[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ்(Homo erectus), ஹேமோ ஹபிலிஸ்(Homo habilis) ஆகியவையில் இருந்து பரிமாண வளர்ச்சி அடைந்தே ஹேமோ சேப்பியன்ஸ்(Homo sapiens/வாழும் மனித இனம்)என்ற இப்போதைய மனித இனம் உருவானது. பரிணாம வளர்ச்சியில் ஒரு செல் உயிரிகளில் இருந்து பல வகையான உயிர்கள் உருவாயின என்பது டார்வினின் கொள்கை.மாணிக்கவாசகரும் இதே போன்ற கருத்தை பாடியிருக்கிறார் . "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்" என்று அவ்வாறாக 0.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இப்போதைய மனித இனமான ஹேமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் உருவானது என்கிறது பரிணாம விதி எனப்படும் பரிணாம கொள்கை [evolution theory].இடையிடையே பல மனித இனப் பிரிவுகள் காலமாற்றத்திற்கு உட்பட்டு அழிந்துவிட்டன, உதாரணமாக ‘நியான்டர்தால்’[Neanderthal] மற்றும் ‘ஆஸ்த்ராலோபித்திக்கஸ் ’ [australopithecus] மனிதப்பிரிவுகள்
பல நூலாசிரியர்கள் சுமேரியனுக்கும் திராவிடனுக்கும் இடையே உள்ள இனம்,மொழி,பண்பாட்டு ஒற்றுமையை[உறவை] அடிப்படையாக கொண்டு இரு இனமும் ஒரே இன குழுவை[குடும்பத்தை] சார்ந்ததாக முடிவு செய்துள்ளார்கள்.அதாவது ஈலம்[Elam], சுமேரியா மக்கள் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள் என்பது அவர்களின் முடிவு.
டாக்டர் எச்.ஆர். ஹால் (Dr. H.R. Hall) என்ற வரலாற்று அறிஞர் மேசொபோடமியாவிற்கு திராவிடர்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தார்கள் என்கிறார்.அதே நேரம் வேறு அறிஞர்கள் திராவிடர்கள் தமது முன்னைய குடியிருப்பான மத்தியத்தரைக்கடல் பகுதியில் இருந்து இந்தியா புலம் பெயர்ந்தார்கள் என்கிறார்கள்.KP பத்மநாபா மேனன் திராவிடர்-சுமேரியர்களின் நெருங்கிய தொடர்புகளைப் பற்றி எழுதியுள்ளார் இவர் ஒரு சிறந்த வழக்கறிஞர்,நீதிபதி,வரலாற்றாசிரியரும் ஆவார்.பல கீழ்த்திசை மொழிப் புலமையாளர்கள்[Orientalists] சுமேரியர்கள் தொடக்க கால திரா விடர்கள் என்பதை ஒத்துக்கொள்கிறார்கள் .அங்கு இருந்து திராவிடர்கள் இந்தியாவின் வட மேற்கு பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள்.எனினும் அங்கு அவர்கள் பல காலம் வாழ முடியவில்லை . அவர்களை அங்கு வந்த ஆரியன் குழு தாக்கி அவர்களை நிரந்தரமாக தென் இந்தியாவில் தங்க வைத்து விட்டது.இதை, இந்த கருது கோளை ,நம்பகமான அறிஞர்கள் வலிமையாக ஆதரித்து வாதாடுகிறார்கள்.
சுமேரியர்களின் நூலின் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உட்பொருளை சரிவர வெளிப்படுத்தி யுள்ளார்கள்.சுமேரியனுக்கும் தமிழனுக்கும் இடையே உள்ள மொழி,பண்பாட்டு இனவொற்று மைகள் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட கால இடை வெளி என்பது இங்கு சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. பன்மொழிப் புலவரும் பேராசிரியருமான இலங்கையை சேர்ந்த மறைந்த ஆறுமுகம் சதாசிவம்,மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன்,அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு.போன்றோர் இதில் பல ஆய்வுகள்/முயற்சிகள் செய்துள்ளார்கள். பேராசிரியர் ஆ. சதாசிவம் மற்றும் முனைவர் கி.லோகநாதன் போன்றோர்கள் சுமேரிய மொழியையும், திராவிட மொழியையும், ஒப்பியல் முறையில் ஆராய்ந்து சுமேரிய மொழியையும் திராவிட மொழி என நிறுவினார்கள். இந்திய வரலாற்றாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி அவர்கள் கோயில் வழிபாட்டில் உள்ள ஒத்த தன்மையை சுட்டிக்காட்டியுள்ளார். திராவிடர்களின் மூதாதையர்களை மத்தியத் தரைக்கடல் பகுதியுடன் இணைக்கும் இந்த கருது கோளை ,நம்பகமான அறிஞர்கள் இன்னும் ஆதரித்து வாதாடுகிறார்கள்.
பேராசிரியர் ஆ.சதாசிவம் சமஸ்கிருதம், மலையாளம், பாளி, தெலுங்கு, கன்னடம், ஜேர்மன் முதலிய மொழிகளிற் புலமை சான்றவராக விளங்கினார். ஞானப்பிரகாசஅடிகளாரின் பின், பன் மொழிப்புலமையில் தலையாயவராக விளங்கியவர் இவரே. சுமேரிய மொழியையும், திராவிட மொழியையும், ஒப்பியல் முறையில் ஆராய்ந்து சுமேரிய மொழியையும் திராவிட மொழி என நிறுவினார்.
ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டு தொடங்கி கி.மு. 1500 வரை, இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள் வாழ்ந்து இப்பொழுது உலகப் பண்பாட்டின் சிறப்பாக விளங்கும் பல கலைகளை வளர்த்து உதவினர். பிறகு இவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய மக்கள் இவர்களை வென்று பாபிலோனிய நாகரிகத்தை வளர்த்தனர். சுமேரு மொழியும் அக்காடிய மொழிக்கு இடந்தந்து மறைந்துவிட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அது அழிந்துவிடவில்லை. பல இடங்கட்கு புலம் பெயர்ந்து சுமேரு மக்களில் பெரும்பான்மையோர் தென்னிந்தியா வந்து இலங்கையிலும் தென்னகத்திலும் குடியேறி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருங்குடியினராய் சிறந்தனர் என்று முனைவர் கி.லோகநாதன் கூறுகிறார்.மேலும் சுமேரு மொழி பழந் தமிழே! என்று சுமேருத் தமிழைப் பற்றி எளிமையான பல கட்டுரைகளை படைத்தும் உள்ளார். அவற்றில் ஒன்றே ஏண் உடு அன்னா[En-hedu-ana] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய The Exalatations of In-Anna. இதை சுமேருத் தமிழில் "ஈனன்னை சீர்பியம்" ஆக மிகவும் எளிமையாகத் தந்துள்ளார்.ஏண் உடு அண்ணா எனும் இந்த அம்மையார் தான் கி.மு மூன்றாம் மில்லென்னியத் தின் தலை சிறந்த மெய்ஞானியாக போற்றப்படுகிறார்.இவர் தான் சிறைப்பட்டு கிடந்த போது ஈனன்னையின் அருளை வேண்டிப் பாடிய பாடலே இது.அதன் மூலம் சுமேரிய மொழி, தொல் தமிழ் என்று மட்டும் அல்ல சுமேருத் தமிழ் பண்பாட்டிற்கும் இன்றைய தமிழர்களின் பண்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியும் அறியமுடிகிறது.இத் தொடரில் ஆழமான மெய்யறிவுச் சிந்தனைகள் மிளிரும் வரிகளையே தேர்ந்து அவற்றின் பொருளை விளக்கி எவ்வாறு திராவிட மெய்யறிவு சிந்தனைகளோடு அது இன்றும் தொடர்பு கொண்டிருக்கின்றது என்பதை அனைவரும் கண்டு மகிழும் வகையில் விளக்கி உள்ளார்.
அதே போல சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்? என்ற ஒரு கேள்வியுடன் இங்கிலாந்து நாட்டில் வாழும் திருமதி நிவேதா உதயராஜன்[வரலாற்று ஆய்வாளர்] தனது கருத்துகளை அலசுகிறார்.எனினும் 10 October 2012 இல் யாழ் இணையத்தில் "சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்?"என்ற கேள்வியுடன் ஆரம்பமான மெசொபொத்தேமியா சுமேரியர் பற்றிய இந்த தமிழ் கட்டுரை 14 December 2012
உடன் ஏனோ நின்றுவிட்டது.அதன் பிறகு யாழ் இணையத்தில் வெளி வந்த இந்த கட்டுரை,மீண்டும் ஒரு புதிய தொடராக இப் போது October 1, 2013 இல் இருந்து வணக்கம் லண்டன் இணையத்தில் தொடராக வெளிவருகிறது.உதாரணமாக வரலாறு என்றால்[பகுதி -1] , மெசொப்பொத்தேமியா வருகை [ பகுதி -2], விவசாயம் கண்டுபிடிப்பு [ பகுதி-3],பண்டமாற்று [பகுதி-4],கட்டடக்கலை[பகுதி-5],சீகுராட் [பகுதி–6]/February 3,2014,என்று தொடர்கிறது.சுமேரியனையும் சுமேரிய நாகரிகத்தையும் பற்றிய இந்த தமிழ் தொடர் ஒரு நல்லதொரு முயற்சி.இது முடியும் வரை தொடரும் எனவும் ,மேலும் தமிழனுக்கும் சுமேரியனுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளை பலர் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களுடன் அலசுவார் எனவும் நம்புகிறோம். மேலும் சில தகவல்களை ,தமது கருத்துகளை இவர் இங்கிலாந்து நாட்டில் வாழும் N. சிவ கணேசன் அவர்களுடைய தலைமையில், ஓர் இரு தொலைக்காட்சி நிகழ்வு மூலமாகவும் பொதுவாக தந்துள்ளார்கள்.அதில் முக்கியமானது "ஆதித் தமிழரின் அதி உன்னத வழர்ச்சிக்கு காரணமாக இருந்தது பொறி முறையாக்கப்பட்ட நீர்ப்பாசன முறை" என்பதே ,அந்த முறையை தான் நாம் தமிழர்களின் நாகரிகமான இங்கும்[சுமேரியாவிலும்] ,சிந்து சம வெளியிலும்,மூவேந்தர்கள் ஆண்ட பண்டைய தமிழகத்திலும் காண்கிறோம்.மேலே கூறிய இரண்டு இனங்ககளின் மொழிகளுக்கிடையே உள்ள ஒத்த தன்மைக்கு அப்பால்,மேலும் வாற்கோதுமை [பார்லி], கோதுமை பயிர் செய்கை[வேளாண்மை], மெசொப்பொத்தேமியாவில் ( இன்றைய தென் ஈராக்) இருந்து சிந்து சம வெளிக்கு பரவியது என்பதை பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.அது மட்டும் அல்ல "ethno-botanical
data tracking" கும் அதை உறுதிபடுத்துகிறது.மேலும் இந்த வேளாண்மை மெசொப்பொத்தேமியாவில்,இயூபிரட்டீசு[Euphrates] ஆறு பகுதியில், கி மு 8500 அளவில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பின் அது சிந்து சம வெளிக்கும் இந்திய துணை கண்டத்திற்கும் கி மு 6500 அளவில் அடைந்தது எனவும் நம்புகிறார்கள்.
பகுதி :15 அடுத்த வாரம் தொடரும்
வேறு பலர், சுமேரிய மொழியில் கிட்டத்தட்ட சம்ஸ்கிருத மற்றும் மலே மொழிகளின் வாடை அல்லவா அடிக்கின்றது என்று கூறுகின்றார்கள். தில்லை அடுத்து சுமேரிய / தமிழ் மொழிகளின் ஒன்றுமைச் சொற்கள் பற்றி ஒரு ஆராய்ச்சியில் இறங்கினால் நன்றாய் இருக்கும்!
ReplyDelete