பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை


இலங்கை
v  இலங்கையின் மறுபெயர்கள் ஈழம்,இலங்காபுரி,லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம், சின்மோன்டு, சேலான், தப்ரபேன், செரெண்டிப்.
v  அன்னியர் ஆதிக்கம், போர்த்துக்கீசர்-1597, ஒல்லாந்தர்-1796, ஆங்கிலேயர்-1801.
v  பிறநாட்டு வழமைகளுக்கு மாறாக இலங்கையில்  மட்டுமே  நிர்வாக சேவைகள் நேரடி அரச கட்டுப்பாட்டில் உள்ளன.
v  இந்தியாவும் இலங்கையும் என்றும் பிரிந்திருக்காமல் கடல்மட்ட ஏற்ற தாழ்வுகளைப் பொருத்து சேர்ந்தும் பிரிந்தும் இருக்கின்றன. அதன் விவரம்,
Ø  சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
Ø  சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.
Ø  சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின்கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன.
v  இலங்கையில் அதி உயர்ந்த மலை, 2,524 மீட்டர் உயரம் கொண்ட பீதுறுதாலகாலமலை.
v  இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி பம்பரகந்த.
v  இலங்கையில் அதிகம் மழை பெறும் இடம் வட்டவளை.
v  இயற்கை வளங்கள்: சுண்ணாம்புக் கல், காரீயம், கனிம மணல்கள், இரத்தினங்கள், பொஸ்பேற்றுகள், களி, நீர் மின்சாரம்
v  இலங்கையின் சிங்களவர் மொத்த சனத்தொகையில் 74%மாக உள்ளனர். நாட்டின் சனத்தொகையில்18% தமிழர்உள்ளார்கள். இலங்கையின் இதர இனங்களாக சோனகர் (அராபியர், மலாயர்களின் வழிதோன்றல்கள் 7%), பறங்கியர் (ஐரோபிய வழிதோன்றல்கள் 1%), வேடர்கள் (காட்டு வாசிகள் 0.1%) உள்ளனர்.
v  இலங்கையின்  பௌத்தம் (69%), இந்து சமயம் (18%) இஸ்லாம் (12%) , கிறிஸ்தவம் 5% (கத்தோலிகம் 2%, மறுசீரமைப்புக்கிறித்தவம் 0.5%), ஆகவும் உள்ளது.
v  சுதந்திரமடைந்த போது இலங்கையின் பாதுகாப்பு படைகளில் 70% வீதமானோர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருந்தபோதும் தற்போது அது 2% உள்ளது.
v  வருடத்தில் 25 நாட்கள் அரச விடுமுறைகளை இலங்கை கொண்டுள்ளது.
v  இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து, , 1864 ஆம் ஆண்டு கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் முதலாவது சேவை ஆரம்பிக்கப்பட்டது.
v  உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு.(சிறிமாவோ பண்டாரநாயக்கா)
v  ஆசியாவில் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.
v  முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பை தொடங்கிய நாடு.
v  ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு இலங்கையாகும்.
v  உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு.
v  உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு.
v  உலகின்முதலாவதுவனவிலங்குசரணாலயம்இலங்கையிலேயே அமைக்கப்பட்டது.
v  கிரிக்கட் உலகக் கிண்ணத்தை 1996ஆம் ஆண்டு இலங்கை வென்றெடுத்தது.

0 comments:

Post a Comment