்.நிகரற்றவன்,எந்தவொரு தேவையுமற்றவன். மெய்ப்பொருள் ஒன்றுதான்.அதை மனிதர்கள் பலபெயரிட்டு அழைக்கின்றனர்.அவனுக்கு அரிதாரம் பூசி அவதாரம் என்று சொன்னவன் மனிதன்.ஒருவனை பல கடவுள் ஆக்கியவன் மனிதன்.விதம் விதமாய் பெயர்வைத்தவன் மனிதன்.அழகழகாய் ஆலயங்களை அமைத்தவன் மனிதன்.உருவமற்றவனை எண்ணி வணங்கிட மனிதனுக்கு உருவம் தேவைப்பட்டது.உருவாக்கினான். மேலும் அதனை வைத்து வணங்கிட அமைதியான (ஆனால் இக்காலத்தில் அமைதியான ஆலயங்களைக்   காண்பது முயற் கொம்பாகிவிட்டது)இடம் தேவைப்பட்டது. ஆலயத்தை அமைத்தான்.இவை எல்லாம் மனிதன் தனது தேவைகளுக்காக உருவாக்கினான்.அவனே கட்டினான். அவனே உடைத்தான். அவனே திருடினான். மனிதனால் கடவுளை எதுவும் செய்து விட முடியாது.  உலகில் பல பாகங்களில் பல கொள்ளைகள்,அழிவுகள் மனிதரால் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.அதேபோலவே இந்த மனிதர்  அமைத்த மனிதரின் ஆலயங்களும் மனிதரால் தாக்கமடைவது (சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் தடுக்கப்படவேண்டிய விடயமாக இருந்தாலும்) அவை  குறித்து வித்தியாசமாக நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என நம்புவோம்.
                                    .நன்றி.

2 comments:

  1. ந,இளங்கண்ணன்.
    ஆலயங்களை உடைக்கும் போதும் ஆலய உடைமைகளைத் திருடும் போதும் ஆண்டவன் ஏன்அதைத் தடுப்பதில்லை?
    நல்லதும் அவசியமுமான கேள்வியும் அருமையான பதிலும்.இரண்டொரு மாதத்திற்கு முன் பனிப்புலம்.கொம் முலமும்
    பனிப்புலம்.நெட் முலமும் இதே கேள்வியையும் கேட்டு இதேமாதிரி தான் பதிலும் கொடுத்திருந்தேன்.என்ன உதாரணத்துக்கு
    நடைமுறையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டிருந்தேன்.ஆனால் ஒண்டு ஒன்றை மணித்தியாலத்துக்கு
    மேல் நிற்கவில்லை. விக்கிரகங்கள் மீது அலாதிப் பக்திகொண்ட பக்தர்கள் சிலரின் வற்ப்புறுத்தளினால் உடனேயே தூக்கி
    விட்டார்கள்.இதே பதிலை 30 -35 வருடங்களுக்கு முன் ஒருதிரைப்படக் கவிஞ்ஞன் ஒருபாடலில் "அழுவதைக் கேக்க ஆக்களும்
    இல்லை ஆறுதல் சொல்ல யாருமே இல்லை ஏழைகள் வாழ்வில் நிம்மதி இலை ஆலயம் எதுகிலும் ஆண்டவன் இல்லை"என்று
    கேக்கவாபோறோம் இல்லை கேட்டுத் திருந்தவா போறோம் இல்லவேயில்லை.எல்லாம் அவன் விட்ட வழி.
    ந.இளங்கண்ணன்.

    ReplyDelete
  2. ந,இளங்கண்ணன்.