தொழில்நுட்பம்:


பறக்கும் கார்:இன்று நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வடிக்க்கையான ஒன்றுஅதனால் மனிதன் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய படைப்புகளை படைத்து வருகின்றான்.
 இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது தீர்வு காணப்பட்டு விட்டது. கார் வீதியில் போய்க் கொண்டிருக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு button அழுத்தியதும் கார் மேலே பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2 சீட்டுக்களுடன் உருவாக்கப்பட்ட கார் 12000 அடி உயரம் வரை பறக்கும் தன்மை கொண்டது.
18 விதமான பணிகளை செய்யும் ரோபோ:தொழில்நுட்ப உலகில் புதிய புதிய கண்டுபிடுப்புகளை படைத்தது வருகின்றோம்அந்த வகையில் புதியதாக ரோபோ ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 18 விதமான வரவேற்பு வேலைகளை புரியவல்ல.
 இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்படும் இந்த நவீன ரோபோக்கள் கைப்பேசி அழைப்புக்களுக்கு விடையளித்தல், உங்களுடைய luggage-களை தூக்கி செல்லுதல் உட்பட 18 விதமான வேலைகளை செய்யவல்லது.
Bluetooth பெயர் காரணம்:இன்று பலர் Bluetooth உபயோகிக்கிறோம்  Bluetooth தொழில்நுட்பம் செயல்படும் விதத்திற்கும் இந்த பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் Denmark, Sweeden, Norway மற்றும் Finland நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.
 இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற Denmark அரசர் ஹெரால்ட் புளுடூத் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது. அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர்.
 இவர் 900 ஆண்டில் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும், Norway நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார். பின்னர் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்.
36 மில்லியன் முகங்களை ஒரே second-ல் கண்டறியும் மென்பொருள்:இன்றைய உலகத்தில் தீவிரவாதம் அதிகரித்து வருகின்றதுஆகவே பலர் பல புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி அதனை தடுக்க முயன்று வருகின்றனர்.   அந்த வகையில் surveillance camera மூலம் 36 மில்லியன் முகங்களை ஒரே second-ல் கண்டறியும் ஒரு சிறந்த மென்பொருளைக் கொண்ட கருவி (system) உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மென்பொருள் பொறியியளாளர்களால் உருவாக்கப்பட்ட இம்மென்பொருள் பாதுகாப்புத்துறையில் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 Hitachi Kokusai என்ற இந்த முறைமை மூலம் உலகெங்கிலுமுள்ளவர்களின் முகங்களை உடனுக்கு உடன் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள camera இடது, வலது பக்கங்களிலும் 30 டிகிரிக்குள் உள்ளவர்களை மட்டும் துல்லியமாக scan செய்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இம் முறைமையானது அடுத்த வருடம் முதல் விற்பனைக்கு வருகின்றது.
Nano Washing Machine:நம் ஆடைகளை எளிதாக சுத்தம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட சலவை இயந்திரம் தற்போது மிகச்சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பை வைடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 180 கிராம் எடையை கொண்டுள்ள இந்த சலவை இயந்திரமானது எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடுயும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
 ஓரே தடவையில் 2 தொடக்கம் 3 லீட்டர் வரையிலான நீரை பயன்படுத்த முடிவதுடன் சலவை தூள்கள் போன்றனவற்றை பயன்படுத்தி 20-40 நிமிடங்களில் சலவை செய்ய முடியும். இவை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் சந்தைப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் iPhone Struck ஆகிவிட்டதா? :இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் விரும்புவது இந்த ஐபோன்தான். விலை கூடுதலாக இருப்பினும் ஐபோன் வைத்திருப்பது ஒரு ஸ்டைலாக, கவுரவமாகவே நினைக்கிறார்கள்.
 எப்படியாவது ஒரு iPhone- வாங்கி கையில் வைத்துக்கொண்டால் தான் தூக்கமே வருகிறது. "kidny" விற்றுகூட iPhone வாங்கிய சம்பவம் நடந்ததுண்டு. இப்படி iPhone மோகம் இளைஞர்களின் மத்தியில் பரவி வருகிறது.
 இப்படி வாங்கிய ஐபோன்கள் சிலசமயம் சாதாரண போன்களைப் போன்ற தொல்லைகள் கொடுப்பது உண்டு. சில வேளைகளில் இவை அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். பிற சாதாரண போன்களென்றால்(Ordinary mobile phones) அவற்றிலுள்ள Battery ஒரு முறை நீக்கிவிட்டு பிறகு போட்டு On செய்தால் அவை சரியாகிவிடும்.

ஆனால் இந்த ஐபோன் இத்தகைய பிரச்னை ஏற்படும்போது எப்படி சரிசெய்வது? - (how to solve this problem?)
 முதலில் உங்கள் iPhone Switch Off செய்யவும். பிறகு On செய்து பாருங்கள்.
 இவ்வாறு செய்யும்போதே பிரச்னை சரியாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.. அப்படியும் சரியாகவில்லையென்றால், Apple company பரிந்துரைக்கும் மற்றொரு வழிமுறை இது.
 ஒரே நேரத்தில் உங்கள் iPhone ன் மேலுள்ள Sleep button -யும் கீழிருக்கும் Home Button-யும் அழுத்திப் பிடியுங்கள்.
 ◦இப்போது உங்கள் ஐபோன் Switch off ஆகும். தொடர்ந்து அழுத்திப் பிடித்துக்கொண்டிருக்கும்போது திரையில் மீண்டும் ஐபோன் லோகோ வரும்.
 ◦இந்த நிலை வரும்வரை இரண்டு பட்டன்களையும் ஒரே அழுத்திப்பிடிக்க வேண்டும். இப்போது உங்கள் ஐபோன் நிச்சயம் தடங்கலின்றி வேலை செய்யும்.

1 comments:

  1. தீபம் நவீன தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பற்றி முன்கூறியமையைக் காண்க:

    பறக்கும் கார்: தீபம் 2011 தை மாத ஒளிர்வு

    ஆயுள் நீடிப்பு: தீபம் 2011 பங்குனி ஒளிர்வு

    ReplyDelete