சினிமாவில் டிஜிட்டல் புரட்சி வரமா? சாபமா?

எல்லா அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்பிலும் நல்லது கெட்டது கலந்து உள்ளது. அதை முற்றிலுமாக ஆக்கபூர்வமான செயல்களுக்காக பயன்படுத்த வேண்டும்.

இன்றைய டிஜிட்டல் புரட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த டிஜிட்டல் சுனாமியில் சிக்கி ரத்த கண்ணீர் வடிக்கும் கனவு தொழிற்சாலை எனும் சினிமா பற்றிய தொகுப்பு இது.

கனவு தொழிற்சாலை:
ஒரு தொழிற்சாலையில் இருந்து ஒரு பொருள் தயாராகி வெளி வருவதற்கு பல்வேறு பட்ட மனிதவள குழுக்களின் உழைப்பு ஒருங்கினைக்கப்பட்டு அதன் மதிப்பும் கூட்டப்பட்டு சந்தைக்கு மக்கள் பயன்பாட்டிற்காக வெளிவருகிறது.

இதனைப்போலத்தான் திரைப்பட துறையிலும் ஒரு திரைப்படம் தயாராகி வெளி வருவதற்கு பல்வேறு பட்ட மனிதவள குழுக்களின் உழைப்பு ஒருங்கினைக்கப்பட்டு அதன் மதிப்பும் கூட்டப்பட்டு திரையரங்கிற்கு வருகிறது. மொத்தம் 24 வகையான தொழில்நுட்ப குழுக்களும், கதை, திரைக்கதை, நடனம், கம்ப்யூட்டர் கலை, நடிகர்கள், துணை நடிகர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்து மற்றும் சாராத ஆயிரத்திற்கும் மேலான மனித உழைப்பை பல மாதம் அல்லது வருட கணக்கில் தன் தோள்மீது சுமந்து இறுதி வடிவமாக திரைப்படம் திரையில் அரங்கேற்றுகிறது.

டிஜிட்டல் சினிமா வளர்ச்சி:
இன்றைய டிஜிட்டல் புரட்சியில் சினிமாவின் பங்கு மிகவும் அதிகம். பல அருட்பெரும் செயல்களும் குறைந்த பொருட்செலவில் சாத்தியமாகிறது. அக்கால சினிமா தயாரிப்பு பணிகளின் ஒட்டு மொத்த வலிகளும் தீர்க்க வந்த நிவாரணமாக இன்றைய டிஜிட்டல் புரட்சி அமைகிறது.

வரமா? சாபமா?
ஒரு படி ஏறினால் பல படிகள் சருக்குமாம் என்ற பழமொழிக்கு ஏற்ப டிஜிட்டல் புரட்சியால் வந்த நன்மைகளை விட தீமைகள் மிக அதிகம். சினிமா துறையில் டிஜிட்டல் புரட்சியால் பல வகையில் உரிமை சுரண்டல்களும், அறியாமை பலாத்காரங்களும் அரங்கேற்றப்படுகிறது.

ஏற்கனவே திருட்டு விசிடி தொல்லையில் உள்ள சினமா துறை வெந்த புண்ணில் வேலினை பாய்ச்சும் கொடுமையாக இனையதள விமர்சகர்களை கைகட்டி  வேடிக்கை பார்க்கும் தருவாயில் உள்ளது.

விமர்சனம் ஒரு அழகியக்கலை:
நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எரிந்து விட்டனர் இந்த வேடிக்கை இனையதள விமர்சகர்கள். விமர்சனம் கண்டிப்பாக இருக்க  வேண்டும் ஏனெனில் ஆரோக்கிய விமர்சகர்கள் வழியாக குறைகளை களம் காண வேண்டும். ஆனால் இன்றைய டிஜிட்டல் புரட்சியில் சாபக்கேடாக தரம் கெட்ட பல இனையதள விமர்சகர்கள் ஆங்காங்கே தினமும் இருவர் முளைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆயிரம் ஆயிரம் மனிதர்க்கு உணவளிக்கும் இந்த சினிமாத்துறையை கற்பழிக்கும் முயற்சியாக பல தவறான விமர்சனங்களை மக்கள் மனதில் நஞ்சை விதைக்கின்றனர் இந்த வேடிக்கை இனையதள விமர்சகர்கள்.

(கருப்பு) பூனைக்கு மணி கட்டுவது யார்?
பிறர் வாடா பல செயல்கள் செய்து இந்த வேடிக்கை இனையதள விமர்சகர்களை களம் காணுவது பெரிய வேலை. அது தனி ஒரு நபர் மூலம் நடக்க கூடிய விஷயம் அல்ல.

அனைத்து திரைப்பட துறை அஸோஸியேஷன்கள் மற்றும் அரசு நிர்வாகமும் இணைந்து இதற்கு கருத்துரிமை பாதிக்காத வகையில் ஒரு சட்ட பிரிவும் மற்றும் துறை சார்ந்த விழிப்புணர்வுகளை பொது (இணையதள) மக்களிடம் கொண்டுசேர்க்கவேண்டும்.


இல்லை என்றால் திரைப்படதுறை அழகிய அன்னப்பறவை போல் ஆவணப்படம் ஆகிவிடும்.
                                                                  

0 comments:

Post a Comment