விவாகரத்து அவசரமா?


அன்று,கனடிய மண்ணின் முதன்முதலில் கால் பதித்த காலமது.டொரோண்டோ நகர வீதியின் பல இடங்களில் வழக்கறிஞர்களின்  ''need quick divorce ,call 416-0000000 ' என்ற விளம்பர ங்களை வாசித்து வியந்திருக்கிறேன். [தங்கள் வருமானத்திற்காக] ''அடுத்தவனை விட நான் கெதியாக உங்களை பிரித்து வைப்பதில் கெட்டிக்காரன்'' என்று அவ்விளம்பரம் என் காதுக்குள் குசுகுசுக்க எனையறியாமல் எனக்குள் நான் சிரித்திருக்கிறேன். இத்தனை தூரம் திருமண வாழ்க்கை என்பது காசு வைத்து ஆடும் ஒரு ஆடு,மாடு மந்தைகளின் தொழில் போன்று   மேற்கு நாடுகளில் மலிந்துவிட்ட்து என எண்ணினேன்.
அவ்வேளையில்நான் எமது நாட்டில்  எனது சிறுவயதில் கேள்வியுற்ற சில குடும்பங்களின் கூடி வாழ்ந்த வாழ்க்கையினை  அன்று  எண்ணி. பெருமைப் பட்டிருக்கிறேன்...
உதாரணமாக,[பெயர்கள் கற்பனை]ஒரு சம்பவம்.
கணவன் கோவலனை எதிர்பார்த்து கண்ணகி உணவும் உண்ணாது ஆவலோடு அறுசுவையும் ஆக்கி காத்திருக்க, அவனோ குடித்துவிட்டு வந்து அவளையும் அடித்துப்போட்டு, ஏச்சுக்களோடு வெறும் நிலத்தில் வீழ்ந்துகிடக்க,அவளோ  கவலையுடன் அவன் தலைக்கு தலையணை வைக்க
செல்ல,அவனோ ஏசியபடி அவளை உதைந்துவிட அப்படியே போய் தூர விழுந்தவள் மயங்கி,பின் மயக்கம் தெளியவே மிகவும் சிரமப்பட்டு தட்டில் உணவெடுத்துவந்து அவனருகில் இருந்து அவ்வுணவை தன் கைகளில் திரட்டி அவன் வாயருகில் கொண்டு செல்ல அத்தட்டினையும் உணவையும் தகாத வார்த்தைகளினால்  ஏசியபடியே அவன் கைகளினால் அடித்துவிட உணவு எல்லாமே தரையில் பரவிட இறுதியில் அவர்களது.நாய்பாடு கொண்டாட்டம்.
இப்படி பல் விதமான யுத்தம் நாள்தோறும் முன்னிரவு நடப்பதனை பார்க்கும் அயல் வீட்டுக்  கண்கள்,அவளுக்கு காலையில் ஆறுதல் கூற காத்திருக்கும் வேளையில்,
அக்கோவலனும், கண்ணகியும் வீட்டிலிருந்து வீதி வழியே ஒருவர் ஒருவர் உரசிக்கொண்டு கலகலப்பாக சிரித்து உரையாடிக்கொண்டு, -ஆறுதல் சொல்ல காத்திருந்த அயல் வீட்டுக் கண்க ளுக்கும் -புன்னகையோடு விருந்தளித்து செல்வர்.

இப்படியான வெவ்வேறு சம்பவங்கள் பல குடும்பங்களில் பலமுறையும் நடைபெறுவதனை கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதற்காக கணவன் அரக்கனாகவும்,,மனைவி அடிமையாகவும் இருக்க வேண்டும் என்றோ  அல்லது கணவன் அடிமையாகவும் மனைவி அரக்கியாகவும் இருக்க வேண்டும் என்றோ கூறவும் இல்லை, எவ்வளவு தூரம் நம் இனத்தவர் அன்று பொறுமைசாலிகளாக இருந்தார்கள் . அதனால்  பிரிவு என்பதினை சந்திப்பது மிகமிக குறைவாகவே இருந்தது  என்பதனையே நினைவூட்டிட எத்தனித்தேன்.

ஆனால் எம்மத்தியில் இன்று எல்லாம் நிலைமை தலை கீழாகிவிட்டது. எடுத்ததிற் கெல்லாம் பிரிவே முடிவு என்ற நிலைக்கு இளையோர் வந்துவிடுகிறார்கள்.
.காதலித்து மணமேடை வரை வந்தவர்கள் கூட அற்ப விடயங்களில் குறைக்கண்டு அவ்விடத்திலேயே மன முறிவடைந்து திருமணத்தினை நிறுத்திவிடும் சம்பவங்களும் நம் மத்தியில் நடந்தேறுகின்றன.
கனடாவில் 2006 இல் 08 வீதமாக காணப்படட திருமண முறிவுகள் தற்போது 04 வீதமாக குறைந்துள்ளன என்று கனடிய தகவல்கள் மகிழ்வுடன் கூறினாலும் தமிழர் மத்தியில் அது பலமடங்கு அதிகரித்துள்ளதாகவே நமது ஊடகங்கள் கவலை தெரிவிக்கின்றன.

காதல் கல்யாணமானாலும் சரி பேச்சு கல்யாணமானாலும் சரி திருமணத்தின் பின்னரே தம்பதிகள் ஒருவரை ஒருவர்தெரிந்து கொள்ளும்  நிலை ஏற்படுகிறது.காதலிப்பவர்கள் கூட எத்தனை வருடம் காதலித்தாலும்   ஒருவரை ஒருவர் கவர்ந்து கொள்வதற்காக தங்கள் உண்மை த்தோற்றத்தினை மறைத்து கொள்வதில் ஒருவரைவிட மற்றவர் புத்திசாலியாகவே காட்டிக்கொள்வர்.. அதனால் திருமணத்தின் முன் அவர்கள் ஒருவரை சரியாகத் தெரிந்து கொள்வதில்லை. புரிந்துகொள்வதில்லை.
எனவே தான் காதலித்து கல்யாணம் செய்ப்பவர்கள் இங்கு திருமணத்தின் முன் இருந்தது போன்ற அணுகுமுறைகள் திருமணத்தின்பின் இருவருக் குமிடையில் இருக்கவேண்டும் என்று எல்லாத் தருணங்களிலும் எதிர்பார்க்க முடியாது. குடும்பத்தில் கணவன்/மனைவியாகிவிட் ட இருவருக்கும்  இதுவரையில் இல்லாத குடும்ப சுமைகளினை பங்கிடவேண்டிய வர்களாகிவிடுகின்றனர் என்பதனை இருவருமே உணர்ந்துகொள்ள வேண்டும்.

முதலில் நாங்கள் ஒன்றினை தெரிந்து கொள்ள வேண்டும்.மனிதன் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்.அவர்களது விருப்பு,வெறுப்பு, எல்லாம் ஒன்றாக இராது. அவர்களது செயல்,நடை ஒன்றாக இராது.ஒருவன் மாதிரி நூறு வீதம் சமமான இன்னொருவனை நாம் காண முடியாது. நான் நினைக்கிற என்னை மாதிரி இன்னொருவன் 100 வீதம் இருக்க முடியாது.
இதே போன்றே குடும்ப வாழ்விலும் இணையும் கணவன்/மனைவி
கிடையில் வித்தியாசமான விருப்பு,வெறுப்புக்கள் இருக்கலாம். அவற்றினை புரிந்து விட்டுக்கொடுத்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
ஒரு குடும்பத்தின்  பங்குதாரர் கணவன் -மனைவி என உணர்ந்து உங்கள் பொறுப்புக்கள் என்ன என உணர்ந்து நடக்க வேண்டும்.
இருவரும்,ஒவ்வொருவரினதும் அபிப்பிராயம், வேலைப்பழு, இரசனை, போன்றவற்றை தெரிந்தும்,புரிந்தும் நடக்கவேண்டும்.
ஒருவர் கருத்துக்களை ஒருவர் செவிமடுப்பதும்,அதுபற்றி கலந்துரையாடுதலும்  கணவன் மனைவிக்கிடையில் மேலும் அன்பினை வளர்த்துக் கொள்ளும்.
அவற்றினை  விடுத்து எடுத்ததுக்கெல்லாம் பிரிவு தான் முடிவு
எனில் விவாகரத்து என்பது நீங்கள் உணரும் பிரச்சனைகளை ஒருநாளும் தீர்த்து வைக்காது.பதிலாக கவலைகளை அதிகரிக்கவே செய்யும்.இருவர் இணைந்து வாழ்வதே வாழ்க்கை.பிரிந்தவர்கள் உலகில் யாருமே சந்தோசமாக வாழ்ந்ததற்காக நாம் அறியவில்லை..
அத்துடன் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்களின் பிரிவு பிள்ளைகளுக்கும் மனதளவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.இள வயதில் பிள்ளைகளுக்கு விரக்தியும், வேதனையும் ஏற்பட்டு அதன் விளைவாக விளைவாக எதற்கும் கோபப்படும் நிலையும், தனிமையான, பாதுகாப்பற்ற உணர்வும் நிறைந்தே காணப்படும்.  பிள்ளைகளின் கல்வியில் உயரிய நோக்கத்தினை  அடைய பெற்றோர்களின் பிரிவு பிள்ளைகளுக்கு தடைக்கல்லாகவே  நிமிர்ந்து  நிற்கிறது.
அதேவேளை,பிரிந்தவர்கள் ஆணோ/பெண்ணோ வேறு யாருடனும் சென்று [தம்மைத் தானே கேவலப்படுத்தி] மகிழ்ச்சியுடன் வாழ்ந்து விடவும் முடியாது.
விவாகரத்து என்பது ஆத்திரத்தில் அறிவிழந்து தற்கொலை முயற்சியில் இறங்குவது போலாகும்.வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! வழக்காடு மன்றம் செல்வதற்காக அல்ல என்பதனை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு சகல தரப்பினரும் இனிதே வாழ்ந்து காட்டலாம்.

-ஆக்கம்:செல்லத்துரை,மனுவேந்தன்.




3 comments:

  1. வெளிநாடுகளில் இளையோரின் திருமண முறிவுக்கு அருகில் வாழும் அவர்களது தாயமாரே காரணமாக இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. கண்ணன்Sunday, April 16, 2017

    நல்ல பதிவு.

    ReplyDelete
  3. செல்வாMonday, April 17, 2017

    தாய்மாரை விட சொந்தபந்தங்களும் காரணமாய் இருக்கலாம்.
    ஒரு நல்ல சம்பந்தம் வந்தால் அதை பொறுக்கமுடியாத எரிச்சலில் தொடங்கி, மணமானவர்களுக்கிடையே சிண்டு மூட்டிக் குழப்பி, விவாகரத்துவரை கொண்டு சென்று மகிழ்வடைவார்கள்.
    திரும்பவும் அவர்கள் திருமணம் வேறு எங்காவது செய்தாலோ, அதையும் ஏற்றுக்கொள்ள இயலாது வெளிப்படையாகவே விரோதம் காடடவும் தயங்க மாடடார்கள்!
    இப்படியானவர்களிடம் இருந்து ஒதுங்கி வாழ்ந்தால்தான் திருமண வாழ்க்கை நிலைத்து நிற்கும்!

    ReplyDelete