நீங்களும் சிரிக்கலாம்:


மிக சமீபத்தில் எனக்கு வந்த ஒரு மின் அஞ்சலை படிக்கும்போதே சிரிப்பூட்டியது . அந்த மின் அஞ்சல் உங்களுக்காகவும்...!

கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வே, வா சேர்ந்து சாப்பிடலாம்!
மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.
இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?
மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க
கணவன்: அவ்ளோதானா?
மனைவி: முடியலைங்க!
இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

கணவன்: என்னம்மா.சாப்பிடலாமா?
மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம்
பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!
இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.
எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?
மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யணுமா?
இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.
முட்டையைக் கலக்கக் கூட இல்லை அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?
மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்னசெய்ய? சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!
இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க.நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?
மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.
ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!
இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒண்ணும் செய்யலையா?
மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,
முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!
இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?
மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா?
எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!
இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!

                             -m.பாஸ்கர் அவர்களுக்கு நன்றி 


0 comments:

Post a Comment