ஒளிர்வு-(36)- ஐப்பசி,2013


உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]திருநிறைச்செல்வன் - திருநிறைசெல்வன்

   திருநிறைச்செல்வன் என்று வல்லினம் மிகுத்தல் தவறாகும். திருநிறைசெல்வன் என்பது வினைத்தொகையாகும், வினைத்தொகையில் வல்லினம் மிகா. எனவே திருநிறைசெல்வன் என்று எழுதுக. இது போல் திருவளர்செல்வன், திருவளர்செல்வி ஆகிய இடங்களில் வல்லினம் மிகாமல் எழுதுக.

புள்ளாங்குழல் - புல்லாங்குழல்

   புள்ளாங்குழல்  என்று எழுதுவது தவறாகும். புல் என்பதற்கு மூங்கில் எனப் பொருட்படும். எனவே மூங்கில் குழாயில் உருவாக்கப்படும் இசைக்கருவிக்குப் புல்லாங்குழல் என்று பெயர். (புள் என்றால் பறவை என்று பொருள்).

சக்கரை - சருக்கரை


   சக்கரை என்று சிலர் எழுதுகின்றனர். சருக்கரை, (அ) சர்க்கரை என்று எழுதுவதே சரியாகும். மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் முதற்பாகத்தில் 86 ஆம் பாடலில்  'சுவை மிக்க சருக்கரை பாண்டவர்'  என்று வருவதைக் காண்க. வடலூர் வள்ளலார் அளித்த திருவருட்பாவில், அருள் விளக்க மாலையில் 'சர்க்கரையுங் கற்கண்டின் பொடியு மிகக்கலந்தே' என்று வருவதைக் காண்க.

சிறிதரன் - சிரீதரன்

   சிறிதரன் என்று எழுதுவது தவறாகும். வடமொழிச் சொல்லாகிய ஸ்ரீதரன் என்பது, தமிழில் சிரீதரன் என்று எழுத வேண்டும். பெரியாழ்வார் திருமொழியில் 58 ஆம் பாடலில் 'குழகன் சிரீதரன் கூவ' என்றும், 147 ஆம் பாடலில் 'செய்தன சொல்லிச் சிரித்தங் கிருக்கில் சிரீதரா' என்றும் வருவனவற்றை காண்க.

கலை கழகம் - கலைக் கழகம்

   கலை கழகம் என்றால் கலைகின்ற கழகம் எனப் பொருட்படும். கலைக்கழகம் என்று வல்லினம் மிகுத்தால் கலையை வளர்க்கின்ற கழகம் எனப் பொருட்படும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.

பெறும் புலவர் - பெரும் புலவர்

   பெறும் புலவர் என்றால் பரிசைப் பெறுகின்ற புலவர் எனப் பொருட்படும். பெரும் புலவர் என்றால் புலமையுள் பெரிய புலவர் எனப் பொருட்படும். எனவே செயலறிந்து எழுதுக.

தந்த பலகை - தந்தப் பலகை

   தந்த பலகை என்றால் அவன் எனக்குத் தந்த மரப்பலகை எனப் பொருட்படும். தந்தப் பலகை என்று வல்லினம் மிகுத்தால் யானையின் தந்தத்தால் ஆன பலகை எனப் பொருட்படும். எனவே இடமறிந்து எழுதுக. 

செடி கொடி - செடிக் கொடி

    செடி கொடி என்றால் செடியும் கொடியும் எனப் பொருட்படும். செடிக் கொடி என்று வல்லினம் மிகுத்தால் செடியின் மேல் ஏறியுள்ள கொடி எனப் பொருட்படும். எனவே கருத்துணர்ந்து எழுதுக.

நடுக்கல் - நடுகல்

   குறிலிணை மொழிகளில் வரும் முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும். சான்று: திருக்குறள், முழப்பக்கம், விழுப்புண், பொதுப்பணி, புதுப்பாட்டு, அணுக்குண்டு ஆகிய சொற்களைப்போல் நடு என்ற சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.. சான்று: நடுத்தெரு, நடுப்பக்கம். ஆனால் நடுகல் என்ற சொல் வினைத்தொகையாகும். வினைத்தொகையில் வல்லினம் மிகா. புறநானூறு 306 ஆம் பாடலில் ''நடுகல் கைதொழுது பரவும்'' என்று வருவதைக் காண்க.

காவேரி - காவிரி

   காவிரி என்ற சொல்லிவிருந்து காவேரி என்ற போலிச் சொல் உருவாகியுள்ளது. காவிரி என்னும் சொல்லுக்குச் சோலைகளை உருவாக்குவது வள்ர்ப்பது என்னும் பொருள் உண்டு. ( கா - சோலை) காவிரிப் பூம்பட்டினம், காவிரிப்புதல்வர், காவிரி நாடன் என எழுதுவதே சிப்பாகும்.
          நன்றி:கவிஞர் கி.பாரதிதாசன் 
  (அடுத்த வாரம் தொடரும்)

சினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்.

ஜில்லாவோடு இடிக்காமல் வீரம் படத்தை ஹிட்டாக்க 'பலே' திட்டம்

வீரம் படத்தை ஹிட்டாக்க படக்குழு புதிய திட்டம் தீட்டியுள்ளது.

அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளி அன்று ரிலீஸாகாமல் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. படமும் தமிழகம் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசூலில் ஒரு கை பார்த்துள்ளது. இதனால் ஆரம்பம் படக்குழுவினர் குஷியாகியுள்ளனர்.

ஜில்லாவோடு இடிக்காமல் வீரம் படத்தை ஹிட்டாக்க 'பலே' திட்டம்

இந்நிலையில் பொங்கலுக்கு அஜீத்தின் வீரம் படம் வருகிறது. இந்த படத்தை ஹிட்டாக்க படக்குழுவினர் தீயாக வேலை செய்கிறார்கள். படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்யாமல் 5 நாட்கள் முன்னதாகவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அப்படி செய்தால் நல்ல வசூல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.

மேலும் விஜய்யின் ஜில்லாவும் பொங்கலுக்கு வருவதால் வசூலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த திட்டமாம்.  
-------------------------------------------------
300 திரையரங்குகளில் 'இரண்டாம் உலகம்' ரிலீஸ்

  300 திரையரங்குகளில் 'இரண்டாம் உலகம்' ரிலீஸ்
சென்னை, நவ.12 (டி.என்.எஸ்) தீபாவளி படங்களுக்குப் பிறகு ரசிகர்களும், திரையுலகினரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் படங்களில் முக்கியமான படமாக 'இரண்டாம் உலகம்' உள்ளது. காரணம், இப்படம் ஒரு பேண்டசி படம் என்பதாலும், இப்படத்திற்கான பட்ஜெட் பெரியது என்பதாலும் தான்.

ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 22ஆம் தேதி 300 திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் அதே நாளில் தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. 
....................................................................
இவன் வேற மாதிரி டிசம்பர் 13ஆம் தேதி ரிலீஸ்

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, 'கும்கி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது எங்கேயும் எப்போதும் இயக்குநர் சரவணன் இயக்கத்தில், 'இவன் வேற மாதிரி' படத்தில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார்.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யு.டி.வி மோசன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக டெல்லி மாடல் அழகி சுரபி நடித்துள்ளார். இவர்களுடன் கணேஷ் வெங்கட்ராம், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதையடுத்து, இப்படத்தை வருகிற டிசம்பர் 13ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 
...................................................................
சரத்குமார் - பிரியாமணி நடிக்கும் 'அஞ்சாத சண்டி'
ஓமிக்ஸ் கிரியேசன்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு 'அஞ்சாத சண்டி' என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரியாமணி நடிக்கிறார். மற்றும் ஆசிஷ்வித்யார்த்தி , கிருஷ்ணம்ராஜு, ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லண்டனைச் சேர்ந்த ஸ்கேர்லெட் வில்சன் என்ற பெண் ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார்.

பிரியாமணி இந்த படத்தில் முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார். அவருக்கு எல்லா விதமான சண்டை கற்றுத் தந்து ஒரு ஆணாதிக்க நபரான ஆசிஷ்வித்யார்த்தியை பழிவாங்க அனுப்பும் பயிற்சியாளராக சரத்குமார் நடிக்கிறார்.

சண்டை காட்சிகளுக்காகவே பலகோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு கவர்ச்சி பாடலில் ஸ்கேர்லெட் வில்சன் என்னும் லண்டன் அழகியை வைத்து படமாக்கியுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரியாமணி தமிழில் நடிப்பதால் சண்டை காட்சிகளுக்காக மிகுந்த பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
....................................................................
படங்களில் ‘பெண்களை கேலி செய்து படம் எடுப்பதா?’’ நடிகை தேவயானி ஆவேச பேச்சு
இப்போது வரும் படங்களில் ‘டாஸ்மாக்’ காட்சிகள் நிறைய இடம் பெறுகின்றன. பெண்களை கேலி–கிண்டல் செய்து படம் எடுக்கிறார்கள். இது தேவையா? என்று நடிகை தேவயானி ஆவேசமாக பேசினார்.

சினிமா படவிழா

‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தில் நடித்த பாலாஜி மற்றும் ஜெய் குகேனி ஆகியோர் இணைந்து நடித்த மெய்யழகி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.டிரெய்லரை பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி வெளியிட, டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார்.

தேவயானி பேச்சு

விழாவில் நடிகை தேவயானி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–‘‘இந்த மாதிரி தரமான கதையம்சம் கொண்ட படங்கள் அபூர்வமாகவே வருகின்றன. மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. இப்போது வரும் பெரும்பாலான படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை கேலி–கிண்டல் செய்கிறார்கள். மச்சி, மச்சான் என்று வசனக்காட்சிகள் வருகின்றன.பெரும்பாலான படங்களில் குடிகாரர்களின் ‘டாஸ்மாக்’ காட்சிகள் இடம் பெறுகின்றன. பெரிய படம் சின்ன படம் என்று வேறுபாடு பார்க்கக்கூடாது. தரமான கதையம்சம் கொண்ட படங்களே பெரிய படங்கள்’’.இவ்வாறு தேவயானி பேசினார்.

சோனா

அடுத்து பேச வந்த நடிகை சோனா, ‘‘சமீபகாலமாக சில படங்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறுகின்றன. ‘டாஸ்மாக்’ காட்சிகள் இல்லாத படங்களே இல்லை’’ என்று கூறினார்.டைரக்டர் விக்ரமன் பேசும்போது, ‘‘சிறு பட தயாரிப்பாளர்களை காப்பாற்றுவதற்காக புதிய சங்கம் ஒன்றை அமைக்க முயற்சித்தேன்’’ என்று கூறினார்.விழாவில் டைரக்டர்கள் பேரரசு, பத்ரி, பி.டி.செல்வகுமார், கோகுல், நடிகர்கள் மதன்பாப், பாலாஜி, இசை அமைப்பாளர் அபிஷேக் ஆகியோரும் பேசினார்கள்.பட அதிபர் ரிஷ்வான் ஜி வரவேற்று பேசினார். டைரக்டர் ஆர்.டி.ஜெயவேல் நன்றி கூறினார்.
....................................................................

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'ஆரம்பம்'

 அஜீத் குமாரின் ஆரம்பம் படத்தின் வசூல் ரூ.100 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் ரிலீஸான முதல் வாரத்திலேயே ரூ.50 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் படம் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'ஆரம்பம்'

ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆரம்பம் உலகம் முழுவதும் ரூ.91.63 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படம் விரைவில் ரூ.100 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆரம்பம் படம் தெலுங்கில் வரும் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தெலுங்கு டப்பிங் உரிமை ரூ.6 கோடிக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.................................................................
அடுத்த மாதம் இறுதிக்குள் 20 புது படங்கள் ரிலீஸ்
அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் 20 புதுப்படங்கள் ரிலீசுக்கு வருகின்றன. இந்த வருடம் இதுவரையிலும் சுமார் 150 படங்கள் திரைக்கு வந்துள்ளன. வருடம் முடிய இன்னும் 45 நாட்கள் மீதி உள்ளது. இந்த நாட்களில் மேலும் 20 படங்கள் வருகிறது. நாளை (14–ந் தேதி) ‘பீட்சா 2 வில்லா’, ‘ஆப்பிள் பெண்ணே’, ‘ராவண தேசம்’ படங்கள் ரிலீசாகின்றன. இவற்றில் ‘பீட்சா 2 வில்லா’ படம் விஜய் சேதுபதி நடித்து ஹிட்டான ‘பீட்சா’ படத்தின் 2–ம் பாகமாக தயாராகிறது. 

‘ராவணதேசம்’ படம் ஈழ தமிழர்களின் கஷ்டங்களை மையமாக வைத்து தயாராகியுள்ளது. வருகிற 22–ந் தேதி ‘இரண்டாம் உலகம்’, ‘மெய்யழகி’, ‘அப்பாவுக்கு கல்யாணம்’ படங்கள் வெளியாகின்றன. ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். செல்வராகவன் இயக்கியுள்ளார். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. 

வருகிற 29–ந் தேதி ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘மாயை’, ‘விழா’ ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை சேரன் இயக்கியுள்ளார். சர்வானந்த், நித்யாமேனன் ஜோடியாக நடிக்கின்றனர். ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். 

அடுத்த மாதம் (டிசம்பர்) 6–ந் தேதி ‘கல்யாண சமையல் சாதம்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘வேல்முருகன் போல்வெல்ஸ்’, ‘குற்றாலம்’ படங்கள் ரிலீசாகின்றன. ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தில் பிரசன்னா நாயகனாக நடித்துள்ளார். ‘ஜன்னல் ஓரம்’ படத்தில் விமல் நாயகனாக வருகிறார். கரு பழனியப்பன் இயக்கியுள்ளார். ‘வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தில் கஞ்சா கருப்பு, மகேஷ் நாயகர்களாக நடிக்கின்றனர். 

கஞ்சாகருப்பே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். எம்.பி.கோபி இயக்குகிறார். டிசம்பர் 13–ந் தேதி விக்ரம் பிரபு நடிக்கும் ‘இவன் வேற மாதிரி’, விஜய் சேதுபதியின் ‘ரம்மி’ மற்றும் ‘கோப்பெருந்தேவி’ படங்கள் ரிலீசாகின்றன. டிசம்பர் 20–ந் தேதி ஜீவா, திரிஷா ஜோடியாக நடிக்கும் ‘என்றென்றும் புன்னகை’ மற்றும் ‘சுற்றுலா’ படங்கள் வெளியாகின்றன.
 .........................................................................

வந்திடுமா நீரிழிவு (diabetes) ?

யார் யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது?

 உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மூன்றரை கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கும் டயபடீஸ் வர சந்தர்ப்பம் உள்ளது. அவர்கள் அதற்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தவிர 30 வயதினருக்கு மேல் உள்ளவர்களும், முக்கியமாக தனக்கு முந்தைய தலைமுறையினருக்கு (உதாரணம் தந்தை, தாத்தா) டயபடீஸ் இருந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக டயாபடீஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

டயபடீஸ் இருக்கிறது என்று நமக்கு ஏதாவது அறிகுறிகள் மூலம் தெரியுமா?

ஆமாம்... திடீரென்று எடைகுறையும். சிறுநீர் அதிகம் வெளியாகும். பசி அதிகரிக்கும். சோர்வு, தோள்பட்டை வலி, பிறப்புறுப்புகளில் அரிப்பு, கண்பார்வை மங்கும். புண்ணோ, கட்டியோ வந்தால் சீக்கிரம் ஆறாது... ஆனால், 30 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இப்படி அறிகுறிகள் தென்படும். மீதமுள்ள 70 சதவிகிதத்தினருக்கு அறிகுறிகளே தெரியாது. தங்களுக்கு டயபடீஸ் இருப்பதை உணராமலேயே, அதை அறியாமல்தான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேறு ஏதாவது ஒரு மருத்துவ சிகிச்சைக்கு வரும்போதுதான் பலருக்கும், டயபடீஸ் உள்ளதே கண்டுபிடிக்கப்படுகிறது.

டயபடீஸ் மற்றும் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் வரும் என்று சிலர் அஞ்சுகிறார்களே?

இந்த மருந்துகள் எல்லாம் உயிர் காக்கும் மருந்துகள். டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ் நாட்கள் முழுவதும் மாத்திரை உட்கொள்வதன் மூலம்தான் பாதுகாப்பாக இருக்க முடியும். பக்க விளைவுகள் ஏற்படும் என்று மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சர்க்கரை வியாதியும், இரத்த அழுத்தமும் கட்டுப்பாடு மீறி சில விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும்!

‘லோ சுகர்’ என்கிறார்களே.. அது வந்தால் என்னாகும்?

இந்த நிலை சற்று ஆபத்தானது.. ஆழ் மயக்கம் என்கிற விபரீத நிலைக்கு நம்மைத் தள்ளிவிடும்! லோ சுகர் எனில் முதலில் பசி, படபடப்பு, நடுக்கம், பதட்டம், தலைவலி, பார்வை மங்குதல், அதிக வியர்வை, எரிச்சல், குழப்பம், தூங்கி வழிதல், மயக்கம் ஏற்படும் அதுவே ஆழ் மயக்கத்துக்குள் கொண்டு சென்றுவிடும். காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் தாக்கினால் நம் உடலின் சர்க்கரையின் அளவு சட்டெனக் குறையும். இதைத் தவிர்க்க அந்த நேரத்தில் உடனடியாக இனிப்பு, அல்லது பழச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருந்தால் லோ சுகர் வராமல் தடுக்க ஒரு சில நாட்களுக்கு டயபடீஸ் மாத்திரையின் அளவை குறைத்துக் கொண்டு மருத்துவரின் ஆலோசனையை உடனே பெறவேண்டும்.

டயபடீஸ் உள்ளவர்கள் எந்த மாதிரியான உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்?

நடப்பது, சைக்கிளிங், ஜாக்கிங், நீந்துதல் போன்ற உடற்பயிற்சிகள் செய்யலாம். வெறுமனே ஆசைக்காக செய்து விட்டுவிடாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதே நல்லது. உடற்பயிற்சியினால் ரத்தத்தில் சர்க்கரையளவு குறையும். கொழுப்புச் சத்தும் குறையும்!

 இதயத்தை பாதுகாக்கும் ஹெச்.டி.எல். எனப்படும் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகும்!

 டி.ஜி.எல். என்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

டயாபடீஸ் உள்ளவர்கள் தொடர்ந்து ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் சாப்பிடுவதால் உடல்பருமன், இரத்த அழுத்த நோயால் பாதிக்கிறார்கள். ஃபாஸ்ட்புட் அதிகம் சாப்பிடும், அதிக உடல் உழைப்பற்ற சாஃப்ட்வேர் துறையில் உள்ளவர்களே இந்நோயால் அதிகம் பாதிப்படைகிறார்கள். உடற்பயிற்சியின் மூலம் அவர்களின் மன அழுத்தத்தை நன்றாகவே குறைக்க முடியும். டயபடீஸால் இந்தியாவில் ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் பேர் பாதிப்படைகின்றனர். டயபடீஸ் உள்ளவர்கள் நல்ல பாத அணிகள் போட்டு நடக்க வேண்டும். காரணம் கால்கள்தான் சிக்கிரமே பாதிக்கப்படும். டயபடீஸைக் கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கும் சிகிச்சை முறைகளுக்கும் அதிக செலவுகள் ஏற்படும். அப்படியே ஆனாலும்கூட பூரண நிவாரணம் கிடைக்காது. எனவே மருத்துவரின் ஆலோசனையையும், மருந்துகளையும் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோயைக் கண்டு பயப்படவேண்டாம்!

டயபடீஸ் முற்றிய நிலைக்குப் போகாமல் எப்படித் தடுப்பது?

ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி டயபடீஸ§க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டாலே இது முற்றாது. ஆனால், இப்படி மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்காமல் மருந்துகளையும் சரியாக எடுக்காமல் இருந்தால் டயபடீஸ் முற்றிவிடும்! டயபடீஸை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் கண், சிறுநீரகம், இதயம், நரம்புகள் போன்ற உறுப்புகள் கண்டிப்பாக பாதிக்கப்படும். நோயின் பாதிப்பு அதிகமாகி சில நேரம் கோமா நிலைக்குத் தள்ளப்படுவதும் உண்டு!

குழந்தை பிரசவிக்கும்போது ஒரு பெண்ணுக்கு டயபடீஸ் இல்லை என்றாலும் பிறக்கும் குழந்தைக்கு டயபடீஸ் இருக்கிறதே எப்படி? இதைக் குணப்படுத்த முடியுமா?

வைரஸ் இன்ஃபெக்ஷன் மற்றும் நம் உடலில் இருக்கும் பீட்டா செல் இன்சுலின் சுரப்பு அதிகமாக சுரப்பதுதான் இதற்குக் காரணம். இதை மாத்திரையினால் குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. இன்சுலின் ஊசியால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஆனால் குணப்படுத்த முடியாது. தாய், கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைத்திருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் வராமல் தடுத்துவிடலாம். கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை வியாதியினால் எந்த ஒரு பின் விளைவுகளும் வருவதில்லை. நீங்கள் உங்கள் உடம்பில் சர்க்கரையின் அளவை எப்படி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே மிக முக்கியமான ஒன்று. உங்கள் கட்டுப்பாடு உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

சாப்பிட வேண்டிய உணவு

கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, சிலதுண்டு பப்பாளி, தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ், இஞ்சி, குடை மிளகாய், புடலங்காய், சுரக்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முளைகட்டிய பயிர், காராமணி, பச்சைப்பயிறு போன்றவை உட்கொள்ளலாம்.

பின்குறிப்பு: சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மேற்கண்ட ஏதேனும் ஒரு பழத்தை நாளன்று எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவை

வாழைப்பழம், செர்ரி, சீதாப்பழம், அன்னாசி, பலாப்பழம், உருளைக்கிழங்கு, பரங்கிக்காய், காரகருணை, சேனைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், மற்றும் கார்போ ஹைட்ரேட் உணவுவகைகள் எல்லாம் தவிர்க்க வேண்டியவை. மீதமுள்ள மற்ற பழவகைகளையும் தவிர்க்கவும்.
பொரித்துச் சாப்பிட வேண்டாம் 

13 jokes...today

புறநானுற்று மா வீரர்கள்,பகுதி 02:

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]

வீரத் தாய்[வீர அன்னையர்]/warrior mothers:    

சங்ககாலச் சமூகம் ஒரு போர்ச் சமூகம்;அதன் ஒட்டு மொத்த இயக்கமும் போரை மையப்படுத்தியே இருந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே நிறுவியுள்ளன.உதாரணமாக புறநானுறு 76 "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று;இவ் உலகத்து இயற்கை;"என்று அடித்து சொல்கிறது.அதாவது ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை என்கிறது.இப்படி பல சான்றுகள் புறக்கவிதைகளில் மேலே கூறியவாறு ஏராளமாக உள்ளன என்றாலும் கவி பொன்முடியின் இந்தக் கவிதை முதன்மையான ஆதாரம்எனச் சொல்லும் விதமாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க இயலாது."வாளைக் கையில் ஏந்தி போர்க்களத்தில் இருந்து வெற்றியுடன் மீள்வது ஆண்மகனின் கடமை"என்கிறது! 

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"

என முடியும் (புறம் 312) புகழ் பெற்ற அந்தக் கவிதை.ஆண்மகனைப் பெறுவதில் சங்ககாலச் சமூகத்துக்கிருந்த மகிழ்ச்சியையும் அதைவிட அவனை சான்றோன் ஆக்குதலில் இருந்த இரட்டிப்பு மகிழ்ச்சியையும் நாம் இங்கு காண்கிறோம்.சங்ககாலத்தில் சான்றோன் என்பதற்கு வீரன் என்ற பொருளே பொதுவாக இருந்தது. 

ஒரு நாள்,மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் புரிந்த பெண்பாற் புலவராகிய காவற் பெண்டு அல்லது காதற்பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர் அவரின் சிறிய வீட்டின் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு,அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார்.அதற்கு,காவற் பெண்டு “உன் மகன் எங்கே உள்ளான்” என்று நீ என்னை கேட்கிறாய்.இதோ என் வயிற்றைப் பார்,என தன்  வயிற்றைக் காட்டி,அவனைப் பெற்ற வயிறு இது.புலி இருந்து சென்ற குகை இது.என் மகனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் குகைக்கும் உள்ள தொடர்பைப் போன்றது.என் மகன்,அந்த புலி இப்ப குகையை விட்டு வெளியே போய் விட்டது.அவன் இப்ப தன் நாட்டுக்காக போர்க்களத்தில் இருப்பான்.அங்கு போய்ப் பார் என்று கூறுகிறார்.இதோ அந்த வீரத் தாயின் பாடல்:


"சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே"
[புறநானுறு 86] 

பழந்தமிழ் மறத்தி ஒருத்தி நாட்டைக் காக்கத் தந்தையைப் போர்க்களத்திற்கு அனுப்பினாள்.அவன் வீரச்சாவடைந்தான்.நேற்றுக் கணவனைக் களத்திற்கு அனுப்பினாள்.அவனும் களம் பட்டான்.ஆனாலும் அவள் கலங்கவில்லை.இன்றும் போர்ப் பறை கேட்டுத் தன்மகனை-ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என ஓக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர் மறத்தி ஒருத்தியின் மாண்பினைப்[சிறப்பை,பெருமையை] படம்பிடித்துக் காட்டுகிறார்.

"கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட்டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே."
[புறநானூறு 279]

களத்தில் உன் மகன் புறமுதுகிட்டான் என்று சிலர் சொல்லக் கேட்ட பழந்தமிழ் மறக்குடி முதியவள் ஒருத்தி, செவியில் விழுந்த சொல்லால் சீற்றம் கொண்டாள்.“புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள்.கையில்
வாளெடுத்தாள்.களம் நோக்கிக் கடுகினாள்.வடுப்பட்டு வீழ்ந்து கிடந்த பிணங்களை வாளாற் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்:மகனைப் பிணமாகக் கண்டாள்:அழுகை பொங்கியது.ஆயினும் சிலர் சொன்னது போல் அல்லாமல் மகன் மார்பில் விழுப்புண் பட்டு[போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்] மாண்டான் என்பது கண்டு உவகை[மகிழ்ச்சி] கொண்டாள் .அவனை ஈன்ற ஞான்றினும்[நாள்] பெரிது உவந்தனள்.இப்படிப் பழந்தமிழ் முதியவள் ஒருத்தியின் மறப் பண்பைக்[வீரத்தை] காக்கைப் பாடினியார் எடுத்துக் காட்டுகிறார்.

"நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்
முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇக்
கொண்ட வாள் அடு படு பிணம் பெயராச்
செங்களம் துழவு வோள் சிதைந்து வேறாகிய
படு மகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே."
[புறநானூறு 278]

ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த,சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய  மகாகவி காளிதாசன்,தனது குமார சம்பவத்தில் "உமை அன்னையை வாழ்த்தும் பிரம்மா,நீ வீரர்களின் தாயாக விளங்கவேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி)"என்று வாழ்த்துவதாகக் கூறுவதையும்,தனது மற்றும் ஒரு நாட்டிய நாடகமான சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் வீரர்களின் தாயாக [வீரப்ரசவினீ பவ] விளங்குவாயாக என்று வாழ்த்துவதையும் கவனிக்க.அப்படிபட்ட வீரர்களின் நடு கல்லை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர்.பொதுவாக இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப்படலாமாயினும்,வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்புக் கொடுக்கப்பட்டு வந்தது.சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்டகற்களைப் பற்றிய தாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பகுதி/Part 03"மா வீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்"  அடுத்தவாரம் தொடரும்.

செந்தமிழ் படிப்போம். [பகுதி - 2]

வந்திருக்கும் வாசகர்களுக்கு வணக்கம்.சென்றவாரம் முதலாவது பகுதி பயனுள்ளதாக அமைந்திருக்கும். தொடர்ந்து வாசியுங்கள்.
கடை அருகாமையில் இருக்கிறது - கடை அருகில் இருக்கிறது

            கடை அருகாமையில் இருக்கிறது என்ற அடி தவறாகும். கடை அருகில் இருக்கிறது என்ற அடியே சரியாகும்.

பொம்மை செய்ய முயற்சித்தான் - பொம்மை செய்ய முயன்றான்

            பொம்மை செய்ய முயற்சித்தான் என்று எழுதுவது தவறாகும். முயற்சித்தல் என்ற சொல்லே இல்லை. எனவே பொம்மை செய்ய முயன்றான், பொம்மை செய்ய முயற்சி செய்தான், பொம்மை செய்ய முயலுதல் என்று எழுதுதல் சரியாகும்.

அலமேல் மங்கை - அலர்மேல் மங்கை

            அலர்மேல் மங்கை என்று வருவதே சரியாகும். (அலர் : பூ ) பூவின் மேல் அமர்ந்திருக்கின்ற மங்கை

நாட்கள் - நாள்கள்

   கால்கள் என்ற சொல்லைக் காற்கள் என்று எழுதுவதில்லை. எனவே நாட்கள், நூற்கள், தொழிற்கள,; ஆகிய சொற்களை நாள்கள், நூல்கள், தொழில்கள்; எனறே எழுதுக.

எந்தன் - என்றன்

            எந்தன் என்று எழுதுவது தவறாகும். என்  தன்  என்றன் என்று புணரும். (என் - ஒருமை, தன் - ஒருமை,) எம்  தம்  எந்தம் என்று புணரும். (எம் - பன்மை, தம் - பன்மை,) எந்தன் என்பதில் (எம் - பன்மை, தன் - ஒருமை, இது தவறான புணர்ச்சியாகும்

சாற்றுக்கவி - சாற்றுகவி

            சாற்றுக்கவி என்று 'க்' மிகுத்து எழுதுதல் தவறாகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும். ஆனால் சாற்றுகவி என்பது வினைத் தொகையாகும், வினைத் தொகையில் வல்லினம் மிகா, வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் நிலைமொழியாக இருந்து வினைத்தொகையாக வந்தால் வல்லினம் மிகாமல் எழுதுதல் மரபாகும். பாரதியார் எழுதிய விநாயகர் நான்மணி மாலையில் முதலடியில் 'பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்'  என மிகாமல் இருப்பதைக் காண்க.

கொக்குப் பறந்தது - கொக்கு பறந்தது

            கொக்கு என்ற சொல் வன்றொடர்க் குற்றியலுகரமாகும்.  வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும்.  வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் நிலைமொழியாக இருந்து எழுவாய்த் தொடராக வந்தால் வல்லினம் மிகா. கொக்கு பறந்தது என்பது எழுவாய்த் தொடராகும். ஏனவே கொக்குப் பறந்தது என எழுதுதல் தவறாகும்.

பாப் படைத்தான் - பா படைத்தான்

            ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வல்லினம் மிகும். (தீச்சுடர், நாப்பழக்கம்,) ''பா'' ஓரெழுத்து ஒரு மொழிதான், ஆனால் பா படைத்தான் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகையாகும், இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகா. ஓரெழுத்து ஒரு மொழியாக இருந்து, இரண்டாம் வேற்றுமைத் தொகையாக வரின், வல்லினம் மிகா. எனவே பாபடைத்தான் என்பதே சரியாகும்.


வறுமைகளை ஒழிப்போம் - வறுமையை ஒழிப்போம்

            வறுமைகளை ஒழிப்போம் என்பது தவறாகும். வறுமையை ஒழிப்போம் என்று எழுதுக. (வறுமை என்பதற்குப் பன்மை கிடையாது, (புல், நீர் தாகம், ஆகியவற்றிற்கும் பன்மை கிடையாது) ஆடுகள் புற்களை மேய்ந்தன என்பது தவறாகும், ஆடுகள் புல்லை மேய்ந்தன என்பதே சரியாகும். பல ஆறுகளின் நீர்களைக் குடித்தேன் என்பது தவறாகும், பல ஆறுகளின் நீரைக் குடித்தேன் என்பது சரியாகும். நண்பர்களின் தாகங்களை நீக்கினேன என்பது தவறாகும,; நண்பர்களின் தாகத்தை நீக்கினேன் என்பதே சரியாகும்.

மனதை - மனத்தை

            மனதை என்று எழுதுவது தவறாகும். மனம்  ஐ  மனத்தை என்றே வரும். பணம்  ஐ  பணத்தை என்றே வரும். பணதை என்று வாரா.. தனம், வனம், சினம், கனம், இனம், குணம், பிணம்,  ஆகிய சொற்களுடன் ஐ சேர்ந்தால் தனத்தை, வனத்தை, சினத்தை, கனத்தை, இனத்தை, குணத்தை, பிணத்தை என்றே எழுதுதல் வேண்டும். தனதை, வனதை, இனதை, குணதை,,, என எழுதமாட்டோம். எனவே மனத்தை என்று எழுதுக
                                                             (அடுத்த வாரம் தொடரும்)
நன்றி:கவிஞர் கி.பாரதிதாசன் 

அதிசயம்...அறிந்து கொள்ளுங்கள்!!


 •   ரோலர் கோஸ்டர்சில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் ரத்த    அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
 •       நீல நிற கண்களை உடையவர்களுக்கு இருட்டில் மற்றவர்களைவிட பார்வைத்திறன் அதிகம்.
 •       சிறிதளவு மதுவை தேளின் மீது விட்டால் போதும் அது மது மய்க்கமடைந்து இறந்து விடும்.
 •       வெங்காயம் உரிக்கும் போது  சூயிங்கம் மென்றால் கண்ணில் கண்ணீர் வராது.
 •       உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில்
  பயன்படுத்தப்படுகிறது.அதேப்போல் மின்சாரமும் 33 சதவீதம் அமெரிக்கர்கள் பயன்படுத்துகின்றனர்.
 •     ஒருமணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்டால் காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.
 •       வலது கைப்பழக்கம் உள்ளவர்கள், இடது கைப்பழ்க்கம் உள்ளவர்களை விட சராசரியாக் 9 வருடங்கள் அதிகம் உயிர்வாழ்வர்.
 •       ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தபட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.
 •       நமது மூக்கு உடலில் “ஏர் கண்டீசன்” போன்று செயல்படுகிறது, இது உடலுக்குள் குளிர்க்காற்றை வெப்பப்படுத்தி அனுப்புகிறது. வெப்பகாற்றை குளிரூட்டி அனுப்புகிறது. காற்றில் உள்ள மாசுக்களைத் தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பும் வடிகட்டியாக செயல்படுகிறது.
 •       நமது மூளை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரை விட, மிகவும் சக்தி வாய்ந்தது. மூளை 100 பில்லியன் நரம்பு செல்களால் உருவானதாகும்.
 •  நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களை பார்க்கும் போது, நமது விழித்திரையானது சாதாரண நிலையை விட 45 சதவீத அளவில் விரிந்து விடுகிறது.
 •       தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம், அது ஏற்கனவே தேனிக்களால் ஜீரணமாக்கப்பட்டிருப்பதுதான்.
 •       டைட்டானிக் கப்பல் தயாரிக்க வெறும் 7 மில்லியன் டாலர் மட்டும்தான், ஆனால் படம் எடுக்க 200 மில்லியன் டாலர் செலவானது.
 •       மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத ஒரே ஒரு பகுதி கண்ணின்
  கருவிழி மட்டுமே.
 •    உலக அளவில் மனிதனின் இறப்பிற்கு அதிகளவில் காரணமாக இருப்பது கொசுக்கள்தான்.

*************

புறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 01]‏[தொகுத்தது:கந்தையா,தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]

உலகில் எந்த ஒரு பெண்ணும்/தாயும்  ஒரு கோழையைப் பெற ஒருபோதும்,எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும்  விரும்ப மாட்டாள்,உதாரணமாக கி.மு 1700 க்கும் கி.மு 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட,விவாஹ சுக்தம்-மண்டலம் 10,சுக்தம் 85 பாடல் 44 இல்"Not evileyed-,no slayer of thy husband,bring weal to cattle,radiant,gentlehearted;Loving the Gods, delightful,bearing heroes,bring blessing to our quadrupeds and bipeds."இப்படி கூறுகிறது.அதாவது நீ பொறாமை,எரிச்சல் அற்றவளாக என தொடங்கி,இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்:

 “வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”["சத்ரபதி சிவாஜி"/பாரதியார்]
என மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார்.

அப்படிபட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மா வீரர்களையும் புறநானுறு கவிதையில் விரிவாக 2000/2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்க தமிழர்களுக்கு உண்டு.மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன் அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப்பட்டிருப்பது, அவர்கள்,சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன்படுகிறது.இதைத்தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்:"O son of Kuntī,either you will be killed on the battlefield and attain the heavenly planets,or you will conquer and enjoy the earthly kingdom.Therefore,get up with determination and fight." "குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ ஸ்வர்க்கத்தை அடைவாய்;ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு!(கீதை 2-37)"மேலும் இந்த போரில் மடிந்த,பெரும் வீரர்களை புதைத்த இடத்தில்,அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்டப்பட்டன எனவும்,போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வது ஒரு வழமையாக இருந்ததுள்ளதும் சங்க பாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி எதிரி படையை கலங்கடித்து இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மா வீரனை தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள் எம் மூதையர்கள்.அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது.எனினும் அறம் சார்ந்த வீரமே பெருமை உடையதாய் கருதப்பட்டது.அந்த நிலை இன்று அருகிப் போயிற்று.இதை நாம் கண்டு, கேட்டு,அனுபவித்தும் உள்ளோம். 

சங்க காலம் என்பது கி.மு.1000 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும். இக்காலத்தில் தோன்றியது தான் புறநானுறு.அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றாதாரங்கள் உள்ளன.எனினும்,முழுமையான தரவுகள் இல்லை.அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன.சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார். இதனால்,புறநானூற்றில் இனக்குழுத்தலைவர்கள்,குறுநில மன்னர்கள்,பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் அங்கு கிடைக்கின்றன.

அதில் அரசர்களின் வீர செயல்கள்,தன் நாட்டிற்காக,தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு,அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு,அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை,இவைகளுக்கு மேலாக,எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம்.இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று.இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை.போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயல் படுகிறார்கள்.குழந்தைகள்,வயதுபோனவர்கள்,பெண்கள்,தாய்மார்கள்,அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக அழிக்கப்படுகிறார்கள்.அது மட்டும் அல்ல வைத்தியசாலை, பாடசாலை, பாதுகாப்பு இல்லங்கள்/இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன.சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள்.போர் பிணையாளர்களை கொல்லப்படுகிறார்கள்.இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.ஆனால் முறைப்படி போர் சாற்றும் வழக்கம் பழங்காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தனை என்பதை புறநானுறு 9 கூறிச் செல்கிறது.கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து,அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி இப் பாடல் பாடப்பெற்றுள்ளது.அது தான் அந்த முக்கிய தகவல்.அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப்பட்டவை என்றும்,தர்மயுத்தம் என்றும் இதனால் அறிகிறோம்.இதே போல கி.மு ஏழாம் நூற்றாண்டு சுமேரிய காவியமான கில்கமெஷிலும்(Epic of Gilgamesh) இது காணப்படுகிறது.[Brien Hallett,The Lost Art of Declaring War].கில்கமெஷ் காப்பியம்  என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும்.போர் தொடுக்கப்போகிறேன்.ஆனிரை[பசுக் கூட்டம்],ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள்[பிராமணர்],பெண்டிர்,பிணியுடையவர்,மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என முன்கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என அறிகிறோம். இதோ அந்த பாடல்:

"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!"

பசுக்களும்,பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும்,பெண்களும்,நோயுடையவர்களும்,இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும்["பிதிர்க்கடன்"/"இறந்தவர்களுக்கு  செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்]பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்!நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’என்று இந்த பாடல் கூறுகிறது.அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக்கூடாது.அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது.அதுதான் யுத்த தருமமாகும்.பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது.இப்படி போரை நடத்திய இந்த மன்னன்,பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி,"பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக”என மேலும் அவனை வாழ்த்துகிறது.பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர்.பல் துளி என்னும் சொற்கள் இணையும்போது பஃறுளி என அமையும்.

இனி ஒரு சில புறநானுறு வீர பாடல்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

பகுதி/Part 02"வீரத் தாய்" அடுத்த வாரம் தொடரும். 

தீபம் வாசகர்கள் அனைவருக்கும்......


செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 1]

நாம் பேசும்,எழுதும் தமிழில் அன்றாடம் எத்தனை தவறுகளை விடுகிறோம்.அவற்றினை அறிந்துகொள்ள இத்தொடர் பெரிதும் உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம்.

கிருட்டிணன் - கிருட்டினன்

            மேலுள்ள சொற்களில் எது பிழையானது? எது சரியானது? 'க்ருஷ்ண' என்ற ஆரியச் சொல்லைத் தமிழில் ''கிருட்டினன்'' என்று எழுதுவதே மரபு. வடவெழுத்தோடு எழுதுவோர் கிருஷ்ணன் என்று முச்சுழி போடுவர். ''கர்ணன்'' என்பது தமிழிற் கன்னன் என்றே வரும். முத்துக்கிருட்டினன், கோபாலகிருட்டின பாரதி என்ற வழக்குகளைக் காண்க. கருநாகத்தைக் குறிக்கும் ''க்ருஷ்ணசர்ப்பம்'' தமிழில் கிருட்டினசர்ப்பம் என்றும், ''க்ருஷ்ணவேணி' என்பது கிருட்டினவேணி என எழுதப்படும் (கன்னன் - கர்ணன் ) ( கண்ணன் - திருமால்)

கற்புரம் - கற்பூரம் - கருப்பூரம்

            கற்புரம் என்று எழுதுவது தவறாகும்.  ''கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ'' என்று ஆண்டாள் திருமாலைப் போற்றிப் பாடுகிறாள். ''கற்பூரம் நாறும் கலைசையே'' கலைசைச் சிலேடை வெண்பாவில் இத்தொடர் உள்ளது. கருப்பூரம் என்றும் கற்பூரம் என்றும் எழுதுவது சரியே. ஆனால் கருப்பூரம் என்று எழுதுவதே நன்று.

சுவற்றில் எழுதாதே - சுவரில் எழுதாதே

            சுவரில் எழுதாதே என்று எழுதுவதே சரியான தொடர்  (சுவர் - இல் - சுவரில்) சுவற்றில் என்று எழுதினால் வறண்டுபோன இடத்தில் என்பது பொருளாகும்.

ஒரு ஆடு - ஓர் ஆடு

            ஒன்று என்பது ஒரு எனத்திரிந்த நிலையில், வருமொழியில் உயிரெழுத்துக்களும் யகர ஆகாரமும் முதலாகிய சொற்கள் வந்தால், ஒரு என்பதில் ஒகரம் ஓகாரமாகும். ''ரு'' என்பதன் கண் உள்ள உகரம் கெட ஒரு என்பது ஓர் என்று ஆகும்
           
            'அதனிலை உயிர்க்கும் யாவரு காலை
            முதனிலை ஒகரம் ஓ ஆகும்மே
            ரகரத்து உகரம் துவரக் கெடுமே'
                                    (தொல் . எ . 479)

எனவே ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்றாற்போல்வனவே வழா நிலையாம் .

பன்னிரு ஆழ்வார்கள் - ஆழ்வார்கள் பன்னிருவர்

            பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்றாற்போல வருவன யாவும் வழூஉத் தொடர்களாம். உயர்திணைப் பெயர்களுக்குப் பின்னே எண் பெயர்கள் வர வேண்டும். ஆழ்வார்கள் பன்னிருவர், நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்றாற்போல வருவன வழா நிலையாம்.

ஓர் அரசன் - அரசன் ஒருவன்

            ஒரு என்ற சொல்  உயிரெழுத்துக்களுக்கு முன்னும், யகர ஆகாரம் முன்னும், ஓர் என்று ஆகுமெனக் கண்டோம், இக்கருத்தின்படி ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்றாற் போல்வனவே வழா நிலையாம். ஆனால் உயர்திணைப் பெயர்களுக்கு முன்னே எண் பெயர் வாராது. ஓர் அரசன் என்று எழுதுவது வழுஉத் தொடராகும், அரசன் ஒருவன் எனறு எழுதுவதே வழா நிலையாம்.

பல அரசர் -பலர் அரசர் - அரசர் பலர்

            பல அரசர், சில அரசர் என்றாற்போல வருவனவற்றை பலர் அரசர், சிலர் அரசர் என்பனவற்றின் திரிபாகக் கொள்பர் உரையாசிரியர்கள். எனவே இவற்றையும் அரசர் பலர் , அரசர் சிலர் என்று எழுதுவதே முறையாகும்.
        நன்றி:கவிஞர் கி.பாரதிதாசன்                                                                                           (தொடரும்)

அறிவியல்:-நம்பிக்கைகளும் உண்மைகளும்

முருங்கை, புளியமரங்கள் பேய்கள் வாழுமிடம்..

நம் உடல் நலம் தான் அங்கு வாழ்கிறது. முருங்கை இலை, பூ, காய் அனைத்தும் உணவாகிறது. புளியும் தான்.  இந்த இரு மரங்களுமே பறவைகளுக்குப் பிரியமான வாழ்விடங்களாகும்.

மகுடி ஒலி  கேட்டால் பாம்பு படமெடுத்தாடும்..

பாம்புக்கு காது கேட்காது. பாம்பாட்டியின் மகுடி அசைவிற்கு தகுந்தவாறு தலையை திருப்பிக் கொள்ளும்.

பாம்புகள் நடனமாடிக் கொண்டே இணை சேரும்..

அது நடனம் அல்ல இரண்டு ஆண் பாம்புகளின் சண்டை.  பெண்ணுடன் இணைசேரும் உரிமைக்கான ஆடவர்களின் சண்டை அது.

நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணை சேரும்..

சேராது இரண்டும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை.  நாகம் நாகத்துடனும் சாரை சாரையுடனும் தான் இணை சேரும்.

பாம்பு பழிவாங்கும்..

அந்த அளவுக்கு நினைவாற்றல் கிடையாது அதற்கு.  அடிபடும் போது சுரக்கும் ஒருவகை வேதிப்பொருளை  நுகர்ந்தவாறே இன்னொரு பாம்பு வருவதைப் பழிவாங்க வருவதாக நினைக்கின்றனர்.  மேலும் பாம்புகளில் நிரந்தர இணை என்பதே கிடையாது.

வயது முதிர்ந்த பாம்பு மாணிக்கத்தைத் தலையில் வைத்திருக்கும்..

மாணிக்கம் என்பது மண்ணில் புதைந்து கிடக்கும் அரியவகைக் கல் ஆகும். இதை மெருகேற்றி விலைமதிப்பை ஏற்படுத்துகிறார்கள். குட்டியோ, முதிர்ந்ததோ மாணிக்கம் தரும் பாம்புகள் இல்லை.

பச்சைப் பாம்பு கண்ணைக் கொத்தும்..

தற்காத்துக் கொள்ளப் பாம்புகள் கொத்தும். அப்போது கண், மூக்கு, காது, கால், கை, எனத் தேடிக்கொண்டிருக்காது.

இருதலை, ஐந்துதலை, பத்துதலைப் பாம்புகள் உண்டு..

மரபணுக் கோளாரு காரணமாக மனிதர்கள், ஆடு, கோழிகளைப் போல் அரிதாகச் சில இருதலைகள் கொண்ட பாம்புகள் பிறக்க வாய்ப்பு உள்ளது.  ஆனால் இருதலை, பல தலை கொண்ட பாம்பு வகைகள் இல்லை.

ஆமை புகுந்த வீடு உருப்படாது..

கல்லாமை, இல்லாமை, இயலாமை போன்றவைதான் ஒரு வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது.

விசப் பாம்பு எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்தும்..
ஆதாரம் இல்லை.

நரி முகத்தில் விழிப்பது நல்லது. நரிக்கொம்பு அதிர்ஷ்டம் தரக்கூடியது.

கிராமங்களில் சாதாரணமாக தென்பட்ட நரிகளை தற்போது காண முடிவதில்லை.  அதன் முகத்தில் விழிப்பது யாருக்கு நன்மை என்று சொல்ல முடியாது.  மேலும் நாய் இனத்தை சேர்ந்ததால் நரிக்கும் கொம்பு கிடையாது.

நரி ஊளையிடுவது கெட்ட சகுணம்..

தனது இருப்பை அறிவிப்பதற்கான தொடர்பு மொழியே ஊழையிடுதல் ஆகும். இது மனிதர்களுக்கு  எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

பூனை குறுக்கே போனால் காரியம் கெட்டுவிடும்...

உணவு தேட இனச்சேர்க்கைக்கு எனத் தனது எல்லைக்குள் நடந்து கொண்டேயிருப்பது பூனை.  மனிதர்களின் நல்ல காரியங்கள், சடங்குகள் பற்றி அதற்குத் தெரியாது.

யானை முடி செல்வத்தை தரக்கூடியது..

கழுதை, குங்கு, பன்றி போன்ற விலங்குகளின் முடியில் என்ன இருக்கிறதோ அதுதான் யானை முடியிலும் இருக்கிறது.  யானையின் வாலிலுள்ள முடியை அதிர்ஷ்டம் தரும் என்று அகற்றி விடுவதால், அதனை துன்புறுத்தும் கொசு, ஈக்களை விரட்டத் தூரிகை போன்ற வால் இல்லாமல் சிரமப் படுகிறது என்பதே கவலைக்குரியதாகும்.

தொழிநுட்ப செய்திகள்

சாரதி இல்லாமல் ஓடும் கார்கள் விரைவில்!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சாரதி இன்றி வீதியில் தானாகவே ஓடும் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முதற்கட்ட சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
அதை தொடர்ந்து அக்கார்களை பக்கிங்காம் ஷிரில் உள்ள மில்டன் கியன்ஸ் தெருக்களில் ஓட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கார் ஓடுவதற்கு வசதியாக அகலமான நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் 100 கார்கள் தயார் நிலையில் உள்ளன.
இக்கார்கள் எதிர்வரும் 2015ம் ஆண்டின் தொடக்கத்தில் ஓட தொடங்கும் இவற்றில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதனுடன் தேவையான பொருட்களையும் எடுத்து செல்ல முடியும்.
இக் காரின் கண்டுபிடிப்பு சம்பந்தமான செய்தி ஏற்கனவே தீபத்தில் வெளிவந்தது அனைவரும் அறிந்ததே.
இது மணிக்கு சுமார் 19 கி.மீட்டர் வேகத்தில் இயங்கும். அதற்கான கட்டணம் 2 பவுண்ட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு..!

ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர்.
அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன.
இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்.
இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:பகுதி/PART:06:---- "முடிவுரை"

தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

இந்த நூற்றாண்டின் கவிஞன் கண்ணதாசன் இப்படி கூறுகிறான்: 
"வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?"
இதன் கருத்து ஒரு மனிதன் இறக்கும் போது,அவனது உறவினர்களும் நண்பர்களும் வீடு வரை மட்டும் வருகிறார்கள்.அவனது துணைவியார்[மனைவி] வீதி வரை வருகிறாள்.அவனது அன்பு பிள்ளைகள் சுடலை வரை வருகிறார்கள்.அதன் பின் அவனை தொடர்வது யாரோ? என கேள்வி கேட்கிறான்.   
மிகவும் எல்லோராலும் அறியப்பட்ட பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த சித்தர் பட்டினத்தார் அதற்கான விடையை தருகிறார்.அவரின் ஒரு பாடல் மேலே கூறிய பாடல் வரிகளை ஒத்து போகிறது.
"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பு ஒழுக 
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தல மேல் வைத்தழுமை ந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே"
ஒரு மனிதன் இறந்த பின்,அவனது இறுதி பயணத்தில் உடன் வருவது யார்? என்ற கேள்விக்கு இந்த பாடல் பதில் அளிக்க முயல்கிறது.
"சேர்த்துக் குவித்துள்ள செல்வமா?" "அது வீட்டோடு தங்கிவிடும்!"
"மனைவியா?" "வீதிவரை துணை வருவாள்!"
"மகனா?" "சுடுகாடு வரை துணை வருவான்"
"கடைசிவரை வரும் துணை யார்?" "நல்வினை தீவினைகளே!" என்று பதில் அளிக்கிறது.
பட்டினத்தாருக்கு இப்படி ஒரு ஞானம் தந்த வாக்கியம்: "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்ற வாக்கியமே! 
இதன் கருத்து "மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக் கூட கடைசியில் கையில் கொண்டு செல்ல முடியாது" என்கிறது. 
பொதுவாக சித்தர் பாடல்கள் மிகவும் தத்துவமானவை,அப்படி பட்ட பாடல்களில் ஒன்று:
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி. 
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் ...போட்டுடைத்தான்டி"   
இந்த பாடலின் கருத்தை மேலோட்டமாக பார்க்கும் போது,இந்த ஏழையின் முயற்சி,இரங்கி பெற்ற மட்பானையை பாதுகாக்காமல்,வீணாய் போகிறது என்று தோன்றும்.ஆனால் அது உண்மையான கருத்தல்ல.நந்தவனம் என்பது பூமியை குறிக்கிறது.அது போல ஆண்டி என்பது மனிதனை குறிக்கிறது.இந்த பூமியில் பிறக்கும் எவரும் ஒன்றும் கொண்டு வருவதில்லை.ஆகவே அவன் ஒரு ஆண்டி.நாலு ஆறு,மொத்தம் பத்து மாதத்தின் பின் பிறக்கிறான்.ஆகவே இந்த பத்து மாதத்தை,தன்னை இந்த மனித உடலில் இந்த பூமியில் கொண்டு வந்த படைத்தவனை வேண்டுவதாக கருதலாம்.
தன்னுடைய உயிரை வைத்திருந்த உடலை மட்பானைக்கு ஒப்பிடுகிறார்.ஆகவே அந்த குயவர் கடவுளாகிறார். தன்னுடைய  உடல்நலத்தை பேணாது,வீணாக இந்த பூமியில் சுற்றித்திரிந்தது தனது வாழ்வை போட்டு உடைக்கிறான் என்கிறது.

"ஆறிலும் சாவு நூறிலும் சாவு" என்ற தமிழ் பழ மொழியையும் நினைவு கூறுங்கள்.அது சொல்லுவது என்னவென்றால் ஒரு மனிதன் ஆறு வயதிலும் சாகிறான்.நூறு வயதிலும் சாகிறான்.ஆகவே வாட்டமுறுவதிலும் அல்லது தன்னிலையிழப்பதிலும் ஒரு அர்த்தம் இல்லை.ஆகவே உங்கள் நல்ல முயற்சிகளை வைத்து,நீங்கள் வாழும் மட்டும் வாழுங்கள் என்பதே.

வாழ்க்கையும் இறப்பும் ஒரு நாள் சந்தித்தன.வாழ்க்கை மிகவும் பெருமையாகவும் கர்வத்துடனும் இறப்பிடம் சொன்னது என்னை எல்லோரும் விரும்புவார்கள்.ஆனால் உன்னை யாரும் விரும்புவதில்லையே என்று கூறி கொக்கலித்து சிரித்தது.

அதற்கு மிக அமைதியாக,ஒரு புன்னகையுடன் இறப்பு கூறியது:"நீ[வாழ்க்கை] ஒரு அழகான பொய்.நான்[இறப்பு] ஒரு கசப்பான உண்மை."என்றது.

ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் ஒவ்வொரு பயணத்தில் போகின்றனர்.பயணத்தின் நோக்கமும் அது போய் சேரும் இடமும் வெவ்வேறாக இருந்தாலும்,கடைசியில் எல்லோரும் மரணத்தை நோக்கியே போகிறோம் என்பதை மறுக்க முடியாது.மரணத்தை பற்றிய தெளிவும்,மரணதிற்கு பின் நடக்க போகும் நிகழ்வுகள் பற்றியும் தெரிந்து இருந்தால் மனசுக்குள் ஆத்திரமும்,அவசரமும் தலை தூக்க வாய்ப்புகள் ரொம்ப குறைவே.இதனால் என்ன ஆகும்.மனசு சந்தோசமாக இருக்கும்.மனசு சந்தோசமாக இருந்தால் ரொம்ப நாள் உயிர் வாழலாம்.சும்மா சாப்பிடுவதும் நித்திரை கொள்வதும் தான் வாழ்க்கை என்று வாழ்ந்தால் அதில் நீங்கள் ஒன்றும் அடையப் போவதில்லை.உங்களை அறிவுள்ளவராக மாற்றும் எந்தவித அனுபவத்தையும் நீங்கள் பெறவில்லை என்றால்,உங்கள் பார்வையில் இந்த உலகம் எப்படிபட்டது என்பதையும் அறியமாட்டீர்கள்.ஞானம் மிக பயனுடையது.நீங்கள் இந்த உலகை விட்டு போகும் போது,
நீங்கள்:"நான் எந்தவித  கவலை அல்லது வருத்தம் இன்றி வாழ்ந்தேன்"என்று சொல்லவேண்டும்.ஆகவே இந்த வாழ்வை நாம் நல் வழியில் நல்
நோக்கத்துடன் விவேகானந்தர் கூறியது போல "மரணம் வருவது உறுதியாக இருக்கும் போது மேலான இலட்சியத்திற்கா வாழ்ந்து இறந்து போவது சிறந்தது"என வாழ்வோமாக!

புறநானுறு 356 கூறுவது போல:"களரி பரந்து கள்ளி போகிப் பகலும் கூஉம் கூகையொடு பேழ்வாய் ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு அஞ்சுவந் தன்றுஇம் மஞ்சுபடு முதுகாடு" புறநானுறு [356 :1-4] அதாவது "களர் நிலம் பெருகிக் கள்ளி முளைத்தது.பகலில் கூவும் கூகைகளாலும் பிணம் சுடும் தீயின் வெளிச்சத்தாலும் சூழ்ந்த இந்த சுடுகாடு காண்போர்க்கு அச்சத்தை
வரவழைப்பது போல உள்ளது.அப்படிபட்ட காண்போர்க்கு அச்சத்தைத் தரும் கொடிய இடம் சுடுகாடு.நாடாண்ட மன்னர்கள் கூட முடிவில் அந்த சுடுகாட்டைத்தான் சென்றடைகின்றனர்.வாழ்க்கை நிலையாதது. ஒருவன் செய்த செயல்களுக்கேற்ப அவனைச் சாரும் பழியும் புகழும் அவன் இறந்த பிறகும் நிலைத்து நிற்கும்.ஆகவே, இறப்பதற்குமுன், நற்செயல்களைச் செய்து புகழைத் தேடிக்கொள் என்பதேயாகும்.இவ்வாறே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடலான மற்றும் ஒரு புறநானுறு பாடலும் ஆலோசனை வழங்குகிறது: 
"காடுமுன் னினரே நாடுகொண் டோரும்;
நினக்கும் வருதல் வைகல் அற்றே;
வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; 10
அதனால், வசைநீக்கி இசைவேண்டியும்
நசைவேண்டாது நன்றுமொழிந்தும்
நிலவுக்கோட்டுப் பலகளிற்றோடு
பொலம்படைய மாமயங்கிட
இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது  15
கொள்என விடுவை யாயின் வெள்ளென
ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்
ஈண்டுநீடு விளங்கும் நீ எய்திய புகழே."
[புறநானுறு 359:8-18]
அதாவது நாடுகளை வென்றவர்களும் அத்தகைய சுடுகாட்டைத்தான் சென்றடைந்தனர்.உனக்கும் அந்த நாள் வரும். இவ்வுலகில் அவரவர் செய்த பழியும் நிலைத்து நிற்கும்;புகழும் நிலைத்து நிற்கும்.அதனால்,பழியை நீக்கிப் புகழை விரும்பி,விருப்பு வெறுப்பு
இல்லாமல்,நடுவுநிலையில் இருந்து,நல்லவற்றையே பேசி,ஒளிறும் தந்தங்களையுடைய களிறுகளையும்,பொன்னாலான அணிகலன்களை அணிந்த குதிரைகளையும்,பொன்னிழை அணிந்த தேர்களையும் இரவலர்க்குக் குறையாது கொடுத்து அனுப்பினால்,வெளிப்படையாக,நீ மேலுலகத்திற்குச் சென்ற பின்னரும் உன் ஈகையால் உண்டாகும் புகழ் இவ்வுலகில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்கிறது.
"இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா..."
[பாலும் பழமும்/கவிஞர் கண்ணதாசன்]...........................END.........முடிவுற்றது.............................