மாவீரன்[ஆக்கம்:அகிலன் தமிழன்]

தமிழ் மண்ணில்   தமிழரின்  
உரிமைக்காய் போராடி விழுந்த வீர விழுதுகளே 
 உங்களை தொழும் புனித நாளில் 
உங்கள்   மீது தலை வணங்கி  
மரியாதையை செலுத்துகிறோம் 
உங்களை புதைக்கவில்லை 
நெஞ்சில் சிலையாக பதித்து இருக்கிறோம் 

அதனால்  உங்கள் தியாகத்தை எண்ணி
நாங்கள் விடும் கண்ணீர்  
வற்றாத அருவி போல பாய்கிறது

தன் இளமை உணர்வுகளை புதைத்து விட்டு
வீ ட்டின் கு டும்ப பொறுப்பை  துறந்து
தேசத்தின் தாகம் தீர்க்க  என்று
எத்தனை நாள்  
தாகம்  பசி  இழந்து களத்தில் நின்றிருப்பிா்கள்மழை வந்தாலும் ,வெய்யில் அடித்தாலும் , 
 எறிகணைகள் சத்தம் காதை துளைத்தாலும் 
 கொண்ட கொள்கையில் உறுதியாக  நின்று 
 தலைவன் வழியில் உரமாக களத்தில் விழுந்தீர்கள்.

உங்கள் உரத்தில் இருந்து ஒரு நாள் 
தமிழ்தேசம் எனும் மலர் வளரும்...
 உங்கள் எச்சங்கள் இருக்கும் வரை.
ஆக்கம்:அகிலன் தமிழன் 

0 comments:

Post a Comment