பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை


ஐக்கிய இராச்சியம்(UK)
ஐக்கிய இராச்சியம் (United Kingdom, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது பொதுநலவாய நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக ஐக்கிய இராச்சியம் என்றோ UK அல்லது பிரித்தானியா (Britain) என்றோ (தவறுதலாக) பெரிய பிரித்தானியா என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பெரிய பிரித்தானியத் தீவில் உள்ளன. நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். ஐ. இ. உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது.
"பெரிய பிரித்தானியா" அல்லது "பிரித்தானியா" என்பது பிரித்தானியத் தீவுகளிலேயே மிகப் பெரிதான தீவின் புவியியல் பெயராகும். அரசியல் ரீதியில், பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும்.

கொட்லாந்தும் இங்கிலாந்தும் 10ம் நூற்றாண்டிலிருந்து தனித்தனி அமைப்புகளாக இயங்கி வந்துள்ளன. 1284ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழிருந்த வேல்ஸ், ஒன்றியச் சட்டங்கள் 1536 - 1543 வாயிலாக இங்கிலாந்து இராச்சியத்துடன் இணைந்தது. 1603 முதல் ஒரே மன்னரைக் கொண்ட தனித்தனி இராச்சியங்களான இங்கிலாந்தும் கொட்லாந்தும் ஒன்றியச் சட்டம் 1707 வாயிலாக ஒரு நிரந்தர ஒன்றியமாக இணைந்தன, பெரிய பிரித்தானியாவின் இராச்சியமாக. இது நடந்த நேரத்தில் கொட்லாந்து பொருளாதாரச் சீரழிவை எதிர்நோக்கியிருந்தது. இங்கிலாந்துடனான ஒருங்கிணைப்பு கொட்லாந்து மக்களின் பரவலான எதிர்ப்பைப் பெற்றது. 1169ஆம் ஆண்டிலிருந்து 1691ஆம் ஆண்டு வரை படிப்படியாக ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்ட அயர்லாந்து இராச்சியம், ஒன்றியச் சட்டம் 1800 வாயிலாக பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன் இணைந்ததால், பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் உருவானது. இதுவும் ஐரிய மக்களின் விருப்பமின்றியே நடைபெற்றவொரு ஒருங்கிணைப்பாகும். இதற்கு சற்று முன்னரே, 1798ஆம் ஆண்டில் ஐக்கிய ஐரிய மக்களின் புரட்சி வெடித்துத் தோல்வியடைந்திருந்தது. (பார்க்க: ஐக்கிய ஐரிய மக்கள் சமூகம்). நெப்போலிய மன்னனின் போர்த் தொடுப்புகளால் எழுந்த பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி, இந்த ஒருங்கிணைப்புச் செயல் விரைவு படுத்தப்பட்டது. 1922ஆம் ஆண்டு நிகழ்ந்த கடும் போரைத் தொடர்ந்து ஆங்கில - ஐரிய ஒப்பந்தம் ஏற்பட்டு, அயர்லாந்து தீவு ஐரிய சுதந்திர நாடு மற்றும் வடக்கு அயர்லாந்து என்று பிரிவடைந்து, பின்னது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தது. ஒப்பந்தத்தில் முடிவானபடி ஐரிஷ் மாகாணமான அல்ஸ்டரிலுள்ள ஒன்பது வட்டாரங்களில் ஆறு வட்டாரங்கள் ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தன. இங்கு வாழும் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40% உள்ளவர்கள் சுதந்திர அயர்லாந்துடன் ஒருங்கிணைய விரும்புகின்றனர். 1927ஆம் ஆண்டு அயர்லாந்தின் பெரும்பகுதியின் வெளியேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் பெயர் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் என மாற்றப் பட்டது.

0 comments:

Post a comment