சிரித்து மகிழ...வாருங்கள்



ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு, குடிக்க
வெந்நீர் கொடு!

ஏங்க இப்படிப் பயப்படுறீங்க? மூளைக்காய்ச்சல்தான்
பரவுது! அது எப்படி உங்களுக்கு வரும்…?!


————————————

டாக்டர்…என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற
மாதிரி கனவு வருது…!

இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா?

ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி
என்னை இல்லே உதைக்கிறாரு…!!


———————————————


நேத்து நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான்
அனுப்பி இருப்பாரோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு!

ஏன் வீணா அவர் மேல பழியைப் போடுறீங்க?

பின்ன என்ன, வரதட்சணையா வாங்கின ஐம்பதாயிரத்தை
எடு_னு திருடன் கரெக்டா கேட்டானே…1


--------------------------------------------------
என் கணவர் இருக்கிற இடத்துல பணத்துக்குக்
குறைவே இருக்காது…’’

‘‘நிஜமாவா… அப்படி எங்க இருக்காரு?’’

‘‘ஏ.டி.எம்.ல வாட்ச்மேனா இருக்காரு..!’’


---------------------------------
காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல
 அவசரப்படுத்துறீங்க…?
காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் 

மாப்பிள்ளை பார்ப்பார்.

---------------------------

ஒருவர்: என் பொண்ணு தபால் மூலம் இங்கிலீஷ் 
கத்துக்கிட்டு இருக்கா…!
மற்றவர்: இதுவரை என்ன கத்துருக்கா…?
ஒருவர்: ஐ லவ் யூ சொல்ற அளவுக்குக் கத்துருக்கா…!


---------------------------

உன் மாமனார் வெச்சுனு இருக்கிற காளைமாட்டை
கேட்டியே, என்ன சொன்னாரு?

என் பெண்ணை அடக்கினா, காளை மாட்டைத்
தர்றேன்னு சொல்றாரு…!


------------------------------

 கணவன்: வீட்டை நீதான் பெருக்கினியா?
மனைவி: ஆமா! எப்படி கண்டுபிடிச்சீங்க? நீட்டா இருக்கா?
கணவன்: அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. நேத்து
நைட்டு பையிலருந்து சில்லறை கீழெ
விழுந்துடுச்சு. வேலைக்காரின்னா எடுத்து
பத்திரமா வச்சிருப்பா. இப்ப இல்ல. அதான் நீதான்
பெருக்கினியான்னு கேட்டேன்.


----------------------------

 “ என் மனைவி இறந்துபோய்விட்டால் நான் மறுமணமே
செய்துக்க மாட்டேன்.”
“ அவளைப் போல மனைவி அமைய மாட்டாளேன்னு
அச்சமா?”
“இல்லை. அமைஞ்சுடுவாளோன்னு பயம்தான்.'' 


---------------------------


 நீதிபதி: உனக்கு என்ன வயசு?
கைதி: ஐம்பதுங்க.
நீதிபதி: முப்பத்தைஞ்சுன்னு போட்டிருக்கே.
கைதி: அது, வழக்கு ஆரம்பிச்சப்போ உள்ள வயசுங்க.
----------------------------
நர்ஸ்: தூங்குவதற்கு மாத்திரை போட்டுக்கச் சொன்னேனே. போட்டீங்களா?
நோயாளி: ஸாரி! மறந்து போய்த் தூங்கிட்டேன்.
----------------------------
. ஒருவர்: அடுத்த பிறவியிலாவது கரப்பான் பூச்சியா
பிறக்கணும்.
மற்றவர்: ஏன்?
ஒருவர்: என் மனைவி அது ஒன்றுக்குத்தான் பயப்படறா?
-----------------------------
 “ அம்மா ராப்பிச்சை! சோறு போடுங்க! “
“ ஏம்பா நீ பகல்லகூட வந்தே போலிருக்கே “
“ அது ஓவர் டைமுங்க. “
----------------------------
நீதிபதி: பாலத்துக்கு அடில வெடி வச்சி தகர்க்க திட்டம்
போட்டது நீதானே?
கைதி: பாலத்துக்கு அடில தீபாவளி கொண்டாடினேன். இது
தப்புங்களா?
----------------------------
கணவன்: நீ செஞ்ச உப்புமாவுல ஏதோ தப்பு
நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.
மனைவி: ஏன் நல்லா இல்லையா?
கணவன்: இல்ல வழக்கமா வர்ற வயித்துவலி வரலியே.
அதான் கேட்டே
ன்.
                                               

0 comments:

Post a Comment