பகுதி/PART:02-இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்/Death & Its Beliefs of Tamils

"What is Really "DEATH"?
உண்மையில் இறப்பு என்றால் என்ன?
1. மூச்சு நிற்பது இறப்பா ?--------------- இல்லை
2. இதயம் துடிப்பது நிற்பது இறப்பா ?----- இல்லை
3. மூளை சிந்திப்பதை நிறுத்தும் போதா?-- இல்லை
4. இரத்த ஓட்டம் நிற்கும் போதா?-------- இல்லை 

அல்லது மேற்கூறியவற்றில் ஏதாவது ஒன்றிரண்டின் சேர்க்கையா அல்லது எல்லாவற்றினதும் சேர்க்கையா? வேறு காரணங்கள் தான் இருக்கின்றனவா?


இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை‌த்தா‌ன் மரண‌‌ம் எ‌ன்று நா‌ம் கு‌றி‌ப்‌பிடுவோ‌ம்.ஆனா‌ல் மருத‌்துவ உலக‌ம் எ‌ன்ன சொ‌ல்‌கிறது தெ‌ரியுமா?

மருத்துவ அறிவியலின் படி மரணம் என்பது உடலிலுள்ள உயிர்ச் செல்களின் இயக்கமின்மை என்று வரையறுக்கலாம். முக்கிய உறுப்புக்கள் இயக்கமின்றி செயலற்றுப் போனதையே நாம் மரணம் என்று கூறுகின்றோம்.மருத்துவ அறிவியலில் மரணத்தை இரு வகையாக விவரிக்கின்றார்கள்.அதை நாம் "மருத்துவச் சாவு"(Clinical death ) என்றும்,"மூளைச் சாவு"(Cerebral death ) என்றும் குறிப்பிடுகின்றோம்

மருத்துவச் சாவுக்கும்[கி‌ளி‌னி‌க்க‌ல் டெ‌த்] மூளைச் சாவுக்கும்[செ‌ரிபர‌ல் டெ‌த்] உள்ள வித்தியாசம் மிக மிக சிறிதே உண்மையில், ஒரு சில  நெருக்கடியான/அவசியமான நிமிடங்களே.மருத்துவச் சாவு என்பது பல்வேறு காரணங்களினால் இதயம் இயங்காது நின்று போவதாகும்.அப்பொழுது சுவாசித்தலும் இரத்த ஓட்டமும் நின்றுவிடுகின்றன. இதயம் நின்று போய்விட்டாலும், ஒரு சில நிமிடங்கள் வரை இந்த மூளை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது.இக் கால வரம்பிற்குப் பிறகு,ஆக்ஸிஜன்[பிராணவாயு] பற்றாக்குறையால் மூளையும் இயக்கமற்று செயலிழந்து விடுகிறது.இதையே மூளைச் சாவு என்கிறோம்.மூளைச் சாவே ஒரு மனிதனின் முடிவான சாவாகும்.ஏனெனில் இதற்குப் பிறகு உயிரை மீட்டுப் பெறவே முடியாது.இ‌ப்போதுதா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.எனவே, மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரணமாகு‌ம்.

சராசரியாக ஒரு மனிதனின் ஆயுள் காலம்  30,000 நாளாகும்.நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் 40,000 நாள் வாழமுடியும். எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இது சுமார் 7000 நாட்களே.அதாவது 20 வருடங்களிலும் குறைவே என்பது குறிப்பிடத் தக்கது. 

"மூப்படைதல் ஒரு உயிர் வேதியியல் செயன்முறையாகும்[biochemical process].அதனால் மனிதன் அதனை குறுக்கிடு செய்து எப்படி அதை இன்னும் தாமதமாக்கலாம் என்பதை வருங்காலத்தில் அறிவான்" என நாம் நம்பலாம் 

பிரித்தானிக்கா  கலைக்களஞ்சியத்தின்[Encyclopedia Britannica] முதல் பதிப்பில்  இறப்பு என்பது "உயர் உடலில் இருந்து பிரிவது" என சமய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது .மனித உடலைப்பற்றிய எமது இன்றைய மேலதிக அறிவால்,பதினைந்து பதிப்பின் பின்,அது முப்பது தடவை நீளமாகியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.  

வெளி அடையாளங்களான மூச்சு விடுதல்,இதய துடிப்பு போன்றவை நின்றாலும் அல்லது இல்லாமல் போனாலும்,இன்னும் அந்த நபர் சாகலாமல் இருபதற்கு சந்தர்ப்பம் உண்டு என இப்ப மனிதர்கள் உணர்ந்து கொண்டார்கள்.   

இன்று,இறப்பு என்ற சொல்லின் சொற்பொருள் விளக்கத்திற்கு  மேலும்  சில சேர்க்க வேண்டி உள்ளன.செயற்கை இதயம்[mechanical heart],சுவாசிபதற்கான கருவி, நரம்பு வழி உணவு செலுத்துதல்[intravenous feedings] போன்றவற்றால் , மருத்துவர் ஒருவர் நோயாளியை ,அவர் ஆழமான  எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்கநிலையில்[deep coma]  இருந்தாலும்,அவரை மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ உயிர்  உடன் வைத்திருக்க முடியும் என்பதால்.  


மரணத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக  மறுமை
 ( இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை/afterlife) நம்பிக்கையை  கொடுத்துள்ளது . இது,இந்த  எண்ணம், தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும்,  மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் ஒரு  ஆறுதல் கொடுப்பதுடன் ,ஆனால்  மற்றவர்களுக்கு: "ஏன்,எதற்கு  மரணம் இருக்கிறது?" "எல்லாம் வல்ல கடவுளால் மரணத்தை இல்லாமல் செய்ய முடியாதா?" "எல்லா உயிர்களும்  இயற்கையாக ஏன் சதாகாலமும் வாழமுடியாது?" போன்ற கேள்விகளுடன்  ஆச்சரியமடைய வைக்கிறது.

 பகுதி/PART:03"மதமும் மரணமும்""RELIGION & DEATH"தொடரும் 
-[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

1 comments:

  1. A lovely artical,Want to hear from you,What will happen after death, What is happinning to the good and bad we are doing,either perposely or without knowing, Is there is diffent of actions to these. Good waiting to read further. Anandaselvam

    ReplyDelete