அறிவியல்


கண்ணினைக் காக்க
:அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும். கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது.

கண்ணில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆனால், அந்தக் கண்ணுக்கு, நாம் ஏதாவது நல்லது செய்கிறோமா? இல்லை. பார்வையில் ஏதாவது சிக்கல் ஏற்படும் போது மட்டும் தான், கண்ணைப் பற்றி நாம் அக்கறை கொள்கிறோம். கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.
அதற்கு சில ஆலோசனைகள்:
* காலையில், சூரிய உதயத்துக்கு முன், எழுந்து கொள்ளுங்கள். வாய் நிறைய தண்ணீரை நிரப்பி, கண்களை இறுக்கி மூடிக் கொள்ளுங்கள். 15 நிமிடத்திற்கு, கைகளால் தண்ணீரை, கண்களில் அடித்துக் கொள்ளுங்கள். தண்ணீர், சூடாகவும் இருக்கக் கூடாது; குளிர்ச்சியாகவும் இருக்கக் கூடாது.
* வெயிலில் அதிக நேரம் நின்றிருந்த பிறகு, உடனே கண்களைக் கழுவக் கூடாது. நீங்கள் நிற்கும் இடத்தின் வெப்ப நிலைக்கேற்ப, உடல் ஆசுவாசப்பட்ட பிறகே, கண்ணையும், முகத்தையும், தண்ணீரால் கழுவலாம்.
* தூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும் பொருட்டு, அதிக நேரம் அதை உற்றுப் பார்க்காதீர்கள். கண்களுக்குத் தேவை யான அளவு, கண் சிமிட்டுவது அவசியம்.
* கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது.
* அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும்.
* இரவு அதிக நேரம் கண் விழித்திருத்தல், சூரிய உதயத்துக்குப் பின்னும் தூங்கிக் கிடத்தல் ஆகியவை, கண்ணுக்கு ஊறு விளைவிக்கும்.
* தூசி, புகை, அதிக சூரிய வெளிச்சம், அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாப்பது அவசியம்.
* கண்ணை மேல், கீழ், பக்கவாட்டுகளில், நாளொன்றுக்கு 10 முறை அசைத்து, பயிற்சி செய்தால், கண் தெளிவாக இருக்கும். 10 முறை, கண்ணைச் சுழற்றவும் வேண்டும்.
* கண்ணுக்கு அதிகம் வேலை கொடுக்கும் சமயங்களில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், இடையில், ஐந்து நிமிடம், உள்ளங்கையால், இரு கண்ணையும் மூடியபடி அமர்ந்து, கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
* ஒரு ஸ்பூன் திரிபலா சூர்ணத்தில், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். காலையில், தண்ணீரை வடிகட்டி எடுத்து, அந்தத் தண்ணீர் மூலம் கண்ணைக் கழுவினால், கண் பிரகாசமாக இருக்கும்.
* குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகி யவை, கண்ணையும் பதம் பார்க்கக் கூடியவை. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை, உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், கண் பார்வை, தெளிவாக இருக்கும்.

கண்ணுக்கு மையழகு!

* பன்னீரில், விளக்கெண்ணெயை கலந்து, பஞ்சில் தோய்த்து, கண் மீது வைத்து, 15 நிமிடம் ஊற வேண்டும். கண் எரிச்சல் மறையும்.
* வடிகட்டிய டீ தண்ணீரில், பஞ்சைத் தோய்த்து கண்ணில் வைத்தாலும், கண்ணுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
* கரிசலாங்கண்ணிக் கீரையில் தயாரித்த மை, கண்ணுக்கு, அழகும், குளிர்ச்சியும் சேர்க்கும்.
* கண்ணை மூடியபடி, வெள்ளரிச் சாறால், கண்ணைக் கழுவலாம்; பஞ்சில் தோய்த்தும், 10 நிமிடம் கண் மீது வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
* தக்காளிச் சதை, மஞ்சள் பொடி, எலுமிச்சை சாறு, கடலை மாவு ஆகியவற்றை, பசை போல கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள கரு வளையத்தின் மீது பரப்பி, இரண்டு மணி நேரம் ஊறலாம். தூங்கும் நேரத்தில் செய்தால், உங்களுக்கு வசதி. வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வர, கரு வளையம் மறையும்.
தீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலைக்குள் நுழைவது எப்படி?
தீயணைப்புப் படையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உடையே பயன்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் எளிதில் தீப்பிடிக்காது என்பதை நாம் அறிவோம். இதே ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) கொண்டுதான் தீயணைப்பு வீரர்களின் உடை தயாரிக்கப்படுகிறது.
இவ்வுடையின் மேல் சில்வர் பூச்சுக் கொடுக்கப்படுவதால் தகிக்கும் வெப்பம், ‘தீஎதிரொளிப்பதின் மூலம் தடுக்கப்படுகிறது. இப்படியாக பெரும் தீக்குள் எந்தவிதத் தடுப்புமில்லாமல் சென்று ஆபத்தில் உள்ளோரைக் காக்க முடிகிறது.
தீ சூழும்போது ஆக்சிஜன் குறைந்து இணி2 அதிகரிப்பதால் மூச்சு விட சிரமம் ஏற்படும். இதனால் இம்மாதிரி உடைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டரும் தயாரிக்கப்படுகிறது.
 மழை பெய்யும் போது சில வேளைகளில் மழைத்துளிகளோடு, ஐஸ் கட்டிகளும் விழுகின்றதே, ஏன்?:ஆங்கிலத்தில்ஹெயில் ஸ்டோன்ஸ்என இந்த ஆலங்கட்டி மழையை அழைப்பார்கள். மழைத்துளிகள் ஈர நைப்பான மேக அடுக்குகளில் மேல் நோக்கி உந்தப்படும்போது, இப்படி ஆலங்கட்டிகளாக மாறுகின்றன.மழைத்துளிகளாக உருவாகி கீழே விழும் நிலையில் கீழே விழாமல் தொடர்ந்து, இவற்றை மேல் நோக்கித் தள்ளப்படும்போது, இத்துளிகளைச் சுற்றி புதிய ஈரம் (நைப்பு) மூடிக்கொள்ள இது கெட்டியாகி விடுகிறது.
பெரிய ஆலங்கட்டியை இரண்டாகப் பிளந்து ஆராய்ந்தால் பல அடுக்குகளைக் காணலாம். ஆலங்கட்டிகள் உருண்டையாகத்தான் இருக்கும். பனித்துகள் (ஸ்ரோஃப்ளேக்ஸ்) எப்போதும் அறுகோணப் படிகங்களாகக் காணப்படும். மாரிகாலத்தில் பனிமழை பெய்யும். ஆனால் ஆலங்கட்டி மழை வருஷத்தில் எந்தப் பருவத்திலும் பெய்யலாம்.
பால் காய்ச்சுவது எப்படி?: பாலைப் பலமுறை சுட வைப்பது மிக மிகத் தவறான பழக்கம்.
காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேலாக நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும்.
கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண்தான்.
பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும் உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.
இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய்யப்பட்ட பின்தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.
பாலைக் காய்ச்சியதும் குடித்து விடவேண்டும். பாலை ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். பொதுவாக, எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சுடவைக்க வேண்டாம்.
ஒருமுறை பாலைக் காய்ச்சியபின்,நன்றாக ஆற வைத்து அதை பிரிட்ஜில் வைக்கலாம். காபி, டீ எனத் தயார் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்துத் தயார் செய்யலாம்.
இனியாவது பால் காய்ச்சும் போது சத்துக்களை அழித்துவிடாமல் ஒழுங்காக பால் காய்ச்சலாம்.

0 comments:

Post a Comment