பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை


 சுவீடன் (Sweden)

அமைவிடம்
:வடக்கு அய்ரோப்பாவில் ஸ்காண்டிநேவியா என்றழைக்கப்படும் பூகோளப் பகுதிதான் சுவீடன் நாடு. நாட்டைச் சுற்றி 24,000 குட்டித் தீவுகள் உள்ளன. இரவில் சூரியன் உதிக்கும் நாடு என்ற பெயர் ஸ்வீடனுக்கு உண்டு. அய்ரோப்பாவில் மூன்றாவது பெரிய நாடு
             வரலாறு: நவீன சுவீடனை உருவாக்கிய ஒன்றாம் முஸ்தாவ் நாட்டின் தேசப்பிதாவாக கருதப்படுகிறார். இரண்டு உலகப் போர்களிலும் நடுநிலை வகித்தது. 1963இல் சுவீடன் ராஜதந்திரி டாக்கா மர்ஸ்க் ஜோல்டு அய்.நா. பொதுச் செயலாளரானார். சுவீயா என்ற பழங்குடி இன மக்களின் பெயராலேயே சுவீடன் என்றழைக்கப்படுகிறது.
           தலைநகர்: ஸ்டாக்ஹோம்(STOCKHOLM)
           மொழி: சுவீடிஷ்
             ஆட்சி: அரசாங்கத்தின் முதல் தலைவர் மன்னர். ஆனால் ஆட்சி செய்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தான். 349 உறுப்பினர்களைக் கொண்டது சுவீடன் பார்லிமெண்ட். மன்னர்: கார்ல் 16 குஸ்டாப் (Carl XVI Gustaf), பிரதமர்: பிரடெரிக் ரீன்பெல்ட் (Fredrik Reinfeldt)
              நாணயம்: சுவிடிஷ் க்ரோனோ
      முக்கிய விளைபொருள்கள்: பார்லி, கோதுமை, சர்க்கரைவள்ளி, மாமிசம், பால்.
             முக்கிய ஏற்றுமதிகள்: இயந்திரப் பொருள்கள், விலங்கினங்கள், காகிதம், இரும்பு, கெமிக்கல்.
       முக்கிய நகரங்கள்: ஸ்டாக்ஹோம், கோதென்பெர்க், மால்மோ, யுப்சாலா, வாஸ்டராஸ், ஒரேபொரோ, லிங்கோபிங்.
       முக்கிய ஆறுகள்: உமே டோம், ஆங்கர்மான், தால். மக்கள் தொகை: 2011 கணக்கெடுப்புப்படி 9,415,295 மக்கள் வாழ்கின்றனர்.
          கல்வி: -1_5 வயது வரை மழலையர் பள்ளி, 6_16 வயதுவரை -நடுநிலைப்பள்ளி, 3 வருட மேல்நிலைப்பள்ளி என மூன்று நிலைகளில் கட்டாயக் கல்வி அளிக்கப்படுகிறது. பழைய மற்றும் பெரிய பல்கலைக்கழகங்கள்: உப்சாலா (Uppsala), லுண்டு (Lund), கோதென்பர்க் (Gothenburg), ஸ்டாக்ஹோம் (Stockholm). இவற்றில் உப்சாலா பல்கலைக்கழகம் 1477இல் நிறுவப்பட்டது.
          விளையாட்டு: கால்பந்தாட்டம், அய்ஸ் ஹாக்கி மற்றும் குதிரை விளையாட்டுகளை பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
        முக்கிய சுற்றுலாத் தளங்கள்: ஸ்டோக்ஹோம், கோதென்பர்க், உப்சாலா, தென்கிழக்குக் கடற்கரை, மால்மோ.

0 comments:

Post a Comment