ஒளிர்வு:69- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆடி ,2016]

எற்றென்று இரங்குவது செய்யற்க செய்வானேன் 
மற்று அன்ன செய்யாமை நன்று [திருக்குறள்]

தவறு செய்யாத மனிதனே இருக்க முடியாது.
அது வள்ளுவருக்கும் தெரியும்.
 
எனவே,ஒரு வேளை தவறு செய்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை   தருகிறார்.
ஒரு தவறான செயலை செய்து விட்டு, செய்து விட்டோமே, செய்து விட்டோமே என்று  அதை நினைத்து இரக்கப்பட்டுக் கொண்டு இருப்பதில் ஒரு புண்ணியமும்  இல்லை. என்று வள்ளுவர் சொல்லுவதாக பரிமேலழகர் சொல்கிறார்.
அதாவது, அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடச் சொல்கிறார். குற்ற உணர்வு  எதையும் சாதிக்க பயன்படாது.
இது அனைத்து மதங்களிலும் கடை பிடிக்கப் படும் ஒன்றுதான்.
மனிதனை அவனின் பாவச் சுமையை குறைக்க ஒவ்வொரு மதமும் ஒரு வழியைச் சொல்கிறது.
மீண்டும் அது போன்ற தவறுகளைச் செய்யக் கூடாது, செய்த தவறுக்கு வருந்திக் கொண்டே  இருக்கக் கூடாது . மேலே ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.
மற்றன்ன செய்யாமை நன்று.......


An analysis of history of Tamil religion/Part:13

Stories describing creation are prominent in many cultures of the world.In Mesopotamia,the surviving evidence from the third millennium to the end of the first millennium B.C. indicates that although many of the gods were associated with natural forces,no single myth addressed issues of initial creation.It was simply assumed that the gods existed before the world was formed.Unfortunately,very little survives of Sumerian literature from the third millennium B.C.Several fragmentary tablets contain references to a time before the pantheon of the gods,when only the Earth (Sumerian: ki) and Heavens (Sumerian: an) existed.  

Modern knowledge of Sumerian religious beliefs and creation stories comes from the tablets excavated principally from the ruins of the ancient Sumerian city of Nippur, located in present-day Iran.The Sumerians likely were the inventors of the cuneiform system of writing, and they recorded creation myth in the world sometime between 3000 and 2340 BC.The next oldest known creation stories—the Babylonian version,Rig veda version and,the Hebrew version captured in the book of Genesis in the Bible did not appear for more than a millennium after the Sumerian version.

According to the Sumerian creation myth,there once was a time
where there were no humans on earth at all.Instead,earth was inhabited by the gods.Prior to the creation of Lahar,the cattle-god,and Ashnan,the grain-goddess,cattle and grain did not exist;therefore,the other gods were not able to eat bread or wear clothes.Even after the creation of the cattle and grain deities,the gods still could not be satisfied,there was much work to be done and these gods toiled the soil,digging to make it habitable and mining its minerals.They had not minded this at first.But when the female gods were created,the male gods had to work even harder to keep them happy.Then the gods had a great deal of trouble making enough bread to eat and enough clothes to wear.They become very angry at having to work so hard.Life on earth wasn't easy for these gods as one tablet says:

"When the gods like men
Bore the work and suffered the toll
The toil of the gods was great,
The work was heavy,the distress was much."

The gods were not happy with their situation.They were prone to complaining,backstabbing,and rebellion against their leaders.They needed a solution,Gods should have servants who would take care of their every need -a new race of slaves to take over their back breaking work.

Anu,the god of gods,also agreed that their labour was too great.and the council of the gods,decided to create humankind to free the gods from the need to work for their sustenance.His son Enki,or Ea,proposed to create man to bear the labour,and so,he instructs Nammu,his mother who represents the sea,to make clay suitable for fashioning humankind.Clay is probably the natural choice since it is what a man could mould into a complex form and it is a mixture of water and other things.All Abrahamic religions [Judaism,Christianity and Islam],as well as Greek mythology,Chinese mythology,Egyptian mythology & few others,Man is said to have been made from of clay or dust of the ground or yellow earth that God fashioned into the first man.The Sumerians also explained why the form of man was the same as that of the gods.Men were supposed to relieve the gods of labour;so it makes sense that they would have the form of gods in order to perform the same tasks.Also,to shape a man from the mixed clay,some feminine assistance,some pregnancy or childbearing aspects were also needed.So,Enki and  his half-sister Ninki or Ninmah [ another name of Ninhursag,Often stated as Enlil's sister,but also as his wife.] would work together to bring this idea to life – literally.A god was put to death,and his body and blood was mixed with clay.From that material the first human being was created,in likeness to the gods.Also,the above versions of the origin of man are related to slavery,clearly reflecting the Sumerian economy in which slaves laboured for the good of the priesthood and king.

Sumerian texts,too,speak of deformed humans created by Enki and
creation of man,Enkidu
the Mother Goddess (Ninhursag) in the course of their efforts to fashion a perfect Primitive Worker ,probably unavoidably,as part of a trial-and-error process.But finally when the perfect Man was achieved,Initially human beings were unable to reproduce on their own,but were later modified with the help of Enki and Ninki.Thus,man was created as a fully functional and independent human being.Also a Sumerian tale dealing with the primordial times states:

"When Mankind was created,
They knew not the eating of bread,
Knew not the dressing in garments;
Ate plants with their mouth like sheep;
Drank water from a ditch."

Such an animal-like "human" being is also described in the "Epic of Gilgamesh" which tells what Enkidu,the one "born on the steppes," was like before he became civilised by the temple prostitute,Shamhat,

:Gods in the field
In contrast to the above sumerian creation story,this is surprised to note that,the sangam literature,Tholkapiyam was never mention that World & life were created by god as most of the other religion said,But It clearly mentioned that they were evolved from five basic elements such as earth [land],fire,water,,air[wind] & space[sky].Thus,when all of them mixed each others,World evolved gradually.Then,when all of them move within a said  limit,Life on Earth evolved.Some what similar to present day evolution theory.

"The world and all the objects there (that have been named as above) 
are all complexes generated out of the five fold Basic Elements of Earth[Land] 
Fire,Water,Wind[Air] and Space[Sky]."
"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்-(Tolkapiyam/marapiyal 1589)

Also another the Ancient Poetry (anthology)- Paripadal” of the Sangam period reveals to us the Creation Story,which is also some what similar to present day evolution theory.

"In the sky,the first element ether,formless,
 appeared with sound in the sky with primal seed.
 After many eons the second element, air, that moves
 all elements, appeared.  That was followed by the
 third element, red fire,that appeared out of the air.
 That was followed by water
 in the form of snow and cold rain.  Then came the
 earth"[Paripadal2:5-12] 

All over the world we can find several tales on how man was created.Our origin was always a cause for controversy.But literature-wise,our collection of these stories is very rich in creativity and originality.

குழப்பவாதிகள்!!



உலகம். தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் மிகவும் சுருங்கிவிட்ட்தாக  பலரும்  பேசிக்கொள்கிறார்கள். உண்மைதான். ஆனால் மனித மனங்களும் அப்படி சுருங்கிவிட்டதா  என எண்ணத் தோன்றுகிறது. 
மிருகங்கள் ஒவ்வொன்றும்  ஒரு சில கூடாத குணங்களை கொண்டிருந்தாலும் அவற்றினை தம்மினங்களில் பெரும்பாலும் சாதித்துக் கொள்வதில்லை. அனால் மனிதனில் மட்டும் அப்பப்பா எத்தனை குணங்கள். எத்தனை மனங்கள். அத்தனையும் ஒருவர் மேல் ஒருவர் காட்டிக்கொள்வதிலேயே திருப்தியடைகிறார்கள். மகிழ்ச்சியடைகிறார்கள். அதுவும் அவற்றினை உறவற்றவர்களிலும்  பார்க்க உறவுகளிடம் அதிகம் பிரயோகித்துக் கொள்கிறார்கள்.
மென்மையாக பேசுவோர் அரிதிலும் அரிதாகவே காணக்கூடியதாக இருக்கிறது. மறுத்துப் பேசுவோர் மலிவாக கிடைக்கிறார்கள். உலகமேடையில் பசுத்தோல் போர்த்த நடிகர்கள் நம்பப்படுகிறார்கள்.மதிக்கப்படுகிறார்கள். உண்மை வாதிகள் உதாசீனம் செய்யப்படுகிறார்கள். இதுதான் புராணங்கள் கூறும் கலியுகத்தின் காடசிகளோ  என கருத வைக்கிறது..

பொழுது போக்கிற்காக திரைப்படம் என்று பார்த்தால் குத்து,வெட்டு,கொலை,கற்பழிப்பு கடத்தல்களால் நிரம்பி வழிகின்றன.அவற்றினை தொடர்ந்து நாடுகள்  முழுக்க அவை புற்று நோய் போன்று பரவி தலைவிரித்தாடுகிறது.அது அரசியல் வாதிகளுக்கோ ,ஆன்மீக வாதிகளுக்கோ அவர்களின் பணப்பை நிரம்புவதால் அது தொடர்பாக கவலை இல்லை.

புரியவில்லை! ஆனால் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றது.
                                                                                                              

என் குற்றமா, உன் குற்றமா?

யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர் மீது குற்றம் சாட்டி, அதை ஊதி பெரிதுபடுத்தி இறுதியில் மனஉளைச்சலில் உழல்வது என்னவோ நாம்தான். இப்படியே குற்றம் சாட்டிப் பழகிவிட்ட நமக்கு உண்மையைப் பார்க்கும் துணிவிருக்கிறதா? சத்குரு சொல்லும் விளக்கம் இங்கே.

சத்குரு: நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போதும், கருணையோடு இருக்கும்போதும், தாராளமாக வழங்கும் மனநிலையில் இருக்கும்போதும், உங்கள் வாழ்க்கை அழகாக அமைகிறது. யாராவது குற்றம் செய்துவிட்டதாக நீங்கள் கருதும்போதோ, அந்த அழகு மறைந்து அசிங்கமாகிவிடுகிறது. உண்மையாகச் சொல்லுங்கள். நீங்கள் செய்திராத ஒன்றையா அவர் செய்துவிட்டார்?

நம் பிரச்சனை என்ன? நாம் ஒன்றைச் செய்தால், அதைப் பொருட்படுத்த மாட்டோம். வேறு யாரும் பொருட்படுத்தக்கூடாது என்றும் எதிர்பார்ப்போம். ஆனால், அதையே வேறொருவர் செய்தால் பெரிதுபடுத்துவோம். மேரி மேக்டலீன் பற்றி பிரபலமான கதை உங்களுக்குத் தெரியும். அவள் உடலை விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தாள். அவள் ஊருக்கு யேசு வந்தபோது, அவரைச் சந்திக்க விரும்பினாள். ஆனால், ‘இழிதொழிலில் ஈடுபட்டிருக்கும் என்னை உன்னதமான மனிதர் எப்படிச் சந்திப்பார்?’ என்று அவளுக்குள் ஒரு போராட்டம்.

அதிகமான கூட்டம் இல்லாதபோது, யேசுவை அவள் அண்டினாள். அவரைத் தீண்டும் தகுதி தனக்கு இல்லை என்று, அவர் உடைகளைப் பற்றிக் கொண்டு நின்றாள். “பாவிகளை நீங்கள் மன்னிப்பதாகச் சொல்கிறார்களே? என்னையும் மன்னிப்பீர்களா?” யேசு சொன்னார், “நீ ஏற்கெனவே மன்னிக்கப்பட்டுவிட்டாய்.” ‘பத்து வருடம் தலைகீழாக நின்று தவம் செய்என்று யேசு அவளுக்குப் பரிகாரம் எதையும் பரிந்துரைக்கவில்லை. தான் மன்னித்ததாகக்கூட சொல்லிக் கொள்ளவில்லை. அவள் நிலை மன்னிக்கப்பட்டுவிட்டது என்றார். குற்றம் என்று ஆத்மார்த்தமாக உணர்ந்த கணத்திலேயே அது மறைந்துவிடுகிறது. விழிப்புணர்வுடன் இயங்கினால், உங்களுக்கும், உங்களுடைய இறந்தகாலத்துக்கும் இடையே தானாகவே இடைவெளி விழுகிறது. குற்ற உணர்வு ஏதும் இல்லாது போகிறது. விழிப்புணர்வுடன் இல்லாதபோதுதான், இறந்தகாலத்தையும் சுமந்து கொண்டு நடக்கிறீர்கள். ஓர் அரசன், தன் நாட்டின் மீது பக்கத்து நாட்டு மன்னன் போர் தொடுக்கப் போகிறான் என்று ஒற்றன் மூலம் அறிந்தான். போரில் வெற்றிக் கொள்ள முடியாது என்பதால், உடனடியாக அமைதி உடன்படிக்கை ஒன்றைத் தயார் செய்தான். அந்நாட்டு மன்னனிடம் கொடுக்கச் சொல்லி தன் தூதுவனை அனுப்பி வைத்தான். தூதுவன் தன் நண்பர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தான். அவன் செல்லும் வழியில் சில ஊர்களைக் கடந்து போக வேண்டியிருந்தது. அங்கிருக்கும் உறவினர்களிடம் ஒப்படைக்கச் சொல்லி ஆளாளுக்கு ஒரு மூட்டையைக் கொடுத்தார்கள். அத்தனை பாரம் ஏற்றியதில், தூதுவன் பயணம் செய்த குதிரையின் வேகம் குறைந்துவிட்டது. எல்லா மூட்டைகளையும் உரியவர்களிடம் சேர்த்துவிட்டு அவன் பக்கத்து நாட்டு மன்னனைச் சென்று சந்திப்பதற்குள், நேரம் கடந்து போர் மூண்டுவிட்டது. அவனுடைய நாடே சிதைந்துபோனது. சிறையில் அடைக்கப்பட்ட தூதுவன் சொன்னான். “வாழ்வில் நம் இலக்கை அடைவதே முக்கியம். மற்றவர்கள் சுமத்தியதை எல்லாம் சேர்த்துக் கொண்டால், நம் வேகம்தான் பழுதுபடும்.” உண்மைதான். மற்றவர் மீது சுமத்துவதாக நாம் நினைக்கும் குற்றச்சாட்டு உண்மையில் நம் மனதில்தான் பாரமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறது. நம் இயல்பையும், வேகத்தையும் அது சிதைக்கிறது. அச்சம், வன்முறை, பேராசை, குற்ற உணர்வு இவற்றின் மீது வளரும் எதுவும் மனிதகுலத்துக்கு மேன்மையான விஷயங்களைத் தரப் போவதில்லை. வாழ்க்கையை அதன் இயல்போடு ஏற்றுக் கொண்டவன் நான், எதைச் செய்தாலும் அதை விழிப்புணர்வோடு செய்து வந்திருக்கிறேன். என் வாழ்வில் எதையும் பாவமாகப் பார்த்ததில்லை.


ஏதோ பேச்சு வந்தபோது, என் மகளிடம் சொன்னேன், “வாழ்க்கையில் நீ எது வேண்டுமானாலும் விரும்பிச் செய். ஆனால் செய்வதை முழு ஈடுபாட்டுடன் மிகச் சிறப்பாகச் செய். உலகமே உனக்கு எதிராக நின்றாலும், துணிந்து அதைச் செய். ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கவனமாக இரு. உலகமே நீ செய்வதைக் கேவலமாகப் பார்க்கலாம். ஆனால், செய்ததை நினைத்து நீயே பிற்பாடு அவமானமாக உணரக்கூடும் என்று நினைத்தால், அதைச் செய்யாதே!” என் வாழ்க்கையில் இதைத்தான் கடைப்பிடித்து வந்திருக்கிறேன். நான் செய்த எவ்வளவோ விஷயங்களை என் பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, பெரியவர்களோ அங்கீகரித்ததில்லை. ஆனால் எந்தக் கட்டத்திலும், நானே கேவலமாக நினைக்கக்கூடிய எதையும் செய்ததில்லை. மிகச் சிறிய வயதிலேயே ஏதோ ஒரு கட்டத்தில் எனக்குள் இந்த முடிவு வந்துவிட்டது. இன்றைக்கு நான் வழங்கும் ஆன்மீகப் பயிற்சிகளைக் கூட உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். அவற்றை ருசித்துவிட்டவர்கள் அதனுடன் காதல் வயப்படுகிறார்கள். அதை ஆனந்தமாக ஏற்றுக் கொள்கிறார்கள். பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க முடியாதவர்களுக்கு என் அணுகுமுறை புனிதத்துக்கு எதிரானதாக, ஓர் அவமரியாதையாகக்கூடத் தோன்றலாம். ஆனால், அந்த ஆன்மீகப் பயிற்சிகள் பற்றி எனக்கே சந்தேகம் வந்தது இல்லை. எனக்குள் கேள்விகள் எழுப்பியதில்லை. உங்களுக்கும் அதைத்தான் சொல்வேன். செய்வதைத் திருந்தச் செய்யுங்கள். ஆனால், நீங்களே பிற்பாடு அவமானகரமாக நினைக்கக்கூடும் என்ற செயலை வயதின் வேகத்தில், சபலத்தில் உந்துதலில் செய்யாதீர்கள்!