தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி:16‏

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

நாம் மேலும் சில சுமேரியன்-தமிழர் தொடர்புகளை சுட்டிக்காட்டி அலச முன்பு,சுமேரிய நாகரிகத் தின் காலவரிசையை குறுகிய விளக்கத்துடனும் படத்துடனும்  கிழே தருகிறோம்.இது உங்களுக்கு அவர்களைப் பற்றியும் அவர்களின் நாகரிகத்தை பற்றியும் ஓரளவு மேலும் அறிய உதவும் என நம்புகிறோம்

சுமேரியர்களின் ஆரம்ப இடம்/தோற்றுவாய் சரியாக தெரியாது.பொதுவாக இவர்கள் கிழக்கில் இருந்து வந்ததாக கருதுகிறார்கள்.அத்துடன் இவர்கள் தங்களை சுற்றி வாழ்ந்த எந்த குழுக்களுடனும் மொழி அடிப்படையில் தொடர்பு இல்லாமல் இருக்கிறார்கள்.இவர்களை விட மற்ற எல்லோரும்  செமிட்டிக் இனஞ் சார்ந்தவர்கள்.உதாரணமாக ஹீபுரு, அரபு ஆகியன செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள் ஆகும்.கி மு 5000 ஆண்டளவில் விவசாய கிராமங்களின் தொகுப்பாக தொடக்கி,கி மு 2330   சார்கோன் மன்னனால் வெல்லப்பட்டு,இறுதியாக கி மு 2000 ஆண்டளவில் அமோரைட்[Amorite] இன மக்களின் படையெடுப்பு மூலம் முற்றாக வீழ்ச்சி அடைந்தது.அக்காடிய மொழியில் சுமர் என்றால் 'காலச்சார நாடு' என்று பொருள். சுமேரியாவிலிருந்து தான் நாகரிகங்களும், கலாச்சாரங்களும் தோன்றியிருக்கலாம் என்று சில ஆய்வாளர்களின் கருத்தும் கூட.உதாரணமாக  முதலாவது நாகரிகத்தைப் பற்றிய நூலொன்றை எழுதிய பேராசிரியர் எஸ்.என்.கிரமர் (Samuel Noah Kramer) தனது நூலுக்குசுமேரில் இருந்து வரலாறு ஆரம்பிக்கிறது” (History Begins at Sumar) என்று பெயர் சூட்டியதில் இருந்து மொசப்பத்தேமிய நாகரிகமே முதலாது என்பது அறிய முடிகிறது.

சுமேரிய நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களாக கருதப்படுபவை,ராணுவத்தை பராமரிக்க ஒரு சிறந்த தலைமை இல்லாதது,சுற்றியிருந்த கடல்களில் உப்பு தன்மை கூடியது,விளைநிலங்களை தரிசானது என குறிப்பிடுகிறார்கள்.

 மெசொப்பொத்தேமியாவில்  சுமேரிய நாகரிகம் /Sumer civilization in Mesopotamia
காலம்/PEROIDS:கி மு 5000-
நாடோடிகளாக கால்நடைகளை மேய்த்தபடி வேட்டையாடி உணவு தேடி அலைந்து திரிந்த "கருத்தத் தலை மக்கள்" என அழைக்கப்பட்ட மக்கள் கூட்டம் மேசொபோடமியா   வந்து அடை தல். அவர்கள் பயிர் நட்டு விவசாயம் செய்ய தொடங்கி னார்கள்.அது  மட்டும்  அல்ல முதல்  பட்டணங்களையும்   மா நகரங்களையும் அமைத்தார்கள் . இப் பிரதேசத்துக்குள் எப் பொழுது  நுழைந்தார்கள் என்ப தில் அறிஞர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், சுமேரியர்களே இங்கு முதன் முதலில் குடியேறியவர்கள்   என நம்பப்படுகிறது.  

 காலம்/PEROIDS:கி மு 4000 -
தமது கடவுள்களை வழிபட சிகுரத்[ziggurats] என அழைக்கப் படும் கோயில்களை கட்டினார் கள்.சிகுரத் பல பெரிய படிகளால்  கட்டப்பட்ட ஒரு கட்டடம். அதன்  முடிவில்  கோவில். இந்த கோவில் அந்த நகரத்தின் முதன்மை கடவுளுக்குரியது. சிகுரத்திலிருந்து அந்த நகரத்தை பார்க்கலாம்,அது மட்டும் அல்ல   சிகரம் எனும் தமிழ் வார்த்தையும் எனக்கு ஞாபகம் வருகிறது. கோயில்கள் மட்டுமே பெரிதாக இருந்ததே அன்றி நகருக்குப் பொறுப்பாக இருந்தவர்களோ குருமாரோ பெரிதாக எதையும் கட்ட வில்லை  அத்துடன் அவர்கள் பெரிய பலம் பொருந்திய நகரங்களையும் கட்டத் தொடங்கினார்கள். ஒவ் வொரு நகரத்திற்கும் ஒவ்வொரு முதன்மை கடவுள் இருந்தார்கள் .
உதாரணமாக   என்கி[Enki]  எரிது [Eridu] நகருக்கும்,என்லில் நிப்பூர் நகருக்கும்,ஈனன்னா/இஸ்தார் [Inanna/Ishtar]உருக் [Uruk] நகருக்கும் , நன்னா [Nanna] என்றழைக்கப் பட்ட சந்திரன் ஊர்[Ur] நகருக்கும் ஆகும் . ஆகவே சுமேரியர்களின் நகர மாநில அரசாங்கம் கடவுளின் ஆட்சியாக கொண்டு செயல் பட்டது என்று நாம் கருதலாம் அது மட்டும் அல்ல சிகுரத்தின் உயரம் பருவகால வெள்ள பெருக்கிற்கு பாதுகாப்பு இடமாகவும்  இருந்தது

 காலம்/PEROIDS:கி மு 3500 -
நதிகள் காவிக் கொண்டு வரும் வண்டல் மண் வெள்ளப் பெருக்கின் போது கீழ்ப் பிரதேசங் களில் படியவிடப்பட்டதனால் அப்பகுதி வளமான விவசாய நிலமாக மாறியது அதனால் மேசொபோடமியாவின் தெற்கில் பல சுமர்[sumer] நகரங்கள் குடியிருப்பிடமாகக்
தோன்றின . அவை ஊர்,உருக், எரிது,கிஷ், லாகாஷ், நிப்புர் [ Ur, Uruk, Eridu, Kish, Lagash, and Nippur] போன்றவை ஆகும்.இதில் உருக் உலகின் முதல் பெரும் நகரங்களில் ஒன்றாக கருதப் படுகிறது.மற்றது ஊர்.இது கி மு 2900 ஆண்டளவில் சனத்தொகை 50,000  எட்டி உலகின் மிகப்பெரிய நகரமாக விளங்கியது.இந்த நகரத்தின் மிகப் புகழ்பெற்ற தலைவனாக
கில்கமேஷ் [Gilga mesh] என்ற அரசன் இருந்தான் . இவன் பின்     புராண தலை வனாக மாறி உலகின் முதல் இதிகாசம் என கருதப்படும் கில்கமேக்ஷ் காவியம் படைத் தான்.மேலும் சுமேரிய மொழி யில் நீர்ப்பாசனத்துடன் தொடர் புடைய பல சொற்கள் காணப் படுகின்றன. ஆகவே தேர்ச்சி பெற்ற உழவர்கள் குழுவே இங்கு வந்து நாகரிகத்தை தோற்று வித்தது என நம்பலாம்?கி. மு 3500 ஆண்டளவில்  சுமேரியா வில் 12க்கும் மேற்பட்ட சுதந்திர நகரங்கள் அங்கு
 இருந்தன.
  
காலம்/PEROIDS:கி மு 3300-


சுமேரியர்கள் எழுத்துகளை சித்திர வடிவில் தொடங்கி, வாக்கியங்களையும்   சித்திரங்கள் மூலம்  வரைந் தார்கள்.இப் படம் கூரிய எழுத் தாணியால் மரங்கள் அதிகம் இல்லாத சுமேரியாவில் மக்கள் ,களி மண் தகட்டில் வரைந் தார்கள். இப்படி, இது பட எழுத்தாக உருவானது .கிமு 2700-2500 காலப்பகுதியில் வட்ட முனை
எழுத்தாணியும் கூரிய எழுத் தாணியும் கைவிடப்பட்டு ஆப்புவடிவ எழுத்தாணி புழக்கத் துக்கு வந்தது. இதனால் இவ் வாறு எழுதப் பட்ட எழுத்து முறை ஆப்பெழுத்து என அழைக்கப்பட்டது.பொதுவாக   தங்கள் வர்த்தக கணக்கிற்காக முதல் இந்த எழுத்துகளை பயன்படுத்தி கொண்டார்கள். பின் மத விடயங்களுக்கும் , ஏனையவைகளுக்கும் பாவித் தார்கள் .என்றாலும் மேல் வர்கத் தின்[அரசர்கள், பணக் காரர்கள் , கோவில் நிர்வாகிகள்]
ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டன. மற்றவர் களுக்கு அவர்கள் பெற்றோர் குலத் தொழிலில் பயிற்சி அளிக்கப்பட்டது  மேலும் தன் கைவிரல்களை  பயன்படுத்தி பத்து பத்தாக கணக்கு வடிவம் மேற் கொண்டார்கள்அதுமட்டும் அல்ல உலகம் அறிந்த முதல் இலக்கியம்"கில்கமேக்ஷ் காவி யம்" அங்கு தான் தொடங்கியது. இவர்களே  முதல் பதியப்பட்ட 'ஹம்முரபி சட்டத் தொகுப்பை '[Hammurabi's Code]யும்  தந்தார்கள் 


காலம்/PEROIDS:கி மு 3200-

சக்கரம் யாரால் கண்டுபிடிக்கப் பட்டது என நிட்சியமாக தெரியா விட்டாலும்,அப்படி கண்டுபிடிக்கப்பட்ட மிக பழைய சக்கரம் மெசொப்பொத்தேமியாவில் கிடைத்துள்ளது.கி மு 3500 ஆண்டளவில் சுமேரியர்கள் சக்கரத்தை முதல் மட்பாண்டம் செய்யவும் அதன் பின் கி மு 3200 ஆண்டளவில் தேருக்கும் பாவித் துள்ளார்கள்.மேலும் அச்சக்கரங்களின் உதவியால்
மாடுகள் மீது கலப்பையை பூட்டி நிலம் உழுதார்கள்.தூர இடத்திற்கான போக்குவரத்தும் இலகுவானது . அதனால் வர்த்தகமும் பெருகி யது.போரிற்கும் பாவித்தார்கள் . முதன்முதலில் சக்கரங்கள் மிக திடமான மரப்பலகைகள் குறுக் காக வைக்கப்பட்டு உருவானது. ஆனால், அவை பார்க்க அழகாக இல்லாமலும், மிகவும் எடை யுடனும் இருந்தது. காலப் போக்கில் சக்கரங்கள் எடை குறைவுடன் செய்யப்பட்டது.

காலம்/PEROIDS:கி மு 3000-


1]சுமேரியர்கள் 60 இலக்கங்கள் கொண்ட கணித முறையை செயற்படுத்தினார்கள்.ஒரு மணி நேரத்துக்கு 60 நிமிடங்கள் என்னும் கால அளவும்,ஒரு நிமிடத்திற்கு 60  வினாடிகள் என்னும் கால அளவும் இந்த அடிப்படையில் இவர்களால் பிரிக்கப்பட்டதே.அதை இன்னும் நாம் பாவிக்கிறோம்.மேலும் வட்டத்தை 360 பாகையாகவும் பிரித்தார்கள்.கணிதத்தில் இவர் கள் நன்கு தேர்ச்சி
அடைந்து இருந்தார்கள்.உதாரணமாக கூட்டல்,கழித்தல்,பெருக்கல், பிரித்தல்,இருபடி முப்படி சமன் பாடுகள்,பின்னங்கள் போன்ற வைகள் அறிந்து இருந்தார்கள்.
2]சந்திரனின் பிறைகளை ஆராய்ந்து பௌர்ணமி, அமா வாசை அடிப்படையிலும், மேலும் இரவும், பகலும் சந்திரச் சுழற்சியால் வருகின்றன என்ற நம்பிக்கையாலும் சுமேரியர்கள், சந்திரச் சுழற்சியின் அடிப் படையில் , நாட்காட்டிகளை அமைத்தனர். அங்கு 12 சந்திர மாதங்கள் இருந்தன. 3]இவர்கள் கட்டடங்கள் கட்ட களிமண் ணாலான சுட்ட/வெய்யிலில் காயவைத்த செங்கற்கள், பயிர்களுக்கு நீர் பெற நீர்பாசனம் அதாவது அணைகள் மூலமாக நீர் சேமித்து,கால்வாய்கள் வழியாக நிலங்களுக்கு நீர் விநியோகிக்கும் நீர்ப்பாசனம்  ஏர் கலப்பைகள், கம்பளியில் இருந்து உடை நெய்ய நெசவுத் தறி, இப்படி பல கண்டு பிடித் தார்கள்.இவைகள் எல்லாம் ஒரு மனிதநாகரிகம் வளர்ச்சி யடைய முக்கியமானவை ஆகும்  

 காலம்/PEROIDS:கி மு 2700- 
பொதுவான மற்றவைகள்:
1] மக்கள் நகரத்தை நோக்கி போய் அங்கு வசிக்கத் தொடக்கி அரசாங்கம் ஒன்று உருவானதும் ,சமுதாயம் வெவேறு மக்கள் வகுப்பினராக பிரிக்கப்பட்டன. அதி உயர் மேல் வகுப்பினராக அரசனும் அவன் குடும்பமும் அமைந்தன.அதே போல அதி கீழ் வகுப்பினராக அடிமைகள் அமைந்தன.அதாவது ஒரு வித வர்ணாசிரம தர்மம் அங்கு  நிலவியது.
2]உடைகள் ஆட்டுத் தோல் அல்லது கம்பளியால் செய்யப்பட்டன. ஆண்கள் முட் டளவேயான குறும்பாவாடை யையும் பெண்கள் நீண்ட உடையையும் அணிந்தார்கள்
3] கலையும் கவிதையும் மன்னர்கள், பணக்காரர்கள் ஆகி யோரின் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியாக இருந்தன.
பெரும்பாலானவை ஆண்டவன் புகழையும் ஒரு சில, மன்னரை வாழ்த்தியும், வரலாற்றுச் சிறப் பான நிகழ்ச்சிகளைப் போற் றியும் இருந்தன.
4]
அவர்கள் விளைவித்த உணவு தானி யங்கள் ஏராளமாய் விளைய, அதனை தங்களுக்கு தேவை யான மரம், கட்டிடக்கல், கணிம மற்றும் உலோகங்களுக்காக   விற்றனர்.அவர்களின் எழுதும் திறன், எண்களை பயன்படுத்தும் அறிவு ஆகியவை அவர்களுக்கு நீண்ட தொலைவு வரை வர்த்தகம் செய்ய உதவியது. ஆகவே உலகின் மற்ற பகுதிகளிலிருந்து இவ்வாறு வர்த்தகம் செய்ய ஏதுவாக படகு களையும் வடிவைமைத்தார்கள் .மேலும் பண்டமாற்று முறை யையும் முதன்முதலில் அமுல்
படுத்தினார்கள்.


 காலம்/PEROIDS:கி மு 2330
அக்காடிய மக்களால் சுமேரியா முழுவதும் கைப்பற்றப்பட்டு, அக்காடியாவின் ஆட்சிக்கு அது உட்பட்டது.கி.மு 2340 ஆம் ஆண்டளவில் சார்கோன் மன்னனால் முதலாவது செமிட்டிக் அக்காடிய இராச்சியம் அங்கு நிலவியது.அவர் 55 வருடங்கள் கி மு 2334-2279 வரை ஆண்டார்.

 மிகச் சிறந்த நாகரிகமாகப் போற்றப்படும் சுமேரிய நாகரிகத்துக்குப் பெருமை கொடுத்தது அது முதல் இலக்கியம் படைத்ததுதான். இலக்கியங்கள் பொதுவாக  நாகரிகத்தின் வெளிப்பாடுகளாகும்.மேலும் சுமேரியாவில் கி.மு. 2700ஆம் ஆண்டிலேயே நூலகங்கள் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அங்கே  கவிதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள் முதலியவை எழுதப்பட்ட மண் பலகைகள் இருந்துள்ளன.சங்க இலக்கியமான புறநானூறு 183 உம்  கற்றல் நன்றே! சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்; அரசும் செல்லும்; என்று வாதாடுகிறது.


"பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
மூத்தோன் வருகஎன்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்"[புறநானூறு 183]

அவர்[கல்வி கற்பிக்கும் ஆசிரியர்] சொல் சொன்னபடி, அவர் மனம் கோணாத படி கல்வி கற்பது சிறந்தது. ஒரே வயிற்றில் பிறந்தாலும் சிறப்பாக உள்ள மகனின் பால் தாயின் மனம் சாயும் , கல்வி கற்காத மகனை தாயும் மதிக்க மாட்டாள். ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு விழா நடக்கும் போது, அந்த குடும்பத்தில் இளையவன் ஆனாலும், அறிவுள்ளவனுக்கே முதல் மரியாதை கிடைக்கும், அவன் பின்னர் அரசனும் செல்வர் .என்கிறது.

(1) நிர்வாக அமைப்பாக நகரங்கள் அமைதல்[நகரக் குடியிருப்புகள்](2)வரையறுக்கப்பட்ட   நிலப் பகுதி கொண்ட அரசியல் அமைப்பு [அரசாங்க அமைப்பு] (3)தேர்ந்தெடுத்த சில தொழில்களில் தொழிலாளர்கள் வித்தகர்கள் ஆதல்(4)வரையறுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகள் (5)பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பெரிய கட்டடங்கள், (6) குறிப்புகளை இலக்கியங்களை நிரந்தரமாக பாதுகாப்பாக வைக்கக்கூடிய அமைப்பு முறை[எழுத்துக்கள்,கணிதம்,..] (7)தொலைதூர வாணிபம்,(8) விஞ்ஞானம் ,கலை ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம்  மற்றும் தேவைக்கு அதிகமான உற்பத்தி போன்றவைகள் ஒரு நாகரிக சமுதாயத்தை சுட்டிக்காட்டும் என பொதுவாக கற்றறிவாளர்கள் ஒத்து கொள்கிறார்கள்.இவைகள் எல்லாவற்றையும் நாம் மேலே கூறிய சுமேரியர் நாகரிகத்தில் காண்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment