தமிழக அரசியலை ஆளும் அர்த்தமற்ற 'திராவிடம்'


அன்று தொட்டு, பிரதான தமிழக அரசியல்வாதிகள் தங்கள் கட்சிகளின் பெயரில்  'திராவிட' என்னும் பதத்தை விடமுடியாத ஒன்றாகச் சேர்த்துப்  பிடித்து  வைத்திருப்பதில் தீவிரமாக இருக்கின்றார்கள். உண்மையில் அப்படி ஒரு 'திராவிடம்' என்ற பற்றோடு எத்தனை இனங்கள் இப்பொழுது விசுவாசிகளாக இருக்கின்றார்கள்?

பல இராச்சியங்களாக இருந்த தெற்காசிய பெரு நிலத்தை, ஆங்கிலேயர் தங்கள் படை பலத்தால் கைப்பற்றி, நிர்வாக வசதிக்காக ஒன்றாய் இணைத்து
ஆண்டார்கள். சுதந்திரம் கொடுக்கும்போது பல  இனங்களைக் கொண்ட முழு இடத்தையும் ஒரு நிலமாக்கி 'இந்தியா' என்று விட்டுச் செல்லும்போது, இந்தியாவின் ஆட்சி  உரிமையை ஆரியர் வசம் விட்டுச் சென்றனர். 

பாக்கிஸ்தான் தன் பகுதியை கேட்டு வாங்கிக் கொண்டது. ஆனால், திராவிடரோ, சீக்கியரோ அல்லது வேறு மொழி-மதத்தினரோ தனியே செல்ல நினைக்கவில்லை. இதன் விளைவாக இந்தியாவில் சிறுபான்மை 41 % மான இந்தி பேசுவோர் ஆதிக்கம் பெற்று, இதர 59 % வேறு மொழி பேசுவோர்களிடம் இந்தி மொழியைத் திணிக்க முயன்றார்கள்.

இந்த இந்தித் திணிப்பை எதிர்த்து ஈ.வே.ரா. போராடினார். தனது போராடடத்திற்கு வலு சேர்ப்பதற்காக தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் இனத்தவர்களை உள்ளே இழுக்கும் நோக்கில் 'திராவிடர் கழகம்' என்ற அமைப்பை உருவாக்கினார். ஆனால், இந்த அமைப்பு ஒரு 'தமிழர் கழகம்'  ஆக இருந்து வந்ததே ஒழிய மற்றைய மொழியினர் இதில் பெரும்பாலும் சேர்ந்து கொள்ளவில்லை.

'திராவிடர்' கழகம்,  தனித் (திராவிட) தமிழ் நாடு வேண்டும் என்று
போரிட, கருத்தில் வேறுபட்ட அண்ணா , பிரிந்து சென்று 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று ஆரம்பித்தார். பின்னர் கலைஞருடன் வேறுபட்டு 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்று எம்.ஜீ .ஆர். ஆரம்பித்தார். தற்போது அம்மா அ தி மு க,  சும்மா அ தி மு க,  எம்.ஜீ .ஆர்.அ தி மு க,  ஐயா அ தி மு க,  கொய்யா அ தி மு க என்று கணக்கற்ற கடசிகள்; எல்லாமே பெயரில் 'திராவிட' என்று சேர்ப்பதைக் கைவிடுவதாக இல்லை!

ஆனால், தமிழ்நாடு அல்லாத இதர 'திராவிட' மாநிலங்களில் எந்தவொரு கடசிகளும் 'திராவிட' என்ற சொல்லை பெயர்களில் உபயோகிக்கவே இல்லை. முக்கியமாக, ஆந்திர மாநிலத்தில் பிரபலமான கட்சி 'தெலுங்கு' பெயர் கொண்டது. கர்நாடக மாநிலத்திலும் 'கர்நாடக' கட்சி பல இடங்களில் வென்றது. எந்த ஒரு பிற மாநிலத்தவரும் தங்களை 'திராவிடர்' என்று அறிமுகப்படுத்த விரும்பவும் இல்லை; திராவிடம் பேசும் தமிழர்கள் பின்னால் அவர்கள் சென்றதும் இல்லை. மாறாக, வெறுப்புணர்வுடன்தான் தமிழர்களை நோக்குகின்றார்கள்.
தமிழர்கள் வாழும் பகுதிகள் பெரும்பாலும் வரண்ட பிரதேசமாகவும், அண்டை  திராவிட மாநிலங்கள் நீர்வளம் மிக்க பகுதியாக இருப்பதால் தமிழ் நாட்டுக்கும் அவர்களுக்கும் தண்ணீர்ப் பிரச்சனை எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கின்றது. சகோதர (அல்லது தாய்) திராவிடர்கள் என்று ஒன்றும் தமிழர்பால் அவர்கள் பாசக்கரம் நீட்டுவதில்லை. எதற்கும் முரண்டு பிடிக்கின்றார்கள்.

ஆதலால், 'திராவிட' என்றால் இப்பொழுது தமிழ் மட்டும்  தான் என்று ஆகி விட்டது.  கட்சிகளின்  பெயரில், 'திராவிட' என்ற சொல்லை விலத்தி விட் டால் தோற்றுப் போய்விடுவோமோ என்ற அச்சத்தில் திராவிடத்தை இன்னும் பிடித்து வைத்துக்கொண்டு திரிகிறார்கள்.

மற்றைய மாநிலங்களை போல் அல்லாது தமிழர்கள், ஒரு மலையாள எம். ஜீ. ஆரை  அன்புடன் ஏற்றார்கள்; கன்னட அம்மாவை உவப்புடன் வரவேற்றார்கள். தமிழில் பெயரில்லாத தமிழர் ஸ்டார்லினையும் ஏற்றுக் கொள்ளுவார்கள்; கன்னட ரஜனி 'ஆம்' என்று தலை அசைத்துவிட்டு இருந்தால் போதும், அவரையும் ஒரு 100 % ஆதரிப்பார்கள்; ஆனால் ஒரு தமிழர் தமிழருக்கு மட்டும் என்று கட்சி  தொடங்கினால்  ஏற்றுக் கொள்ள மாடடார்கள்.

ஏன்,  'திராவிட' என்ற சொல்லை நீக்கிவிட்டு, 'தமிழர் கழகம்', 'தமிழர் முன்னேற்றக் கழகம்' , 'அ.இ தமிழர்  முன்னேற்றக் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்யக்கூடாதா? இன்னமுமா திராவிடத்தை நீக்கப் பயம்?

தமிழ் மீதும், தமிழர் மீதும், தமிழ் நாட்டின் மீதும் பற்று கொண்டு  'நாம் தமிழர்' என்று கட்சி தொடங்கிய தமிழர், சீமானைக் ஓரங்கட்டி விட்டுவிட்டு அப்படி என்ன திராவிடப் பற்றுக் கொண்டார்களோ தமிழ் மக்கள் என்பதை நாம் அறியோம்!

தமிழ் மக்கள், திராவிட வாதிகளையும், வேற்று மாநிலத்தினரையும், குடும்ப வாரிசுகளையும், பணம் விழுங்கும் முதலைகளையும், சினிமா நடிகர்களையும் கைவிட்டு, ஒரு புதிய தலைமுறையாக ஓர் உள்ளூர்த் தமிழனை நம்பி ஏற்றுக் கொள்ள மாடடார்களா என்று அங்கலாய்த்து இருக்க வேண்டி உள்ளது!

ஆக்கம்:செல்வத்துரை,சந்திரகாசன் 

2 comments:

  1. வேதன்Sunday, May 07, 2017

    கிடைத்துவிடும் சிறு பதவிகளை வைத்துக்கொண்டே அந்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி அடுத்தவர்களை நசுக்கி இன்பம் காணும் தமிழரை விட வேறு மொழிக்காரன் தமிழனை ஆழ்வது மேலானது.

    ReplyDelete
  2. நாட்டுக்கு நாடு சுற்றுலா என்பது வழமையானது.சுதந்திரமானது.பொழுது போக்குமானது.75 வயது தமிழ் கிழவி கனடாவிலிருந்து லண்டன் பலமுறை போய் வருவதனை அந்த விமான நிலையத்தில் கடமை புரியும் தமிழ் பெண் உத்தியோகத்தர் கண்டித்தாராம்.எப்படி இருக்கிறது தமிழர் பண்பாடு.இது போன்று பல உதாரணங்கள் கூறலாம்.தமிழா உனக்கேன் ஆடசி ஆசை?

    ReplyDelete