சிரிக்க...!



Ø  என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?
Ø  டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான் .

Ø  நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்
Ø  .அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் .

Ø  டாக்டர் என் மனைவி ஓவரா டி . வி . பாக்குறா
Ø  எந்த அளவுக்கு பாக்குறாங்க ?”
Ø  கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு !!!

Ø  நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க
Ø  அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை …. பத்திரமா இருக்கும்

Ø  உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு .
Ø  நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும் .

Ø  ராமு : நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?
Ø  சோமு : ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

Ø  ராமு : கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?
Ø  சோமு : புருசன் சமயல் பண்ண கத்துக்கிறான்.
Ø  ராமு : பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா.

Ø  எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .
Ø  இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
Ø  நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

Ø  நண்பர் 1 : "பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை ஆனாலும் தள்ளி வச்சுகிட்டே போறாங்க?"
Ø  நண்பர் 2 : "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த முடிக்கணும்னு பெரியவங்க சொன்னத சீரியசா எடுத்துகிட்டாங்க. அதனால இன்னும் 300 பொய் சொன்னப் பிறகு தான் கல்யாணமாம்.

Ø  என்னப்பா சர்வர் மெதுவடைல ஓட்டை இவ்வளவு பெரிசா இருக்கே."
Ø  "நான்தான் சார் தவறுதலா கால் கட்டை விரலால ஓட்டை போட்டுட்டேன்"
   

0 comments:

Post a Comment