மாவீரர்நாள் 2016

அன்று இலங்கை மன்னன்  இராவணனை   இந்தியா,  அரக்கனை அழிப்பதாக கூறி தமிழரை அழித்தது.
அதே இந்திய உதவியுடன் இன்று..........
தமிழர் தலைவனை பயங்கரவாதி என்று கூறி ......
இது சிங்கள,தமிழ் இனவாத அரசியல் தந்த பரிசு.
கனமான அந்த யுத்த காலம்.
போர் என்றால் போர் என்ற பெரும்பான்மை அரசியலின் கொக்கரிப்பும் , ஆயுதம் தான் இனி முடிவு என்ற  உணர்ச்சியூட்டும் வெறும் வாய்ப்பேச்சு பேசி தம் அரசியலை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளலாம் என கனவுகண்ட   தமிழ் அரசியல் வாதிகளால் வளர்க்கப்பட்டு  தூண்டப்பட்டு ஆயுத வழிக்கு இட்டுச் சென்ற அப்பாவித் தமிழ் இளைய சமுதாயம் எமது ஒற்றுமையினை நம்பி ஏமாந்து வீரர்களாகவே மடிந்தனர். இவர்களுடன்இவ்யுத்தகாலத்தில் அழிக்கப்படட உறவுகள் பல லட்ஷம். 
 தம்மை தாமே அழிக்கும் விட்டில்  பூச்சிகளாக வெளிநாட்டிலும் அகதிகளாக பரவி தமிழர் அடையாளங்களை துறந்து கொண்டிருக்கும் தமிழர் பல லட்ஷம்.
மொத்தத்தில் தமிழர் அழிவு என்பது தொடர்கதையாகிவிட்டது.
வாழும்வரை எம் மாவீரர் தியாகங்களை மதிப்பளிப்போம். mavirar nal

                                                                            தீபம்                                                                  

2 comments:

  1. அய்யகோ! எம் தமிழரை எண்ணுகையில் நெ ஞ்சம் நோகிறது.வானொலி ஒன்றில் புகழாரம் என எண்ணி புராணக் கதைகளில் வருவோருடன் ஒப்பிட்டு தலைவனை இகழ்கிறார்கள். மிகவும் இறுக்கமான கட்டுக்கோப்புகளுடன் உறுதியான கொள்கையுடன் போராடியவர் தலைவர் பிரபாகரன்.கண்ணனைப்போல் கோதைகளுடன் கொஞ் சவில்லை. பெண்களை மதித்தவர்.இராமனைப்போல் பெண்களை வதைக்கவில்லை.போர் அறத்தினை மீறவில்லை.இவர்கள் இல்லாம தாமும் எதோ கெட்டித்தனம் பேசுவது என எண்ணி உளறுகிறார் கள்.

    ReplyDelete
    Replies
    1. பிரபாகரனுக்கு உதாரணம் பிரபாகரன் தான்.அப்படி ஒரு மகன் அன்றும் பிறக்கவில்லை.இனியும் பிறக்கப்போவதில்லை.

      Delete