சிந்தனைஒளி

பதவி உங்களுக்குப் பெருமை தருவதைவிட நீங்கள் தான் அதைப் பெருமைபடுத்த வேண்டும்.
ஒரேயடியாக உச்சிக்குப் போய்விட வேண்டுமென்று முயற்சிதான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது.
மனிதனுக்கு துணிச்சலைப் போல உலகில் உண்மையான நண்பன் வேறு யாருமில்லை.
உன்னை உண்மையிலேயே புரிந்து கொண்டிருக்கும் நண்பன்தான் உன்னையே உருவாக்குகின்றான்.
தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்பவன்தான் உலகிலேயே மிகச் சிறந்த சீர்திருத்தவாதி.


2 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Sunday, April 14, 2013

    "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்."

    புறநானுறு 75. அரச பாரம்![படியவர்: சோழன் நலங்கிள்ளி]

    "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
    பால்தர வந்த பழவிறல் தாயம்
    எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக்
    குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
    5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!
    மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
    விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர்
    அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
    என்றூழ் வாடுவறல் போல நன்றும்
    10 நொய்தால் அம்ம தானே; மையற்று
    விசும்புஉற ஓங்கிய வெண்குடை
    முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே,"

    பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க ,பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை .அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை /பெருமை வருகிறது .ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான்.

    "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது"

    .உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்!

    இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது.

    ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன.

    எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை."

    எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!"

    வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது.

    உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்! காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்..

    வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று!

    ReplyDelete
  2. lotto விழுந்தவனும் இப்படித்தான் காணமல் போய்விடுகிறான்

    ReplyDelete