தமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி :02

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
[அறிமுகம் தொடர்கிறது ]

தமிழர்களால்,சைவம் அசைவம் எந்த உணவாக இருந்தாலும் அவை பொதுவாக,இரண்டு விதமாக,சூடு,குளிர்ச் சாப்பாடுகள் என பிரிக்கப்படுகின்றன.உதாரணமாக,தயிர்,வெண்டைக்காய்,தக்காளி போன்றவை குளிர்ச்சாப்பாடுகள் ஆகும். தமிழர்களின் உணவுகள் இன்னும் பெரும்பாலும் இந்த அடிப்படையை கொண்டவை ஆகும்.தமிழர்களின் நாட்டு வைத்தியமும் அதிகமாக இப்படியே அமைகிறது.அதனால் சுகையீனமும் சூடு,குளிர் என வகைப்படுத்தப்படுகிறது. உணவு வழி சிகிச்சை[diet therapy], சூட்டை உண்டாக்கும் நோய்களுக்கு குளிர் உணவு வழியாகவும்,குளிரை உண்டாக்கும் நோய்களுக்கு சூட்டு உணவு வழியாகவும் சிகிச்சை அளிக்கிறது.இந்த நம்பிக்கை இன்னும் தமிழரிடம் காணப்படுகிறது. உதாரணமாக,உடலில் சூட்டை உண்டாக்கும் சின்னம்மை நோய்க்கு,சூட்டை தணிக்கும் குளிர்ச்சாப்பாடுகளான பழங்கள், மோர்,இளநீர்,போன்றவை கொடுக்கப்படுகின்றன.மேலும் தமது பாரம்பரிய உணவுவகைகளை பேணி காக்கும் முக மாகவும் இளைய தலைமுறை யினருக்கு அறிமுகப்படுத்தும் முகமாகவும் ஒவ்வொரு விழாவிலும் சடங்கிலும் பாரம் பரிய உணவுகள் பெரும்பாலும் இன்னும் வழங்கப்படுகின்றன.உதாரணமாக,பிறந்த பிள்ளைக்கு[குழந்தைக்கு] முதன் முதலாக ஆறாம் அல்லது ஏழாவது மாதத்தில் சக்கரைப் பொங்கல் அல்லது தேனும்,தயிரும் நெய்யும் கலந்த சோறு ஊட்டப்படும்.அதே போல குழந்தைகளுக்கு முதல் பல் முளைத்ததும்,பல்லுக்கொழுக்கட்டை என்ற பெயரில் கொழுக் கட்டை அவித்து,அவர்களின் தலையில் கொட்டி கொண்டாடுவார்கள்.முதலாவது மாதவிடாய் வெளியேற்றமானது
சாமத்தியடைதல்,பூப்பெய்தல்,பருவடைதல்,பெரிய பிள்ளையாதல்,மஞ்சள் நீராட்டு விழா எனும் பெயர்களால் இன்னும் பாரம்பரியமாக தமிழர்களும் வேறு பிரிவினரும் [ஆப்பிரிக்கா] கொண்டாடுகிறார்கள்.உளுந்தக் களி,நல்லெண்ணெய் என உணவே மருந்தாக,உடல்நலத்தை மையமாகக் கொண்டு,உணவு அங்கு கொடுக்கப்படுகின்றன.முதல் முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு,ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது. அங்கு பல வித சாதம்/பொங்கல்[புளி சாதம்,சர்க்கரைப் பொங்கல்,வெண் பொங்கல்,...] இடம் பெறுகின்றன.

தமிழர் வாழும் இடங்களில்,உணவு பழக்கங்கள் மிக மந்தமாகவே மாற்றம் அடைகின்றன.என்றாலும் மாற்றத்தின் சில அறி குறிகள் இப்ப தெளிவாக தென்படுகின்றன.பொதுவாக கோதுமை மா,தாராளமாக நகர்ப்புற பகுதிகளில் பாவிக்கப்படுகின்றன, அவர்கள்,கோதுமை மாவில் சூடுபடுத்தி தயாரிக்கப்படும் சப்பாத்தியை பெரும்பாலும் இரவு சாப்பாட்டாகவும், கோதுமை மாவில் பொறித்து தயாரிக்கப்படும் பூரியையும்,அதனுடன் உருளைக்கிழங்கையும் காலை சாப்பாட்டாகவும் அரிசிக்கு பதிலாக பாவிக்கிறார்கள்.இன்றைய நவீனமயமாக்கல்,தமிழரின் சமையல் அறையிலும் மெல்ல மெல்ல மாற்றங்களை கொண்டு வருகின்றன.விட்டுக்கொடுப்பும் இணக்கமும் கண்டு மாற்றி அமைக்கப் படுகின்றன. விரிவாக, மிகுந்த அக்கறை யுடன்,நிதானமாக சமைக்க வேண்டிய பாரம்பரிய உணவு செய்முறை மறைந்து வருகின்றன.முன்னமே தயாரிக்கப்பட்ட [ரெடிமேட்] இட்டலி கலவை,தயார் செய்து பெட்டியில் அடைக்கப்பட்ட கறித்தூள்,போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் இப்ப நகர்ப்புற சமையல் அறைகளை ஆட்டிப்படைக்கின்றன.அது மட்டும் அல்ல மின்னாற்றலால் இயங்கும் மேசைமேலான ஈரமாவு
அரவைப்பொறி,இப்ப ஆட்டுக்கல்லிற்குப் பதிலாக இட்லி, தோசை,வடை போன்றவை தயாரிக்கப் பயன்படு கின்றன.கூட்டுக் குடும்பம் மறைந்து இன்று தனிக் குடும்பம் எங்கும் பரவலாகக் காணப்படுவதும்,தொழில் புரியும் பெண்கள் அதிகரித்து இருப்பதும்,இப்படியான தவிர்க்க முடியாத இன்றைய சூழ்நிலை,தமிழர்களின் சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துள்ளது.அவர்கள் இன்று இலகுவான சில உணவு வகைகளை நாடுகின்றனர்.எனினும் தமிழர் உணவு நடைமுறைகள்,அவர்களின் பண்பாட்டு தாக்கங்கள்,ஈடுபாடுகள் இன்னும் அவைகளின் அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளன.முதலாம் நூற்றாண்டு சில உணவு செய்முறைகளை இன்னும் அப்படியே அவ்வளவு பெரிய மாற்றம் இன்றி இன்னும் பின்பற்றுகிறார்கள்.

"பெரு மனிதக் குரங்குகள்" என அழைக்கப்படும் சிம்ப்பன்சிகள்,அண்மைக் காலம் வரை குறள சிம்ப்பன்சி அல்லது குட்டிச் சிம்ப்பன்சி (Pygmy Chimpanzee) என்று அழைக்கப்பட்ட,பொனொபோ,இவைகளின்  பரம்பரையில் ஹோமோ சப்பியென்ஸ் ஆகிய மனிதனின் பொது முதாதையர் தொடக்கம் இன்றுவரை உணவு பழக்க வழக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் அடைந்துள்ளன.இந்த தொடர் கட்டுரையில்,குறிப்பாக திராவிடர் முதாதையர்களிடம் எப்படி உணவு பழக்கங்கள் வளர்ச்சி அடைந்தன,அவை எப்படி இன்றைய திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களை வடிவமைத் தன என அலச உள்ளோம்.
தீபம் சஞ்சிகையில் [Theebam.com] ,82 பகுதிகளாக  "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]" என்ற எமது தொடரில் நாம் விரிவாக ஏற்கனவே விளக்கியவாறு,மெசொப்பொதாமியா சுமேரியர்கள், ஹரப்பா- மொகெஞ்சதாரோ போன்ற பகுதிகளை சேர்ந்த சிந்து சம வெளி மக்கள், தமிழக சங்கம் மக்கள்,தமிழக மத்திய கால அல்லது பக்தி கால மக்கள்-இவர்கள் எல்லோரும் இன்று திராவிடர்களிடம்/தமிழர்களிடம் காணப்படும் உணவு பழக்க வழக்கங் களுக்கும்,அவைகளை வடிவமைப்பதற்கும் காரணமாக இருந்து உள்ளனர்.ஆகவே இந்த தொடரை ஆரம்பத்தில் இருந்து எல்லா கால கட்டங்களிற்கும் ஊடாக  நகர்த்தவுள்ளோம்.அநேகமாகக் 'கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம்...’ என்ற திரைப் பாடல்  தமிழர்களின் இன்றைய அறுசுவை விருந்து உணவு ஒன்றை கட்டாயம் படம் பிடித்து காட்டுகிறது. அதனால் அந்த பாடலை இந்த அறிமுகத்தின் முடிவாக இங்கு பதிக்கிறோம்.

"கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம் அந்த
கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்

அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே
சந்தோஷ மீறிப் பொங்க  இதுவே எனக்குத் திங்க

புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு
பூரி கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு

ஜோரான சேனி லட்டு சுவையான சீனி புட்டு
ஏராளமான தட்டு இனி இஷ்டம் போல வெட்டு"

[திரைப்படம்:மாயா பஜார்/1957]
பகுதி/PART :03 தொடரும்/WILL FOLLOW

1 comments:

  1. பேசும் மனிதர்கள் சிலர் இதுதான் தமிழனின் உணவு,இதுதான் தமிழனின் உடை என்று உரிமைகொள்ளும் வழக்கம் உள்ளது.தமிழ்[எந்த ஒரு] இனத்தினிடமும் நிரந்தரமாக எந்தப்பழக்கமும் இருந்ததாக இல்லை என உங்கள் ஆய்வு கூறத்தான் போகிறது.

    ReplyDelete