[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
மனிதன் அனைத்துண்ணியாக[தங்களுடைய முதன்மை உணவாக தாவரம்,விலங்குகள் ஆகிய இரண்டையும் கொள்ளும் உயிரினங்கள்]
இன்று இருந்தாலும்,அவன் அடிப்படையில் புலாலுண்ணுபவனாகவே பல மில்லியன் வருடங்களாக இருந்தான் என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளார்கள்.அவன் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை,அதாவது புதிய கற்காலம் வரை,மனிதன் ஒரு நாடோடியாக,வேட்டை யாடியும் காட்டு பழங்களையும் மரக்கறிகளையும் பொறுக்கியெடுத்தும் வாழ்ந்தான்.இடைக்கற்காலத்தை அடுத்து, வேளாண்மைத் தொழில்நுட்பத்தின் எழுச்சியுடன் உருவான,புதிய கற்காலத்தில்,நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்பு தோன்றி,அவன் ஓர் இடத்தில் குடியேறி வாழத் தொடங்கினான்.அவனின் உணவு பழக்கங்களில் முதலாவது வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன.கால்நடை வளர்ப்பு அவனுக்கு தொடர்ந்து ஊனுணவு[இறைச்சி] கிடைக்க வழிசமைத்தது.தொடக்கத்தில் செம்மறிகளும்,ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன.பின்னர் இவற்றுடன்,மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன.புதிய கற்காலத் தொடக்கத்தில்,வேளாண்மை பயிர்கள்,காட்டுத் தானியங்களாயினும்,நாட்டி வளர்க்கப்பட்டவை ஆயினும்,குறைந்த அளவு வகையினவாகவே
இருந்தன.இவை சில வகைக் கோதுமை,கம்பு [Pennisetum
glaucum,Pearl Millet /ஒரு தானியம்],வாற்கோதுமை[பார்லி] போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்தன.அதன் பின் பருப்பு,பட்டாணி போன்ற பயறு வகைகளும்,இறுதியாக,மரக்கறிகளும் பழங்களும் வளர்க்கப்பட்டன.இடைக் கற்கலஞ் சார்ந்த வேட்டையாடி உணவு சேகரிப்பவர்களுடன் ஒப்பிடும் போது,இந்த வேளாண்மை-கால் நடை பண்ணை மனிதனின்,உணவு வகை கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது.ஏனென்றால்,ஒரு சில மிருகங்களே வீட்டு மிருகமாக மற்ற முடியும் என்பதாலும்,அதே போல சில தானியங்கள்,மரக்கறிகள் மாத்திரமே பயிர் செய்யக்கூடியதாக இருந்ததாலும் ஆகும்.இந்த-எமது முதாதையரின் வாழ்க்கையின் அடிப்படை மாறுபாடு,அதன் தடயத்தை எம்மிடம் விட்டுச் சென்றுள்ளது.முதலாவதாக,இது மனிதனின் ஆரோக்கியத்தை பாதித்தது.பெரும்பாலும் அங்கு விவசாயத்தில் நிலவிய ஒரே வகை பயிர் செய்யும் போக்கு,மக்களின் உணவுகளில் ஒரு பற்றாக்குறை ஏற்பட்டது.அது மனிதனின் உயிர் வாழும் காலத்தை குறைத்தது.முன்னைய,பழமையான மனிதன் இயற்கையுடன் ஒன்றியம் அதனுடன் சமநிலைத் தன்மையுடன் வாழ்ந்தனர்.அவனது இயற்கை உணவு,காலநிலையுடன் அல்லது மற்ற இனங்களின் இடம் பெயர்தலுடன் ஒன்றி,தனது முன்னைய இடத்தில் இருந்து வேறு ஓர் இடத்திற்கு அசையும் போது,அவனும் அதனுடன் சேர்ந்து இடம் பெயர்ந்தான்.ஆனால்,ஓர் இடத்தில் அவன் நிலையாக குடியேறிய போது,மனிதன் தனக்கு தானே சில புதிய வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை திணித்தான்.
பழைய கற்காலத்தில்,வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழக்கத்தினை கொண்ட அந்த ஆதிகாலத்து மனிதனின் உணவு பொதுவாக அங்கு நிலத்தில் வாழும் உயிரினங்களும் அங்கு தானாக முளைத்த தானியங்களும்,பழங்களும் ஆகும். தொல்லுயிர் எச்சம் அல்லது புதை உயிர்ப் படிவ ஆதாரங்கள் இவர்களின் நாளாந்த உணவு அதிகமாக ஊன்[புலால்] உணவு என எடுத்து காட்டுகிறது.குறிப்பாக இவர்கள் ஊட்டச்சத்து அதிகம் உள்ள மிருக இறைச்சி பகுதிகளான ஈரல், சிறு நீரகங்கள், மூளைகளை விரும்பி உண்டார்கள்.இந்த கற்கால மனிதர்கள் பால் உணவுகளை பெரிதாக சாப்பிடவில்லை.
அத்துடன் அதிக மாவுச்சத்து[கார்போஹைட்ரேட்]
உணவுகளான அவரை,அரிசி,கோதுமை,சோளம்,போன்றவையையும் சாப்பிட வில்லை.இந்த பழைய கற்கால வேடர்களின் உணவின் தொகுதியில் கிட்ட தட்ட 2/3 பகுதி சக்தி மீன்,மட்டி உட்பட ஊன் உணவில் [இறைச்சியில்]
இருந்தும்,எஞ்சிய 1/3 பகுதி மட்டுமே தாவர உணவில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளன என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.ஆகவே கற்கால மனிதர்கள் கூடுதலாக புரதத்தையும் குறைவாக மாவுச்சத்தையும் எம்மை விட சாப்பிட்டுள்ளார்கள்.அவர்கள் கொழுப்பு சத்தை எம்போலவே உட்கொண்டார்கள்.ஆனால்,கொழுப்பின் வகை பரந்தளவில்
பகுதி:04 தொடரும்….
0 comments:
Post a Comment