இனங்களின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள் அரசியல்வாதிகள்தான்…; மீள்பார்வை

இலங்கையில் கடந்த பல வருடங்களாக தேர்தல்களும், ஆட்சி பீடமேறுதலும, எந்தவிதமான நன்மைகளையும் தராமல் நாட்டை சீர்குலைத்த வண்ணமே உள்ளன என்பதை ஆழமாக அரசியல் பற்றி சிந்திப்பவர்கள் அறிந்து கொள்ளமுடியும். ஆரம்பத்தில் வர்க்க ரீதியாக சுரண்டப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வந்த சாதாரண இலங்கை மக்களை பாதிக்கும் வண்ணம் ஆட்சியாளர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுவதற்காக இனவாதம் தூவப்பட்டது. இதனால் இனக்கலவரங்கள் ஏற்பட்டு நாட்டில் தமிழ் மக்கள் சொல்லொன்னாத் துன்பங்களை அனுபவித்தார்கள். அதனைத் மதவாத அரசியல் கொண்டுவரப்பட்டு மதரீதியாகவும் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் இவ்வாறான எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகள் ஆட்சியில் அமர்ந்த வண்ணம் இராணுவ காவல்நாய்கள் காத்து நிற்க தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.
 
ஆனால் தற்போது அரசியல் பதவிகளைப் பெற்றுக்கொண்டு சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் நோக்கோடு அரசியலில் நிரந்தரமாகவே தங்கியிருக்கும் அரசியல்வாதிகளும், புதிதாக அரசியலுக்கு வந்து மேற்சொன்ன சுகபோகங்களையும் சலுகைகளையும் அனுபவிக்க வருகின்ற வேட்பாளர்களும் ஒரே இனத்தையோ அன்றி ஒரே மதத்தையோ சார்ந்தவராக இருந்தாலும் தங்களுக்குள் மோதுவதற்கு தயாராகவே உள்ளார்கள். அரசியல் பதவிகளை தட்டிக்கொள்வதற்;காக போட்டியிடுகின்றார்கள். எங்கும் சுயநலம் மேலோங்கியிருக்கின்றது.
இவ்வாறான நேரத்தில் இதனால் நாட்டின் ஒன்றுமையையும் இனங்களின் ஒற்;றுமையும் பாதிக்கப்;பட்டுகின்றன என்பதை சில சமூக நலன் விரும்பிகள் சுட்டிக்;காட்டத் தொடங்கியுள்ளார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் சந்திரசேகரனிடமி ருந்து இவ்வாறான சிக்கல்களும் கொடுமைகளும் நிறைந்த நேரத்தில் ஒரு குரல் நாட்டு மக்களின் நன்மை கருதி ஒலித்துள்ளது. “நாட்டின் தேசிய ஒற்றுமையை கட்டி எழுப்பும் சந்தர்பத்தை அரசியல் தலைவர்கள் கட்டி எழுப்ப வேண்டும் என அவர் தெரிவித்தார் நேற்று காலை யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் யாழ்.மாவட்ட இணைப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை யாழ்.ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் சந்திரசேகரன் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் பலதரப்பட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றுள் மக்கள் மத்தியில் எழும் பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்க்கப்பட வேண்டும். குறிப்பாக தேசிய ஒற்றுமையை சிதைக்கின்ற நடவடிக்கையை சில அரசியல் தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள். ஆகவே நாட்டின் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதன்போது யாழ் ஆயர் தேர்தலில் பலதரப்பட்ட கட்சிகள் போட்டியிடுவதால் மக்கள் குழப்ப நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தற்போதைய தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் முக்கியமானதாக மனதிற்கொள்ள வேண்டிய பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

0 comments:

Post a Comment