எங்களையும் வாழ வையுங்கள்?
கடவுளுக்கு பாலாபிசேகம் குடத்தில் என்றாலும் ஒரு குழந்தையின் தொண்டை நனைக்குமோ?!
இதற்கு பகுத்தறிவு தேவை இல்லை சற்று இதயத்தில் ஈரம் இருந்தால் போதும்
எலும்பும் தோலுமாய் வேடம் பூண்டுஎதைச் சாதிக்கப் பிறக்கிறோம்...?
எங்கள் பசிக்குமருந்து கண்டு உயிர் காக்கக் கேட்கவில்லை...
சிறிது உணவு தந்தால்
எங்கேனும் ஓர் ஓரம் (தெருவோரம்) வாழ்ந்திடுவோம்....
நாங்களும் வாழ்ந்திடுவோம்..உணவளித்த மனிதமேஎங்கள் கடவுளாகிப் போவதால்...
உங்கள் கடவுள் தெரிவதில்லை..தெரிந்து கொள்ளவும் தோணவில்லை...
சுருக்கமாய்ச் சொன்னால்நடமாடும் கடவுளை வணங்கும் ஜாதிகளானோம் நாங்கள்...
நாங்கள் இருப்பதும் இறப்பதும் இனி உங்களிடம்...
எங்கள் விதி எழுத வாய்ப்பிருக்கும்கடவுளாகிப் போன மனிதர்களே உங்களிடம்...
உயிர் போகும் நேரத்தில் உங்களிடம் உயிர்ப் பிச்சை கேட்கிறோம்
பசிக்காகக் கையேந்தும் குரல் கேட்கும் போதெல்லாம் இந்த வரிகள் மனச்சலவையாய் வந்துபோகட்டும்...
பிஞ்சு வயிறுகள் பசி ஆறட்டும்...
நாங்கள் கேட்பதெல்லாம் திக்கற்ற எங்களின்உயிரை நாளை வரை தள்ளிப் போட உதவுங்கள்..
………………சதீஸ்குமார்.
கடவுள் கேட்கிறார் :
ReplyDeleteபாலை ஊற்றி என்னை குளிப்பாட்டுராய்
காலை மாலை எனக்கு படைக்கிறாய்
சாலை ஓரத்தில் என் மகன்
மாலை வரை இருக்க தவிக்கிறான் !
பட்டும் பகட்டும் எனக்கு எதற்கடா?
தட்டும் படையலும் எனக்கு எதற்கடா?
கொட்டும் பாலை அவன் குடிக்கட்டும்
சொட்டும் தேன் வயிற்றை நிரப்பட்டும்!
தடல் புடலாக என்னை பூசிக்கிறாய்
கடல் கடந்து யாத்திரை போகிறாய்
குடல் வற்றி அவன் சாகிறான்
உடல் சிதறி அவன் வாடுகிறான்!
எங்கும் என்னை தேடி அலையாதே
இங்கு கொட்டும் பாலை இனி
அங்கு வறியவன் வாயில் கொட்டு
அங்கு அவன் சிரிப்பில் நானே !