ஆராய்ச்சியாளரின்செய்திகள்:

“ஓம்” பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி: ஓம் என உச்சரிப்பதால்  ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனத்தின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்! இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் டிரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (wavelet transforms, time-frequency analysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர். ஓம் என உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில் மாறுதல் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது.மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது உடலின் தன்மை,சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறு குடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புகளையும் இணைத்து நன்மையை நல்குகிறது என்கின்றனர் அவர்கள்.
பெற்றோருடன் குழந்தைகள்:பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், குண்டாவதில்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், பெற்றொருடன் இல்லாமல், தனியாக உறங்கும் குழந்தைகள் குண்டாவதாக கூறுகின்றனர்.

இதற்கு காரணம், பெற்றோர்கள் உடன் உறங்கும் குழந்தைகள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்.
இதனால், தொந்தரவின்றி அமைதியான தூக்கம் கிடைக்கிறது.
ஆனால், தொந்தரவான உறக்கம் உடல்பெருக்கத்துடன் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதாவது, தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களை பாதித்து உடல்பெருக்கத்தை தூண்டும் என்கிறார்கள்.
இதுக்குறித்து டென்மார்க் நாட்டில் 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்தனர்.
அவர்களில் பெற்றொருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட தனியாக படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
          இந்த ஆய்வு தரும் முடிவுகள் என்னவென்றால், பெற்றொர் அரவணைப்புடன், இரவில் உறங்கும்போது தம்முடன் குழந்தைகள் உறங்கவைத்தால், அந்த குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படும் அதுமட்டுமல்லாமல், உடல்பெருக்கத்தையும் தடுக்க முடியும் என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான மருத்துவர் நன்னா ஓல்சன்.

மேலும், தங்கள் குழந்தைகளை தங்களுடன் படுத்து கொள்ள அனுமதிக்காத பெற்றோரால் குழந்தைகள் புறக்கணிக்கப்படும் உணர்வுக்கு ஆட்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் ஓவர் வெயிட் ஆகவும் வாய்ப்புள்ளது.
பெற்றொர்களே இனியாவது குழந்தைகளை உங்கள் அரவணைப்பில் உறங்க வையுங்கள்.
உயரமான பெண்களுக்கு: ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் உயரமான பெண்களுக்கு கருப்பை புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுதும் நடத்திய ஆவுகளின் முடிவுகளின் படி அவர்கள் இந்த முடிவை எட்டியதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அந்த பெண்கள் ஹார்மோன் மாற்று சிகிச்சை பெற்றார்களா என்பதைப் பொறுத்து முடிவுகள் அமையும் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ப்ளாஸ் மெடிசின் என்ற பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருவக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகள் அலசப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் கருவக புற்று நோய் உள்ள 25,000 பெண்களும், கருவக புற்று நோய் இல்லாத 48,000 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு 5 செமீ உயர வளர்ச்சியிலும் 7% இவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. உதாரணமாக 165 செமீ உயரம் இருப்பவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட 14% அதிக வாய்ப்பிருந்தால், 155 செமீ உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு குறைவாக உள்ளது.

கருவக புற்று நோய் வளர்ச்சியில் பெண்களின் உயரம் என்பதை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள இந்த ஆய்வு முடிவுகள் உதவி புரிவதாக ஆக்ஸ்பர்ட் பலகலை புற்று நோய் ஆய்வாளர் டாக்டர் கில்லியன் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் உயரம் ஏன் கருவக புற்று நோய் ரிஸ்கை அதிகப்படுத்துகிறது என்பதற்கான உண்மையான காரணங்கள் தெரியாவிட்டாலும் சில விளக்கங்கள் கொடுக்க முடியும் என்கிறார் ரீவ்ஸ்.

உதாரணமாக உயரம் அதிகமுள்ள பெண்களுக்கு 'இன்சுலின்' மட்டம் அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்த இன்சுலின் அளவுதான் மற்ற புற்று நோய்களைத் தீர்மானிக்கிறது, உதாரணமாக மார்பக புற்று நோயைக் கூறலாம்.

அல்லது உயரம் அதிகம் இருப்பதால் செல்களின் எண்ணிக்கை அதிகமாகும் நடைமுறையில் புற்று நோய் செல் உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகமுள்ளது, ஆனாலும் எதிர்கால ஆய்வுகள்தான் இதனை தீர்மானிக்கவேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
மூளைப் புற்றுநோய் :மூளைப் புற்றுநோய் கட்டிகளை உடைப்பதில் வைட்டமின் சி பெரும் பங்கு வகிக்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஒடேகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் குழு டாக்டர் பட்ரீஸ் ஹெர்ஸ்ட் தலைமையில் இந்த ஆய்வை மேற்கொண்டது.
மிக அதிக அளவில் வைட்டமின் சி கொடுக்கப்பட்டால் நோயாளியின் புற்றுக்கட்டிகள் உடையத் தொடங்குகின்றன என்றும் அப்போது ரேடியேஷன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை முறையைக் கையாண்டால் அதிக பலன் ஏற்படுகிறது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வைட்டமின் "சி' அதிக டோஸ் செலுத்த ஊசிதான் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆய்வில் மேலும் சில படிகளைக் கடந்த பிறகு புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் கிடைப்பது அதிகமாகும் என்று மருத்துவ உலகம் மகிழ்கிறது.

0 comments:

Post a Comment