கணணி நுட்பம்

கண்ணாடியில்லாமல் வாசிக்கப் பழக்கும் அரிய மென்பொருள்!
iPhone மற்றும் கணினியைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவழிப்பது ஒருவரது கண்களைப்  பழுதாக்குகின்றன என்று தான் பொதுவாகக் கூறப்படும். ஆனால் அவை ஒருவரது கண்களின் பார்வையை முன்னேற்றுகின்றன என்று கூறப்படுவது புதிய விடயந்தான். நடுத்தர வயதானவர்களின் பார்வையை இன்னும் 10 வயது குறைத்து நன்றாகத் தோற்றமளிக்கச் செய்யும் ஒரு மூளைப்பயிற்சி மென்பொருளாக இது இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கண்ணாடி பயன்படுத்தி வாசிப்பவர்களால் அதன் பாவனையைக் குறைக்க முடியும் என்று கூறுகின்றனர்.

GlassesOff என்ற மென்பொருளின் பரீட்சார்த்தமானது அதிசயிக்கத்தக்க விளைவுகளைத் தந்துள்ளது என நம்பப்படுகிறது. பயிற்சியின் பின்னர் கண்ணாடி பயன்படுத்துபவர்களால் 2 வரிகளுக்கும் மேலாகக் கண்ணாடியில்லாமல் வாசிக்கமுடிகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மென்பொருள் அடுத்த வருடத்தின் முற்பகுதியில் வெளிவிடப்படவுள்ளது. ஆரம்பத்தில் கையடக்கத் தொலைபேசி மென்பொருளாகவே வருமென்றும் அதன்பின்னரே கணினிகளுக்கென இவை வெளியிடப்படும் என்றும் கூறப்படுகின்றது. இந்த மென்பொருள் அமெரிக்க நிறுவனமான Ucansi இனால் உருவாக்கப்படுகின்றது. இது மூளையைத் தூண்டிவிடுகின்றது. இதில் முதலில் ஒரு சாம்பல்நிறத் திரையைப் பார்க்கலாம். அதில் ஒரு வெள்ளை வட்டம் இருக்கும். அடுத்து விரைவாகப் பல இடங்களில் பல விம்பங்கள் தோன்றும். இவற்றில் சில வெற்றிடமாகவும் சில கலங்கலான கோட்டுவடிவங்களாகவும் இருக்கும். இதன் இலக்கு வெற்றிடமான விம்பங்களைத் தெரிந்தெடுத்து அந்த வட்டத்தில் வைப்பதுதான்.

ஒருவர் நன்றாகச் செயற்படச் செயற்பட இப்பணி வேகமாகவும் சிரமமானதாகவும் மாறும். கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்தப் பரீட்சார்த்தத்தில் சராசரி 51 வயதானவர்கள் 40 பாடங்களில் பங்குபற்றினார்கள். முதல் 3 மாதங்களுக்கும் இதன் விலை 60 பவுண்களாக இருக்கும் என அந் நிறுவனம் கூறுகிறது. இந்நிலையில் வாரத்தில் 3 தடவைகள் 15 நிமிடங்களிற்கு ஒரு வாடிக்கையாளர் பயிற்சியளிக்கப்படுவார். அதன்பின்னர் இதன் கட்டணம் மாதாந்தமாக இருக்கும். பிரித்தானியர்கள் வழமையாக ஒரு வருடத்தில் கட்பார்வை உற்பத்திகளுக்காக 2.7 பில்லியன் பவுண்களைச் செலவழிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment