"பால் கடல் கடைதல்"


நடந்தது என்ன? ....ஒரு ஆய்வு
வேதகால [ கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம் ] தொடக்கத்தில் அசுரரும் தேவர்களும் சிறு தெய்வங்களாகவே கருதப்பட்டார்கள்.சிலர் இரண்டு நிலையையும் கொண்டிருந்தார்கள்[வருணன்].அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில்[ வேதம்= மறை ] பயன்படுத்தப்பட்டுள்ளது. ரிக் வேதத்தில் சுரர் என்ற சொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்துஎன்ற எழுத்தை நீக்கிப் பிற்காலத்தில் சுரர்[தேவர்என்ற சொல்லை உருவாக்கினார்கள். பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது. வேதப் பாடல்களில் உள்ள துதிகள்  இயற்கையையே பாடுகின்றன. இந்திரன், வருணன், அக்னி என்று சொல்லப் படுபவை ஐம்பூதங்களே.அசுரர் என்றால் தீயவர்கள்,அவர்களுக்கும் தேவர்களுக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும் என்பதை மட்டும் கேட்டுப் பழகி வந்த நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக  இருக்கும்.. 
பிந்திய  பிரமாண நூல்களான  புராணங்கள்[புராணம் என்ற சொல் பண்டைக் கதைகள்,உலக வரலாறுகள் என்ற பொருளிலேயே  பயன்படுத்தப்படுகின்றது.பரம்பரையாகக் கூறப்பட்டு வந்த புராணங்கள் 18. இவை மகாபுராணங்கள்  எனப்படும்.வேதவியாசர் புராணக்கதைகளைக் கூறுகிறார்.வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் கி.மு.6 அல்லது கி.மு. 7-ஆம் நூற்றாண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.மேலும்.குப்தர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் கி.பி.300 க்கும் முற்பட்டதாகக் கருத  இயலும் ] ,இதிகாசங்கள் , உபன்யாசங்கள் , கீதை  என்பனை   சமஸ்க்ருதத்தில் எழுதும் போதே  இருக்கு வேதத்தில்[வேதங்களை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பிரித்துள்ளனர். "ரிக்' என்றால்"துதித்தல்'. முதல் வேதமான ரிக்வேதம் இந்திரன், வருணன் ஆகிய தேவர்களைத் துதித்துப் போற்றுகிறது. "யஜ்' என்றால்"வழிபடுதல்' . வேள்வி செய்து வழிபடும் முறையை யஜுர் வேதம் குறிப்பிடுகிறது."ஸாம்' என்றால் "சந்தோஷப்படுத்துதல்'அல்லது "சமாதானப்படுத்துதல்'. இனிமையோடு பாடலாகப் படிக்கும் விதத்தில் இந்த வேதம் அமைந்துள்ளது. நான்காவது வேதம் அதர்வனமாகும். "அதர்வன்' என்பதற்கு "அக்னியையும், சோமனையும் வழிபடும் மதகுரு' என்று பொருள்.] உயர்வாக சொல்லப்பட்ட அசுரர் என்ற சொல்,உயர்ச்சிப் பொருளை மாற்றி, இதற்கு அரக்கர் என்று பொருளிட்டுவிட்டார்கள்.மேலும் தேவர்கள் நேர்மறை சக்திகளாகவும் அசுரர்கள் எதிர்மறை சக்திகளாகவும் சித்தரித்தார்கள். .

புராணங்களை உற்று கவனித்திருக்கிறீர்களா? அசுரர்களை எப்படி காட்டி இருப்பார்கள், மாமிசம் உண்பவர்கள், அட்டுழியம் செய்பவர்கள். தேவர்கள் அமிர்தம்[கள்ளு/மது] அதாவது சைவம் உண்பவர்கள்[சோமக்கள்ளைக் குடிப்பவனே! எங்கள் யாகத்திற்கு (கால்நடைகளைக் கொன்று நடத்தும் விருந்துக்கு) வருக; கள்ளை அருந்துக, செல்வங்களைத் தரும்பசுக்களைத் தரும் உனது செயல் திருப்தி அளிக்கிறது./ரிக் வேதம்இந்திரன் துதி/மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 2  மேலும் சுரன்[தேவர்] என்றால் சுரபானம் (மது) அருந் துபவர்கள் எனவும் பொருள் படும்], அப்பாவிகள். இது நாம் சாதாரணமாக பார்ப்பது. உற்று கவனியுங்கள். அசுரர்கள் அளவு கடந்த பக்திமானாக இருப்பார்கள். பெண்கள் பக்கம் செல்லவே மாட்டார்கள். நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்வது எல்லாம் ரவுடியிசம் மட்டுமே. உதாரணமாக யாகத்தைத்[யாகம் = வேள்வி ] தடுப்பார்கள்.

ஆனால் மாறாக தேவர்கள் எந்த அராஜகத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் பெண் பித்தர்கள், அடுத்தவன் மனைவியை கவர்பவர்கள், சூதாடுவார்கள், துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள்.[ “வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்”/ரிக் வேதம்இந்திரன் துதி/மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6 / குறிப்பு:-  ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள் என்றும், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.] ஆனால் அவர்கள் நல்லவர்கள். இது கொஞ்சம் முரணாக இருக்கிறதல்லவா?
 மறைமலை அடிகள் என்ன சொல்லுகிறார் என்று பார்போம்

ஆரியர்கள் இந்திய பகுதிக்கும் வரும்பொழுது வடக்கே, ஆப்கானிசுதான் வரை தமிழர்கள் அரசாட்சி வழங்கியதாக குறிப்பிடுகிறார். ஆடு, மாட்டை ஓட்டி வந்த ஆரியர்கள்{இந்திரா! “மரங்களில் தங்கி, இன்பமாகி, இரையை நாடிப் பறந்து செல்லும் பறவைகளைப்போல், ஆரியர்களாகிய நாங்கள் ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்குப் போகும் போது எங்கள் தேர்களைக் காப்பாற்றவும்/மண்டலம் 2, அதிகாரம் (சூக்தம்) 31, பாடல் (சுலோகம்) 1, இந்திரன்! ஒவ்வொரு நாளும் நல்லதையே செய்து கொண்டிருக்கிறான். அவனை எங்களுடைய (ஆரியர்களுடைய) பாதுகாப்பிற்காக, பால்காரன் பால் கறப்பதற்குக் கறவைப்பசுவை அழைப்பது போல் அழைக்கிறோம்./மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 1] }இந்திய பகுதியில் வரும் பொழுது, அக்காலத்திலேயே மாட மாளிகைகளையும், கோட்டைகளையும் கட்டி, நல்லாட்சி புரிந்த அரசர்களை கண்டு வியந்தனராம். அரசியல்முறை தவறாது வாழ்ந்த அரசர்களை "அசுரர்" என்று பெயரிட்டு வழங்கினார்களாம். இருக்கு வேதத்தின் (Rigveda) முதல் ஒன்பது மண்டிலங்கள் முழுவதூஉம் "அசுர" என்னஞ்சொல் "வலிய" அல்லது "அதிகாரமுடைய" என்னும் பொருளில் உரிச்சொல்லாய் வழங்கப்பட்டு வருகின்றதென்றும், "அசுரர்" எனப்படுவதற்கு "தலைவர்" என்று பொருள் வழங்கப்பெற்றதாகவும் கூறுகிறார்.
ஞிமிறு (தமிழ்)= மிஞிறு (ஆரியம்)
தசை (தமிழ்)= சதை (ஆரியம்)
விசிறி (தமிழ்) = சிவிறி (ஆரியம்)
என்று பல சொற்கள் எழுத்து மாறி வந்ததுப் போன்றே அரசர் என்பது அசுரர் ஆனது என்கிறார்.
[மேலும்  வரலாற்று ஆசிரியர்கள் பி.டி.சீனிவாச அய்யங்காரிலிருந்து பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர் உள்பட கூறியிருப்பது எல்லாம் - இந்த அரக்கர்கள், அசுரர்கள் என்பவர்கள் எல்லாம் திராவிடர்கள்தாம்
உதாரணமாக பால் கடல் கடைதலில் தேவர்களை பொதுவாக நல்லவர்களாகவும் அசுரர்களை தீயவர்களாகவும் அழைத்துள்ளனர்.ஆனால் உண்மையில் இருவரும் மிகவும் கடின மூர்க்கத்தனமான ஒற்றுமை இல்லாத தொடருந்து எதிர் அணியுடன் முட்டி மோதும் வீரர்களாகும்.

தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவதியலாத காரியமென யறிந்த  மகாவிஷ்ணு ,தேவர்களிடம் உங்கள் முன் இருக்கும் வேலை மிகவும் கடினமானது ,உங்களால் மட்டும் தனியாக  பாற்கடலைக் கடைய முடியாது ,அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும்.அதனால் உங்களுக்கு அசுரர்களின் உதவி வேண்டும் என்று எடுத்து கூறினார் .அதனால் தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். திரண்டெழும்(சாகாமல் உயிர்வாழ உதவும்) அமுதத்தில் சரிபகுதி  என்றனர்நம்பினர் அசுரர்கள் .ஆனால் இது ஒரு தந்திரமே.
Add caption
“அசுரர்கள் ஆக தமது ஆற்றலை மட்டுமே பயன்படுத்துவார்கள், அவர்களின் பங்கான  "சாவ வரம்" கிடைக்காது,நான் அதை பார்த்துக் கொள்வேன்” என மகாவிஷ்ணு உறுதி கூறினார் தேவர்களுக்கு .மேலும் மகாவிஷ்ணு  எடுத்த அவதாரங்கள் எல்லாம் அசுரர்களை - அரக்கர்களைக் எமாற்றி கொல்லத்தான். இராவணனைக் கொன்றதும் அப்படியே! ராவணன் செய்த தவறு என்ன? அடுத்தவன் மனைவியை கடத்தி சென்றது. ஆனால் இந்திரன் மாதிரி கற்பழிக்கவில்லையே. தன் தங்கைக்கு தீங்கிளைத்தவனை தண்டிக்க வேண்டும் என்று எந்த அண்ணனுக்கும் ஆசை இருக்கும். இது நியாயமான ஆசைதானேசொல்லப்போனால் சீதையை மரியாதையாகத்தான் நடத்தினான். ராவணன் மிகச்சிறந்த பக்திமான். நல்ல அரசன். கடைசி வரை நேர்மையாக போரிட்டவன்.கடைசியில் இராமன் ஏமாற்றுகளால்  சீதையை மீட்டான். எனினும், சீதையின் தூய்மையை .நம்பவில்லை.

  சீதையை "அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?" என்று ராமன் குற்றம்சாட்டுகின்றான். இராவணனின் சிறையில்  உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த சீதையைப் பார்த்து, "இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ?"என மேலும் ராமன் கூறுகிறார்.

கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது.பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள்நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை.

     "புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல்
     ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்
     தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்"

அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான்.

     "நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக"
     "மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து"

அன்று நடந்தது என்ன? இன்று நடப்பது என்ன ?

அதை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. மீண்டும் ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையை நம்பாமல்  காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். சீதைக்கு நடந்த கொடுமைக்கும் அவள் அடைந்த துயரங்களுக்கும் யார் காரணம்? ?மகாத்மா காந்தி என்ன கூறினார் தெரியுமா ?"என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்."என்றல்லவா?

சிறிதளவு உழைப்புக்கு பெருமளவு பயன்களை அனுபவிப்பது ஆளும்வர்க்கம். உழைக்கும் வர்க்க மக்களுக்கு மிகக்குறைந்த பயன்களையே அது அனுமதிக்கும். இது நாம் அறிந்த உண்மை

இப்ப கூறுங்ககள் "எந்த பக்கம் நல்லதுஎந்த பக்கம் தீயது ?"

 இருவரும் தமது நம்பிக்கைக்காக  கொலை செய்யக் கூடியவர்கள். இருவருமே தமது சுய நலத்திற்க்காக தமது வித்தியாசங்களை ஒரு புறம் தள்ளியவர்கள் , இருவருமே கொடூர வீரர்கள்.

இன்றைய நவீன உலகில், ஒரு உதாரணத்திற்கு இஸ்ரேலியர்களையும்   பலஸ்தீனியர்களையும்  எடுங்கள் ."வெஸ்ட்  பாங்கில்" ஒரு பகுதி நிலத்திற்காக வருடக்கணக்காக ஒரு மோதலில் இடுபட்டுள்ளார்கள் இருவருமே அந்த இடத்திற்கு தாமே உரிமை உடையவர்கள் என நம்புகிறார்கள்.இருவருமே ஒரு கூர்மையான விரோதிகள். .இரு பக்கத்திலும்  உள்ள தீவீரவாதிகள் மிகவும் கொடூர தந்திரங்களை தமது இலக்கடைய பாவிக்கிறார்கள் .என்றாலும் ஒரு சமாதானத்தின் அடிப்படையில் தமது வேறுபாடுகளை ஒரு பக்கம் ஒதுக்கி கொள்கையளவில் ஏற்றுள்ளார்கள் .

ஆகவே மீண்டும் உங்களை கேட்கிறேன் "எந்த பக்கம் நல்லதுஎந்த பக்கம் தீயது ?"

மீண்டும் நாம் "பால் கடல்" பக்கம் போவோம் .இது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு கூட்டு முயற்சி. மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி பாற்கடலை  கடைந்தனர். கயிறான பாம்பின் தலைப் பக்கம் பற்றி, வலிந்து கடைந்தோர் (கதைப்படி) அசுரர்கள். வாலைப் பிடித்து   கடைந்தோர் தேவர்கள்.தலைப்பக்கமாக அசுரர்கள் இருந்ததால் பாம்பின் விஷக்காற்று பட்டு, அசுரர்களின் சிவந்தமேனி கறுப்பாகி விடுகிறது.சிவந்தமேனி கறுப்பாகிற அளவிற்கு அசுரர்கள் கடுமையாக உழைத்து பொருட்களை உருவாக்குகிறார்கள்.அப்போது பாற்கடலை கடைய, கடைய காமதேனு, கற்பக விருட்சம், உலக அழகியான லக்ஷ்மி என்று ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளியே வருகிறது. அவை எதற்குமே அசுரர்கள் ஆசைப்படவில்லை. எல்லாவற்றையும் தேவர்களே எடுத்துக்கொண்டனர்.இறுதியாக அமுதம் வெளிவருகிறது. சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்திற்கு மட்டுமே அசுரர்கள் ஆசைப்பட்டார்கள். அதைக்கூட முழுதாக தமக்கே வேண்டுமென அசுரர்கள் கேட்கவில்லை. தங்களுக்கும் கொஞ்சம் அமுதம் தரப்பட வேண்டுமென்றுதான் கேட்டார்கள்.

இடையில் வந்த பொருளையெல்லாம் தம தாக்கிக் கொண்ட தேவர்கள், இறுதியிலும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அமுதம்  அசுரருக்குத் தர மறுத்து விட்டனர். இதனால் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை ஏற்பட்டபோது, மோகினி வடிவத்தில் வந்த மகாவிஷ்ணு தேவர்களைப் பார்த்து நீங்கள் இப்படி அநியாயம் செய்யலாமா? இது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது! என்று தேவர்களை வெறுப்பது போலும், அசுரர்கள் பக்கம் சார்ந்து பேசுவது போலும் நடிக்க, அதை நம்பிய அசுரர்கள் மோகினியிடம் அவளையே அனைவர்க்கும் அமிர்தத்தைப் பங்கிட்டளிக்குமாறு வேண்டினர். தேவர்களும் அதனை ஆமோதித்தனர். பின்னர் தேவர்களை ஒரு பக்கமும், அசுரர்களை மற்றொரு பக்கமும் வரிசையாக உட்காரச் செய்தாள். பின்னர் அசுரர்களைத் தன் மோகனச் சிரிப்பால் வசப்படுத்திக்கொண்டே அவர்களுக்கு சுராபானத்தையும், தேவர்களுக்கு அமிர்தத்தையும் பங்கிட ஆரம்பித்தாள். மோகினியின் மாயத்தால் அசுரர்களுக்குச் சுராபானத்திற்கும் அமிர்தத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை.மேனியெல்லாம் கருக கடுமையாக உழைத்து அசுரர்கள் பாற்கடலை கடைந்தது உயிர்வாழ உதவும் அமுதத்திற்காகத்தான். அதைக்கூட தராமல், தேவர்கள் மகாவிஷ்ணு உதவியுடன் ஏமாற்றிவிட்டர்கள் .

ஏமாற்றுவது  மகாவிஷ்ணுவிற்கு கை வந்த கலை.மாவலி சக்கரவர்த்தி, பெரும் புகழ் பெற்ற மன்னன். அவனை தீயவன் என்றும், கொடியவன் என்றும்  வர்ணித்து, அவன் தொடர்ந்து ஆண்டு கொண்டிருந்தால், நாம் ஆட்சிக்கு வர முடியாது.இப் பொழுதே அவனை வீழ்த்தி விட வேண்டுமென்று அவனைப்பற்றி இல்லாததும், பொல்லாததுமாகச் சொல்லி, அவனை அழிப்பதற்காக தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டு, அதற்கு அவர், ``பயப்படாதீர்கள், நான் அவனை அழித்து விடுகிறேன் என்று சொல்லி வாமனாவதாரம் எடுத்தா ரென்றும், எடுத்து மூன்றடி மண் கேட்-டாரென்றும், அவனும் கொடை வள்ளல் என்ற காரணத்தால் தருவதாக வாக்களித்தான் என்றும், வாக்களித்தபடி மூன்றடி மண் கொடு என்று கேட்டு, இரண்டடியை பூமியிலே அளந்து விட்டு, மூன்றாவது அடிக்கு நிலம் இல்லாத காரணத்தால் அவன் தலையிலே காலைப் பதித்து அவனை அழித்து விட்டான் என்றும், அப்பொழுது இறக்கும் தறுவாயில் மாவலி மன்னன், மகாவிஷ்ணுவைப் பார்த்து, ``சரியாகவோ, தவறாகவோ என்னை நீங்கள் இன்றைக்கு வீழ்த்தி விட்டீர்கள், ஆனால் நான் என்னுடைய மக்களை ஆண்டுக்கொரு முறை போய்ப் பார்த்து அவர்கள் நன்றாக இருக்கிறார்களா, வளமாக வாழ்கிறார்களா என்று தெரிந்து கொள்ள என்னை நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டானென்றும், அதற்கேற்ப அவனுக்கு அந்த வரம் வழங்கப்பட்டது  அதுதான் ஓணம் பண்டிகைத் திருநாள் ஆகும்

இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம். மாவலி என்ற மன்னன், அரக்கன் அல்ல, நல்லவன், மனிதன் தான் மக்களை வாழ வைத்தவன், தன்னுடைய குடிமக்களுக்கு செங்கோல் மூலமாகச் சிறப்பு செய்தவன், அவர்களுடைய வாழ்வையெல்லாம் செழிக்க வைத்தவன், இப்படித்தான் தேவர்கள் அசுரர்கள் என்ற இந்த இரண்டு பிரிவினர் பற்றிய வரலாறு இருக்கிறது

இன்னும் ஒரு அவதாரத்தில் கடவுள் விஸ்ணு ராமனாக அனுமனின் சகோதரனை பின்னல் யுத்த  தர்மத்திற்கு புறம்பாக கொலை செய்து அனுமனின் உதவியை பெற்றார் .ஒரு தனிப்பட்ட உதவியை பெற ,எப்படி கடவுள் இந்த கொடூர செயலை செய்தார் ?
இந்த கடவுள் அவதாரமான ராமன் மேலும் மிகவும்  ஈவு இரக்கமின்றி சம்புகாவின் உயரை தவம் செய்கிறான் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே பறித்து எடுத்தான். இப்போது ராமர் போல் ஒரு அரசன் இருந்தால் சூத்திரர்களின் கதி என்ன ?

ஒரு சமயம் என்பது நீதி, அன்பு ,மானிடம்,சம உரிமை என்பனவற்றினை முலமாக,அடிப்படையாக கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை ,இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும் ,தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல் ,அது கருப்போ வெள்ளையோ உயரமோ குட்டையோ பணக்காரனோ ஏழையோ எல்லோரிடமும்    ஒரே தன்மை ,நிலைபாட்டை உடையதாக இருக்க வேண்டும்.  
[ஆக்கம்:கந்தையா  தில்லைவிநாயகலிங்கம்]

6 comments:

  1. அண்மையில் லவகுசா திரைப்படம் பார்த்தேன்.அக்கதையில் இராமனே வில்லனாக உணரமுடிந்தது.அத்துடன் இராம பாத்திரத்தில் வெறுப்பும் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, October 20, 2012

      நீங்கள் சொல்வதில் முற்றிலும் நியாயம் உண்டு.

      .......காட்டில் இருந்து மீண்டாள். கட்டிய புருஷனே அவளைத் தீக்குளிக்கச் சொன்னான். சொன்னது அவனளவில் நியாயம் என்றாலும், எந்தக் குற்றமும் செய்யாத சீதா, கணவன் தன் மீது சந்தேகப்பட்டானே என்று துடித்துப் போனாள். தீ கூட அவளைச் சுடவில்லை. ஆனால், வார்த்தைகள் சுட்டன. வீட்டுக்கு வந்தாள். பட்டாபிஷேகம் முடிந்து சில காலம் கணவனுடன் சுகவாழ்வு. இப்போது அவள் கர்ப்பிணி. அயோத்தியின் வாரிசுகளை[லவ, குச ] சுமந்து கொண்டிருக்கும் அவளை, உலகம் சந்தேகிக்கிறதே என்பதற்காக நிரந்தரமாக ஒதுக்கி வைக்கிறான் ராமன். என்ன கொடுமையப்பா இது!

      சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. "தனக்கு தானே நிகர் என்ற பெருமையுடைய தசரத சக்கரவர்த்தியின் குமாரர் ராமபிரான், எனக்கு செய்த இந்தக் கொடுமையை நீங்கள் கேள்விப்பட்டால் துவண்டு போவீர்களே! என்ன செய்வேன்! ராமனின் ஆட்சி என்றாலே நல்லாட்சி என்று தான் பொருள். அந்த நல்லாட்சி நடத்துபவரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் இந்த வனவாசத் தண்டனை? எதற்காக எனக்கு இந்தத் துன்பங்கள் வந்தன?"................

      ................. சீதை "லட்சுமணா! நீ நாடு திரும்பு. உன் அண்ணனிடம், என்னைச் (சீதா) சொல்லிக் குற்றமில்லை, உங்களைச் சொல்லியும் குற்றமில்லை, எல்லாம் என் விதி. அது மட்டுமல்ல! உலகம் ஒரு பழியைச் சொன்னது என்பதற்காக, அதையும் ஏற்று என்னைப் பிரிந்தாரே உன் அண்ணன்! இப்படி பழிக்கு அஞ்சுகிற உன் அண்ணனுடன் வாழ்வதை விட அவரை பிரிந்திருப்பதே மேல் என நான் சொன்னதாகச் சொல்" என்று கோபத்தோடு சொன்னாள்.

      ...... லட்சுமனன் தேர் மறைந்தது கண்டு,சீதை கதறினாள்.மனைவி என்ற உரிமையில்லாவிட்டாலும், ஒரு பெண் என்ற இரக்கசிந்தனையைக் கூட அந்த ராமனின் மனதில் இருந்து எடுத்து விட்டாய்! இப்படி கொடுமை புரிந்த ராமனைப் பற்றி வாய் திறவாத இந்த உலகத்தை என் மீது மட்டும் களங்கம் சுமத்த வைத்தாயே! அது ஏன்? என்றெல்லாம் ஆவேசப்பட்டாள்.................

      ...........லவகுசர்கள் அரண்மனைக்குள் வந்தனர்.சீதாதேவியை அன்புத்தாயை வரச்சொல்வீர்களா? என்றனர். உன்னை இனியும் காட்டில் விட்டு வைக்க மாட்டேன். இங்கு வரவழைப்பேன். இலங்கையிலே, நீ தீயால் சுடப்பட்ட ரத்தினமாக வெளிப்பட்டதை நம்பாத அயோத்தி ஜனங்கள், இன்னும் ஒருமுறை நீ தீயில் எரிவதைக் காணட்டும். உன் கற்புத்திறன் இந்த ஜனங்களுக்கும் தெரியட்டும் என மனதில் எண்ணியவராய், லவகுசர்களிடம் நடந்ததைச் சொன்னார். லவகுசர்கள் கொதித்து விட்டனர்.ஏ ராமா! என்ன காரியம் செய்தாய்? அயோத்தி மக்கள் சந்தேகப்பட்டார்கள் என்றால் அதைப்பற்றி உனக்கென்ன கவலை! அவர்களோடு சேர்ந்து நீயும் தானே சந்தேகப்பட்டு அனுப்பியிருப்பதாக உலகம் சொல்லும்! உன் நெஞ்சம் என்ன கல்லா! மனைவியே இல்லாமல் அஸ்வமேதம் நடத்த உனக்கென்ன தகுதி இருக்கிறது? என கண்கள் சிவக்க கேட்டனர்............................

      .......................சத்ருக்கனரே! மனைவியை வெறுத்து ஒதுக்கி, காட்டுக்கு அனுப்பியவன், கட்டியவள் மீது சந்தேகம் கொண்டு தீக்குளிக்கச் செய்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக துணையே இல்லாமல் யாகம் நடத்தி உலகாள நினைப்பவன்...இவனது ஆட்சி இந்த பூமியில் எப்படி வரலாம்? ஒருவேளை, உமது சகோதரன், இந்த பூமியெங்கும் ஆட்சியைப் பிடித்தால், எல்லாருமே மனைவி மீது சந்தேகப்படுங்கள் என்று சட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படிப்பட்ட ஒருவனுக்காக, சகோதரனான நீரும் புறப்பட்டு வந்து விட்டீர். என்ன அநியாயம்? என்றனர் லவகுசர்.

      இப்ப ராமர் பரதனுக்கு சொன்னதை நினைவு கூறுங்கள்

      Ayodhya kandam, Chapter 100/verse 49

      "Women should not be trusted" and that "Secrets should not be confided to the wife"

      .kaccit striyaH saantvayasi kaccit taaH ca surakShitaaH |
      kaccin na shraddadhaasya aasaam kaccid guhyam na bhaaShase || 2-100-49

      "I hope you are pacifying the women well. Are they protected by you? I hope you are not believing the words of these women and not telling them the secrets."

      Delete
  2. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, October 20, 2012

    நீங்கள் சொல்வதில் முற்றிலும் நியாயம் உண்டு.

    .......காட்டில் இருந்து மீண்டாள். கட்டிய புருஷனே அவளைத் தீக்குளிக்கச் சொன்னான். சொன்னது அவனளவில் நியாயம் என்றாலும், எந்தக் குற்றமும் செய்யாத சீதா, கணவன் தன் மீது சந்தேகப்பட்டானே என்று துடித்துப் போனாள். தீ கூட அவளைச் சுடவில்லை. ஆனால், வார்த்தைகள் சுட்டன. வீட்டுக்கு வந்தாள். பட்டாபிஷேகம் முடிந்து சில காலம் கணவனுடன் சுகவாழ்வு. இப்போது அவள் கர்ப்பிணி. அயோத்தியின் வாரிசுகளை[லவ, குச ] சுமந்து கொண்டிருக்கும் அவளை, உலகம் சந்தேகிக்கிறதே என்பதற்காக நிரந்தரமாக ஒதுக்கி வைக்கிறான் ராமன். என்ன கொடுமையப்பா இது!

    சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. "தனக்கு தானே நிகர் என்ற பெருமையுடைய தசரத சக்கரவர்த்தியின் குமாரர் ராமபிரான், எனக்கு செய்த இந்தக் கொடுமையை நீங்கள் கேள்விப்பட்டால் துவண்டு போவீர்களே! என்ன செய்வேன்! ராமனின் ஆட்சி என்றாலே நல்லாட்சி என்று தான் பொருள். அந்த நல்லாட்சி நடத்துபவரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் இந்த வனவாசத் தண்டனை? எதற்காக எனக்கு இந்தத் துன்பங்கள் வந்தன?"................

    ................. சீதை "லட்சுமணா! நீ நாடு திரும்பு. உன் அண்ணனிடம், என்னைச் (சீதா) சொல்லிக் குற்றமில்லை, உங்களைச் சொல்லியும் குற்றமில்லை, எல்லாம் என் விதி. அது மட்டுமல்ல! உலகம் ஒரு பழியைச் சொன்னது என்பதற்காக, அதையும் ஏற்று என்னைப் பிரிந்தாரே உன் அண்ணன்! இப்படி பழிக்கு அஞ்சுகிற உன் அண்ணனுடன் வாழ்வதை விட அவரை பிரிந்திருப்பதே மேல் என நான் சொன்னதாகச் சொல்" என்று கோபத்தோடு சொன்னாள்.

    ...... லட்சுமனன் தேர் மறைந்தது கண்டு,சீதை கதறினாள்.மனைவி என்ற உரிமையில்லாவிட்டாலும், ஒரு பெண் என்ற இரக்கசிந்தனையைக் கூட அந்த ராமனின் மனதில் இருந்து எடுத்து விட்டாய்! இப்படி கொடுமை புரிந்த ராமனைப் பற்றி வாய் திறவாத இந்த உலகத்தை என் மீது மட்டும் களங்கம் சுமத்த வைத்தாயே! அது ஏன்? என்றெல்லாம் ஆவேசப்பட்டாள்.................

    ...........லவகுசர்கள் அரண்மனைக்குள் வந்தனர்.சீதாதேவியை அன்புத்தாயை வரச்சொல்வீர்களா? என்றனர். உன்னை இனியும் காட்டில் விட்டு வைக்க மாட்டேன். இங்கு வரவழைப்பேன். இலங்கையிலே, நீ தீயால் சுடப்பட்ட ரத்தினமாக வெளிப்பட்டதை நம்பாத அயோத்தி ஜனங்கள், இன்னும் ஒருமுறை நீ தீயில் எரிவதைக் காணட்டும். உன் கற்புத்திறன் இந்த ஜனங்களுக்கும் தெரியட்டும் என மனதில் எண்ணியவராய், லவகுசர்களிடம் நடந்ததைச் சொன்னார். லவகுசர்கள் கொதித்து விட்டனர்.ஏ ராமா! என்ன காரியம் செய்தாய்? அயோத்தி மக்கள் சந்தேகப்பட்டார்கள் என்றால் அதைப்பற்றி உனக்கென்ன கவலை! அவர்களோடு சேர்ந்து நீயும் தானே சந்தேகப்பட்டு அனுப்பியிருப்பதாக உலகம் சொல்லும்! உன் நெஞ்சம் என்ன கல்லா! மனைவியே இல்லாமல் அஸ்வமேதம் நடத்த உனக்கென்ன தகுதி இருக்கிறது? என கண்கள் சிவக்க கேட்டனர்............................

    .......................சத்ருக்கனரே! மனைவியை வெறுத்து ஒதுக்கி, காட்டுக்கு அனுப்பியவன், கட்டியவள் மீது சந்தேகம் கொண்டு தீக்குளிக்கச் செய்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக துணையே இல்லாமல் யாகம் நடத்தி உலகாள நினைப்பவன்...இவனது ஆட்சி இந்த பூமியில் எப்படி வரலாம்? ஒருவேளை, உமது சகோதரன், இந்த பூமியெங்கும் ஆட்சியைப் பிடித்தால், எல்லாருமே மனைவி மீது சந்தேகப்படுங்கள் என்று சட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படிப்பட்ட ஒருவனுக்காக, சகோதரனான நீரும் புறப்பட்டு வந்து விட்டீர். என்ன அநியாயம்? என்றனர் லவகுசர்.

    இப்ப ராமர் பரதனுக்கு சொன்னதை நினைவு கூறுங்கள்

    Ayodhya kandam, Chapter 100/verse 49

    "Women should not be trusted" and that "Secrets should not be confided to the wife"

    .kaccit striyaH saantvayasi kaccit taaH ca surakShitaaH |
    kaccin na shraddadhaasya aasaam kaccid guhyam na bhaaShase || 2-100-49

    "I hope you are pacifying the women well. Are they protected by you? I hope you are not believing the words of these women and not telling them the secrets."


    ReplyDelete
  3. உண்மையில் நமது சமயத்துப் புராணகதைகள் பெரும்பாலனவைகளைப் படிக்கும்போது கடவுள்மார்கள் எல்லாம் சரியான கீழ்த்தரக் குணம் இருப்பவர்களாகவும், மிகவும் சக்தி குறைந்தவர்களாகவும், நமக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் செய்யும் விபரீதமான செயல்கள் எல்லாம் மனுஷரே செய்ய அஞ்சும் விலக்கப்பட்ட செயல்களாக இருக்கும். இக்கதைகளை பக்தர்கள் கேள்வியே கேட்காது கேட்டு ரசிக்கவேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். இவைகள் வெறுமனே எழுதப்பட்ட கதைகள்தான் என்றாலும் ஏன்தான் கடவுள்மாரைக் நல்ல கடவுள்தனம் உள்ளவராகச் சித்தரித்து மக்களுக்கு ஒரு இறைபக்தி வரும்படியான சிந்தனைகளை ஏற்படுத்தும் கதைகளை எழுதாமல் விட்டார்கள் என்று கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Friday, November 09, 2012

      இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச்சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள்[ரிக் வேதம்,யசுர் வேதம்,சாம வேதம்,அதர்வண வேதம்] ஆகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது.
      .
      வேதங்கள் 'இறைவனிடம் நாம் ஏதாவது பெற வேண்டும் என்றால் அவனுக்கு எதையாவது நாம் காணிக்கையாகத் தர வேண்டும். அதாவது பலி வேண்டும் என்கின்றது' கடவுள்களில் பெண்களும் உள்ளனர். முன்பு அது செவி வழியாகக் கேட்ட, வாய்வழியாகச் சொல்லி வரப்பட்ட "எழுதாக்கிளவி"யாகவே இருந்தது.

      வேத காலத்தில் அறிவு வளர்ச்சி இல்லாத - ஆடு, மாடு மேய்க்கும் இடையர்களாக இருந்த ஆரியர்கள் தாம் எவற்றை கண்டு பயந்தார்களோ, அவற்றை யெல்லாம் வணங்கியிருக் கின்றனர். அவற்றுக்கெல்லாம் தங்கள் உருவத்தைக் கற்பித்து குணங்களையும் கொடுத்துவிட்டனர்.

      உதாரணமாக உஷஸ்: விடியற்காலைப் பொழுது எனப் பொருள் படும் வேதங்கள் வியந்து பாடும் பெண் கடவுள் . இதற்காக 22 சூக்தங்கள் எழுதப்பட்டுள்ளன. இது மிக அழகுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. அதனாலேயே அக்னி, சூரியன், பூஷன், அஸ்வினி தேவர்கள் முதலியோர் இதன்மீது மையலுற்றுக் காமுற்று அலைந்தார்கள் என்று கூட எழுதி வைத்துள்ளனர்.

      சோமரசம் அல்லது சோமபானம் எனும் மது போதைத் தரக்கூடியதையும் கடவுளாக்கிவிட்டனர்.அதாவது "கள்ளேதான் கடவுளடா" என்றே வேதம் கூறுகிறது.

      மந்திரங்களால் கடவுளை மகிழ்ச்சி கொள்ள செய்து தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் நினைத்தனர்.

      மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம். ஆம்! வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன.

      அந்த மந்திரங்களின் அர்த்தத்தைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் பயந்து ஓடி விடுவீர்கள். ஆம்! ஒரு சுப தினத்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்? வேதம் முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு.

      இப்போது புரிகிறதா, புராணங்கள் இந்து சமயத்துக்கு அடிப்படையான வேதங்களைப் பின்பற்றியே எழுதப்பட்டது என்பதும்? அதனால் தான் இப்படி.

      எதிரிகளும் தங்களுக்கு அடிமையாக மறுப்பவர்களும் அழிய வேண்டும் என்ற ‘அரிய’ கருத்துக்கு அடுத்தபடியாக வேதங்களில் தெரியும் மற்றொரு ‘உன்னத’ குணாம்சம்: சுயநலம். நானும் என் இனத்தைச் சார்ந்தவர்களும் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம். இந்த சுயநலத்திற்காக தேவர்களுக்கு வேள்வி வளர்த்து அதில் நெய்யையும் குதிரைகளையும் போட்டு எரித்து, சொர்க்கத்திலிருக்கும் அவர்களை பூலோகத்துக்கு வரவழைத்து, சோம பானம் என்ற லஞ்சத்தைப் படையல் செய்து எதிரிகளை அழித்து விட்டு, எங்களை மட்டும் வாழவை என்று அவர்களை வேண்டுவதே வேதம்! வேதமந்திரங்கள் முழுக்கவும் இத்தகைய சுயநலத்தையும், துவேஷத்தையும்தான் முழங்குகின்றன.


      ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே.

      இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான்.தமிழில் நான்மறை என்பன வேறானவை .இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும்

      எனவே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ் மரபுக்கு ‘இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது.அதன் வழியே புராணங்களும்.அதனாலேயே புராணகதைகள் பெரும்பாலனவைகள் எல்லாம் சரியான கீழ்த்தரக் குணம் இருப்பவர்களாகவும், நமக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.

      Delete
  4. வேதமந்திரங்கள் மூலம் ஆரியர்கள் திராவிடரை மேலும் முட்டாளாக்கி விட்டார்கள்

    ReplyDelete