தொழில்நுட்பம்


ஆப்பிள் கணினி வன்பொருள்கள் இனி அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும்

Foxxconn எனும் நிறுவனம் தான் Mac, iPhone, iPad, iPod ஆகியவற்றின் வன் பொருள்களை சீனாவில் இருந்து உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. அங்கே வேலைசெய்யும் ஊழியர்கள் அதிக பணிச் சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். மாததோறும் தற்கொலை செய்து சாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இது பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் ஆப்பிள் நிறுவனம் பெரும் தர்மசங்கடதத்திற்கு ஆளாகும். தன் மீது படிந்த இந்தப் பழியைப் போக்கும் விதத்திலும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் விதத்திலும் இனி Mac கனினிகள் அமெரிக்க மண்ணில் இயங்கும் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என ஆப்பிள் நிறுவன முதன்மை செயல் அலுவலர் Tim Cook தெரிவித்துள்ளார்.  இந்தப் பொருள்களில் எந்த விலை விதிதியாசாமும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வளையக்கூடிய திரையுடைய ஸ்மார்ட் போன்கள் : 

CES Samsung Flexible screen 1
சம்சுங் நிறுவனமானது தமது புதிய தொழில்நுட்பமான வளையக் கூடிய திரைகளை உடைய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வருடாந்த இலத்திரனியல் சாதனங்களுக்கான கண்காட்சியின் போதே சம்சுங் தமது புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இக்கண்காட்சியின் போது காகிதத்தின் தடிப்புடன் கூடிய வர்ண மயமான திரையினை சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்தது. எனினும் கடதாசியினை போன்று மடிக்கத் தகுந்த தன்மை இல்லாவிடினும் குழாயினைப் போன்று வளையக்கூடிய தன்மையினை கொண்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தமது எதிர்கால தயாரிப்பின் வீடியோவினை வெளியிட்டுள்ளது சம்சுங் நிறுவனம்.
எனினும் சந்தைக்கு எப்போது வரும் என்பதனை அறிவிக்காத சம்சுங் நிறுவனம் விரைவில் இது தொடர்பான அறிவிப்பினை வெளியிடும் என்று கூறியுள்ளது.

பேட்டரியின் சேமிப்புத்திறனை சேமிக்கும் வழிமுறைகள்

laptop
இலத்திரனியல் சாதனங்களை வாங்கும் பலரது கவலை பேட்டரி. இது ஒரு பெரிய விஷயமா? வாங்கும்போது நீடித்து உழைக்கும் பேட்டரியினை வாங்கினால் போதும் என்று தோன்றும். ஆனால் அதிக தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதால் எவ்வளவு சார்ஜ்செய்தாலும் போதவில்லை என்பது பலரது கவலையாக இருக்கிறது. இதனால் பேட்டரியின் ஆற்றலை சேமிக்க என்ன வசதி என்பதை பார்க்கலாம்.
வைபை மற்றும் ப்ளுடூத் போன்ற வசதிகளை பயன்படுத்தி முடித்த பின்பு, இதை ஆப் செய்து வைத்துக் கொள்வது மிக சிறந்த ஒன்று. அதிக அப்ளிகேஷன்களை டவுண்லோடு செய்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.  சில புதிய அப்ளிகேஷன்கள் டவுண்லோடு செய்யும் போது அதிகம் பயன்படுத்தாத சில அப்ளிகேஷன்களை அகற்றுவது நல்லது. பொழுதுபோக்கிற்காக விளையாட்டுகளை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். ஆனால் விளையாட்டு படங்கள் போன்றவற்றை பார்ப்பதற்காகவே அதிக நேரம் லேப்டாப்கள் பயன்படுத்துவதும் பேட்டரியை பாதிக்கும்.
எக்ஸ்டர்னல் மவுஸ் பயன்படுத்தாமல், லேப்டாப்பில் உள்ள மவுஸை பயன்படுத்துவது சிறந்தது. திரைக்கு அதிக வெளிச்சம் வைத்திருந்தால் அதை குறைக்கவும். இது பேட்டரிக்கும், கண்களுக்கும் சேர்த்து ஆபத்தை கொடுக்கும். தகவல்களை தெளிவாக பார்க்கக்கூடிய அளவு திரை வெளிச்சத்தினை சரியான அளவில் பயன்படுத்துவது கூட பேட்டரியின் ஆற்றலை அதிகப்படுத்த உதவும்.
லேப்டாப்பை ஆப் செய்யும் போது டர்ன் ஆப் ஆப்ஷனை பயன்படுத்துவது சிறந்தது. லேப்டாப் மானிட்டர் சரியாக ஆப் செய்யப்படாவிட்டால் இதன் மூலம் அதிக பேட்டரி வெளியேறும். ஸ்பீக்கர் வால்யூம் அதிகளவில் வைத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
எல்லோரும் செய்யும் முக்கியமான தவறு ஒன்றும் இருக்கிறது. லேப்டாப் சார்ஜரை ப்ளக்கில் போட்டுவிட்டு ஸ்விட்ச் ஆன் செய்த பிறகு அந்த சார்ஜர் ஒயரை லேப்டாப்பில் இணைப்பது மிகவும் தவறானது. இதனால் மின்சாரத்தின் நேரடி பாய்ச்சல் பேட்டரியை எளிதாக தாக்கும் ஆகவே லேப்டாப் சார்ஜரின் ஒயரை லேப்டாப்பிலும், ப்ளக்கிலும் இணைத்துவிட்டு அதன்பின் ஸ்விட்ச்சை ஆன் செய்வது சிறந்தது. இது போன்ற வழிமுறைகளை பயன்படுத்துவதால் லேப்டாப்பின் பேட்டரி ஆற்றலை எளிதாக சேமிக்க முடியும்.




0 comments:

Post a Comment