பெண்கள் பக்கம்

முடிகொட்டாமல் இருக்க, பொடுகில் இருந்து தப்பிக்க

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.

சருமத்தை பாதுகாக்கும் முறை

ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.

காது அழகை பராமரிப்பது எப்படி?

பெண்களின்
அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும்... காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.
ஆகவே பெண்மணிகளே காதை மிளிர வைப்பது எப்படி? என்பது பற்றிய யோசனையைகேளுங்க.

உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.
சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்தும் பளபளவென பளிச்சிடும்.

இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல

இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.
 பொதுவாக 50 வயதைக் கடந்த, மாத விலக்கு நின்றுவிட்ட பெண்கள் அதிக நேரம் தூங்குவதால், அவர்களுக்கு பக்கவாதம் போன்ற வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒருநாளில் 6 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதாலோ அல்லது 9 மணி நேரம் வரை தூக்கத்தை மேற்கொள்வதாலோ மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் உறைதல் ஏற்பட்டு, பக்கவாதம், உணர்விழத்தல், பலவீனம், பேசுவதில் தெளிவில்லாத நிலை, ஒருங்கிணைப்பில்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும் என்று வடக்கு கரோலினா பொதுசுகாதார பல்கலைக்கழக டாக்டர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
9 மணி நேரம் வரை தூங்கும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு 60 70 விழுக்காடு வரை உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவோருக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது 14 விழுக்காடு மட்டுமே என்றும் தெரிய வந்துள்ளது.
டிப்ஸ்.. டிப்ஸ்.. டிப்ஸ்..

கையில் சூடான எண்ணெய் பட்டுவிட்டதா, எரிச்சலாக இருக்கிறதா, இதோ கொஞ்சம் பற்பசை பிதுக்கி எரிச்சலாக இருக்கும் இடத்தில் தடவுங்கள், நிமிடத்தில் உங்கள் எரிச்சல் நின்று குளு குளு என்று இருக்கும். பற்பசை வைத்தால்
கொப்பளம் ஏற்படாது.

காலில் போடும் கொலுசு கறுத்து விட்டதா, கவலை வேண்டாம், கொஞ்சம் விபூதி வைத்து தேய்த்து பருத்தி துணியால் துடைத்து பாருங்கள், பள பள என்று இருக்கும்,

பட்டுபுடவை வைக்கும் இடத்தில் கூடவே ஒரு துண்டு வசம்பை வையுங்கள்.
பட்டுபுடவையை வெகுநாட்கள் பாதுகாப்பாக இருக்கும்

வீட்டை துடைக்கப்போறீங்களா, கொஞ்சம் நில்லுங்கள் துடைக்க பயன்படுத்தும்
தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு சேர்த்து துடையுங்கள், வீட்டில் பூச்சி, ,
அண்டாது, தரையும் பளிச்சென்று நம்மை பார்த்து சிரிக்கும்.

பாத்திரம் தேய்க்கும் இடத்தில் தண்ணீர் போகும் துவாரத்தில் கரப்பான்பூச்சி
குடும்பத்தோடு வசிக்கும், அதை போக்க இதோ கொதிக்கும் தண்ணீரில் கற்பூரம் தூள் செய்து போட்டு அந்த துவாரத்தில் விடுங்கள், கொஞ்ச நேரத்தில் எல்லாம்
செத்துவிடும். மீண்டும் வரவே வராது.

இரவு படுக்க போகும் முன் புருவத்தில் கொஞ்சம் விளக்கெண்ணெய்
தேய்த்துக்கொண்டு படுங்கள், இப்படி செய்தால் புருவம் அடர்த்தி ஆகும், முடியும்
உதிராது.

வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு போட்டு உங்கள் பாதங்களை அதில் கொஞ்ச நேரம் வைத்து எடுங்கள், இப்படி செய்தால் வலியும் போகும், பித்த வெடிப்பும் மறையும்

0 comments:

Post a Comment