உணர்வு [ ஆக்கம்:அகிலன்,தமிழன் ]

எங்கே போகுது 
எங்கள் இனத்தின் 
விடியல் உணர்வுகள்  
அழிந்து போகுமா அல்லது 
கரு மேகங்கள் போல 
கலைந்து போகுமா? 


                                               
                                இரத்தம் சிந்திய உறவுகளை 
                மீட்டி பார்க்க மறந்து 
 போவது ஏன்?
                     அவர்களின் கனவுகள்
      கற்பனையாக  
       மாறுவது ஏன்?

 வாழ்வுக்கும்  உரிமைக்கும்   
இடையில்  நடை   பெற்ற
 போராட்டத்தில் 
தொலைந்து போன தங்களின் 
உறவுகள் எண்ணி மனம் உருகி விடும்
மூச்சுகள் ஆயிரம் தவிப்புகளை   
சொல்லி நிக்கிறது
 உணர்வு  என்பது  உரிமை 
என்பது சொகுசு அல்ல 
அது ஒரு தாகம்     
                            தாகம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது                         

  தாகம் இருக்கும் வரை
போராடுவது பொது நியதி 

முளை  நிலை யிலிருக்கும் 
விதை உறங்குவது இல்லை  
இன உணர்வு உள்ள மனிதனும் 
தூங்குவது இல்லை

பிரச்சனைகளும்  தானாக கருதரிப்பதில்லை 
தீர்வுகளும் தானாக உருவாகுவதில்லை
எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக வருவதும் 
ஆளும்கட்சி எதிர்க்கட்சி ஆவதும்
வரலாறு ஆகிறது அரசியலில்
                                                                 .....ஆக்கம்:அகிலன்,தமிழன்

1 comments:

  1. இந்தியாவின் புத்தியில் தமிழர் அரசியல் படு பிழையான பாதையில் சென்று போராட்டம் ஆயுத வழியாக மாறி எல்லாவற்றையும் கெடுத்து சும்மா இருந்த குழவிக்கூட்டை கலைத்து இடரை தேடியது போலாகிவிட்டது.அதிலும் தமிழரின் அதிசய குணங்கள் எப்பாதையில் சென்றாலும் வெற்றியடைய முடியாது.

    ReplyDelete