விதியை மதியால் வெல்ல முடியுமா? -ஆக்கம்:செல்லத்துரை,மனுவேந்தன்


முடியும் என்று இன்றைய காலத்திலும் கூறி மக்களை இன்னும் ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்கள் இந்த அரைகுறை ஆஸ்திகர் அல்லது நாஸ்திகர் என்று கூறலாம்.இந்த அரைகுறை என்று நான் கூறுவது பயத்தில் கடவுள் பக்தர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு ஒன்றுக்கு ஒன்பது கோவில்களாக ஓடிக்கொண்டும்,கடவுளை நம்பாது மனிதசுவாமிகளை சுற்றிக்கொண்டும் சூழ்நிலை,காலம்,இடத்தை சிந்தியாது தம்மை
சித்திரைவதை செய்து விரதமோ,நேர்த்தி என்ற பெயரில் கடவுளை ஒரு மனிதனுக்கு சமமாக அல்லது அவனையும் பயங்கரவாதியாக  கருதிக் கடவுளுக்குப்  பயந்து நடந்து  கொள்பவர்கள்.இவர்கள் எப்படித்தான் அழுதாலும் , புரண்டாலும் அவர்கள் மனிதனாக வாழாவரை  நடப்பவைகள் அனைத்தும் கவலைக்குரியதாகவே இருக்கும்.

கடவுள் மேல் அவர்களுக்கு அறியாமல், தெரியாமல்  அவர்களிடம் இருக்கும் பயமும்,கடவுளைவிட ஜாதகத்தில்மேல்  இருக்கும் நம்பிக்கையும் தாம் எப்படியும் நடந்துகொண்டு ஜாதகத்தின் வழியால் கடவுளுக்கு கொஞ்சப் பணத்தினை கொடுத்து கடவுளைச்  தன்பக்கம் சரித்துவிடலாம் என்று  மேற்படி மனிதர்கள் மனம் போன போக்கில் வாழ்ந்து பின்னர் கடவுளை நொந்துகொள்கிறார்கள்.


 கடவுள் எழுதியதாக இவர்கள் கூறும் விதியை திசை திருப்பலாம் என எண்ணி

அதற்குப் பரிகாரம் என்ன செய்யலாம் என எதிர்பார்த்து சாஸ்திரியாரை நாடும்  இம் மனிதர்கள் கோவிலுக்கு பணம் கொடுத்துவிட்டால் அல்லது பெரும் பூஜை,விரதம்அல்லது நேர்த்தி   ஒன்று செய்துவிட்டால் இறைவனை தன்பக்கம் சரித்துவிடலாம் என்று கற்பனைக் கடலில் மிதக்கும் இவர்கள்  மதியால் விதியை திசை திருப்பலாம் என்பதில் ஊறி அவற்றினுள் மூழ்குவதும் அவர்கள் இறைவனால் கொடுக்கப்பட்ட மதியை உபயோகிக்காமல் தவறுவது அவர்கள் தேடிக்கொள்ளும் தலைவிதியே. 
'' உண்டியலில் காசு போட்டு விட்டான் என்பதற்காக கடவுள் ஒருவனைக் காப்பாற்றவும் மாட்டார். போடாததற்காக தண்டிக்கவும் மாட்டார்.''
- சத்குரு ஜக்கி வாசுதேவ் 
 ""மழை வருவது இயற்கை. அது விதி. அதை நாம் தடுத்து நிறுத்த இயலாது.
ஆனால் அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க குடை பிடித்து கொள்கிறோம். மழை கோட்டு, அணிந்து செல்கிறோம். அதாவது மதியால் விதியை வென்றுவிட்டோம்."" இப்படிக் கூறும் மனிதர்களுக்கு யான் ஒன்று கூற விரும்புகிறேன் .நீ மழை நேரத்தில் உன் மதியினால் குடை,கோட்டு உதவியினால் தப்பியதாக எண்ணாதே! மழை பொழிய வேண்டும்,நீ குடை பிடிக்க வேண்டும்.கோட்டு அணியவேண்டும். என்பதே இறைவன் உனக்கு எழுதிய உன் தலைவிதி என்று கூறி உங்கள் கருத்தினை உடைத்துவிடலாம்.

அதேவேளை ஒன்றை நாம் மனதில் கொள்ள வேண்டும்.நீங்கள்

கூறுவதுபோல் விதிப்படி தானே நடக்குமென்று உறங்கிக்கிடந்துவிட்டால் பாடசாலைப் பரீட்சையிலை மட்டுமல்ல வாழ்க்கையிலையும் வெற்றியடைய முடியாது. இறைவனால் உடலமைப்பு   விதிகளின்படி  மனிதனுக்கு மூளை அமையப்பட்டுள்ளது.அவற்றினை உபயோகிப்பதுவும், வாழ்க்கையிலை ஏற்றம் எட்டுவதும் அவனைப் பொறுத்ததே.நல்லதும்,கெட்டதும் நடப்பது விதிப்படி அல்லஎன்று கூறுவதற்கு விதி என்று ஒன்று எழுதப்படவில்லை. அவை நாம் தேடிக்கொள்வது. உதாரணமாக நல்லன எண்ணி நல்லோரோடு சேர்ந்து ,நல்லன செய்வோர் நன்மைகளையே அடைவர்.அடுத்தவர்களும் வாழவேண்டும், வாழ்க்கையில் வளரவேண்டும் என்று மனம்கொண்டு வாழ்த்துவோர் உலகில் அவர்களும் வளவாழ்வு பெறுவார்.எனவே விதி என்பது அடிப்படை அளவிலேயே அமைந்திருக்கும்.
அதாவது,ஒரு இயந்திரம் அது நல்முறையில் இயங்கும் வகையில் [ஏற்கனவே படைக்கப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு]விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.அது உங்களுக்கு நற்பயனைக் கொடுப்பது நீங்கள் அதனைப் பராமரிக்கும் விதத்திலேயே தங்கியுள்ளது.
உதாரணமாக  விஞ்ஞானி  நியுட்டனின் முதல் விதிப்படி, அசையும் அல்லது அசையா நிலையில் இருக்கும் ஒரு பொருளின் நிலையை மாற்ற வெளி ஆற்றல் /விசை ஒன்று தேவை. இங்கே நான் அழுத்திய பிரேக் வெளிபுற விசை. பிரேக் இல்லாத பொழுது சக்கரத்திற்கும் சாலைக்கும் இடையில் உள்ள உராய்வு, காற்றினால் ஏற்படும் வேக தடை அசை பொருளின் நிலையை மாற்றுகிறது. வேகத்தில் தொய்வை ஏற்படுத்துகிறது.இது மனிதன் அறிவதற்கு முன்னரே இருந்த இறை விதிதான். நியுட்டன் தன் மூளைத் திறனால் கண்டுபிடித்தார். மனிதனையும் வாகனத்தின் மூலப்பொருட்களும் ஏற்கனவே இறைவனால் படைக்கப்பட்டவை.அதனை இறைவனால் படைக்கப்பட்ட  மூளையினை பயன்படுத்தி மனிதன்உலகம் முழுவதையும் வாகனங்களினால் நிரப்பிவிட்டான்.அல்லாமல் வாகனம் ஓடவேண்டிய விதி எனக்கு இருக்கிறது.அதைக்கடவுள் படைப்பான் என்று முன்னைய மனிதன் சிந்தித்து உறங்கியிருந்தால் வாகனம் என்பதனை உலகில் நாம் கண்டிருக்க முடியாது.
 இறைவன் பசுவையும் படைத்து,அதற்கு மூளையையும் கொடுக்கிறான்.அது அதனைப் பாவியாது குழிக்குள் தவறி வீழ்ந்து இறக்கிறது என்றால் அதற்கு ஆண்டவர் பொறுப்பல்ல.படைக்கப்பட்ட மனிதன் சேரக் கூடாதவனொடு சேர்ந்து தீமைகள் புரிந்து பலனை அனுபவிக்கிறான் என்றால் அதற்கு ஆண்டவன் பொறுப்பல்ல. அதேபோலவே நல்ல மனிதனாக் அடுத்தவர்களுக்கு தீங்கிழையாது வாழ்ந்து நல்லோனாய் வாழ்ந்தாலும் அதற்கும் ஆண்டவனுக்கும் சம்பந்தமில்லை.
அதாவது அனைத்தும் முழுமையான விதிப்படி படைக்கப்பட்டுள்ளன. அவை தேடிக்கொள்ளும் நன்மையோ தீமையோ எல்லாவற்றிற்கும் மனிதனே காரணமாகிறான் .இதனையோ ''தன்வினை தன்னைச்சுடும்'' என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.
**********************************************************
                                              



0 comments:

Post a Comment