பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை


                        மலேசியா
Malaysia Mapமலேசியா (Malaysia) தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு முடியாட்சி நாடு. இந்த நாடு தீபகற்ப மலேசியா அல்லது மேற்கு மலேசியா என்றும், கிழக்கு மலேசியா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவை, மலேசிய போர்னியோ என்று அழைப்பதும் உண்டு. மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றுடன் மூன்று கூட்டரசு மா மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர்.
மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் மலாய் மக்கள் பெரும்பான்மையானவர். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள். இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாமே மலேசியாவின் தேசிய சமயமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும்.
1957 ஆகஸ்ட் 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963 ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது.
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவாரியான இந்தியர்கள் மலேசியாவுக்கு பிரித்தானியர்களால் தோட்ட வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர். இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர்.
மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன.மலேசியாவின் அதிகாரபூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். ஆங்கிலம் இரண்டாவது மொழியாக தொடர்ந்து உள்ளது. மேங்கிலிசும் வணிகத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேங்கிலிசு என்பது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகும்.
மலேசியாவில் பரவலாக விளையாடப்படுபவையாக காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிசு, ஸ்குவாஷ், போர்க் கலை, குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம், மற்றும் ஸ்கேட் பலகையோட்டம் ஆகியன உள்ளன.இறகுப்பந்தாட்ட போட்டிகள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன.
மலேசியாவின் ஆற்றல் உற்பத்தி பாறைநெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியே உள்ளது. 16 சதவீதம் நீர்மின்நிலையங்கள் மூலமும் மற்ற 84 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மலேசியா பொதுவாக திறநிலை மற்றும் அரசுசார் பொருளாதார நாடாகவும் புதியதாக தொழில்மயமான சந்தைப் பொருளாதார நாடாகவும் விளங்குகிறது.பொருளியல் செயல்பாடுகளில் பேரளவு பொருளாதாரத் திட்டங்கள் மூலம் முக்கிய பங்காற்றும் அரசு தனது பங்காற்றலை படிப்படியாக குறைத்து வருகிறது. ஆசிய நாடுகளில் சிறந்த பொருளியல் தரவுக்கூற்றுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ள மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1957 முதல் 2005 வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 6.5 % உயர்ந்து வந்துள்ளது.2010இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்க டாலரில் $414,400 பில்லியனாக இருந்தது; இது ஆசியான் நாடுகளில் 3வது மிகப்பெரிய மதிப்பாகும்.உலகளவில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 29வதாக உள்ளது.

0 comments:

Post a Comment