அவமானம்...

ஆக்கம்:அகிலன் தமிழன் 
நிஜம் இன்றி நிழல் இல்லாதை போல
வாழ்வின் தோல்வி வரும் போது
சேர்ந்து வருவது அவமானம்
முயற்சிக்கு தடை போட வருவது இதுவே
மாந்தனின் பிரிவுக்கு துணை புரிவது அதுவே...
மனிதனின் எதிர் காலத்தை
சூனிய உலகுக்கு அழைத்து செல்ல வருவது
மாந்தர்களை வாழ்கையில் வெறுக்க
வைத்து இறப்புக்கு தூண்டுவதும்
கேட்காமல் மாந்தர்களால்
கொடுக்கபடும் பரிசு அவமானம்
வறுமை உள்ள ஏழைகள்
தினம் சந்திப்பதும்
வசதி உள்ளவன் கோபத்தில்
பயன்படுத்தும் பொருள்...

0 comments:

Post a Comment