அவள் ஏன் அப்படி?......ஒரு கடிதம்


அன்புள்ள அப்புவுக்கு                                     17-09 -2012
உங்கள் கடிதம் கிடைத்தது.உங்கள் சுகம் அறிந்து மகிழ்ச்சி.
அப்பு,நீங்கள்  கடிதத்தில் குறிப்பிட்டதுபோல் இங்கு அப்படி நடக்கவில்லை.எங்கட சமுதாயம் ஒரு வீட்டில ஒரு சம்பவம் நடந்தால் அதற்கு காது வைச்சு மூக்கு வைச்சு கதைக்கிறதில கெட்டிக்காரர்.அதிலை இந்தப் பெம்பிளையள் ஒரு பெம்பிளையைப் பற்றி உப்பு, புளி போட்டு கதையை பரப்புவதில்  மகாகெட்டிக்காரராய் இருக்கினம்
அப்பு  த்ரிஷா கனடாவில் கணவனுடன் குடியேறி நன்றாகத்தான் வாழ்ந்தாள்.அவள் கனடாவில் வாழ்ந்தாலும் ஊரில் இருந்தது போலவே வேறு ஆண்களிடமோ,பெண்களிடமோ பேச்சுக்களின்றி அமைதியாகவே வாழ்ந்தாள்.ஆனால்,கட்டினவனோ கனடிய வாழ்வில் முழுநேர தண்ணிக்காரனாய் மாறிவிட்டான்.அவனது அட்டகாசம் வீட்டில் நண்பர்களையும் அழைத்து வந்து தண்ணியடித்து  ௬த்தாடும்  அளவுக்கு மோசமாகிவிட்டது.அவளும் பொறுக்குமளவுக்கு பொறுத்துவிட்டாள். இறுதியில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.
அப்பு,அவன்மட்டும் விவாகரத்து செய்துகொண்டு மறுகலியாணமும்  செய்துவிட்டான்.அவள் மட்டும் செய்ய நினைக்கவே கூடாதாம்.எப்படி இருக்கு எங்கள் சமுதாயத்தின் நியாயம்.தவறு செய்தவன் வாழப்போகிறான்.தப்பே செய்யாத ஒரு அப்பாவிப் பெண் அவள் வாழக் ௬டாதாம்.அவள் ஏன் தனியே வாழ வேண்டும்.அவளைப்பற்றி கதை அளந்து திரியும் இந்த மனிதக்௬ட்டம்  தங்களைபோல் அவளுக்கும் வாழ ஆசை இருக்குமென்றோ,அவளும் ஒரு மனிதப் பிறவிதான் என்பதனையோ ஏன் சிந்திக்க மறுக்கிறது.
இதை எங்கட ஆட்கள் எலு ம்பில்லா நாக்கால் எப்படியெல்லாம் பேசிக்கொண்டார்கள் என்பது நானும் அறிந்தேன்.
அப்பு எங்கேயோ வாசித்த ஞாபகம்.ஒரு பெண்ணுக்கு ஒருத்தியை காரணமில்லாது பிடிக்கவில்லை என்றால் அந்த ஒருத்தி மிகவும் அழகுள்ளவளாக இருக்கும்.ஒரு ஆணுக்கு  ஒருத்தியை காரணமில்லாது பிடிக்கவில்லை என்றால் அந்த ஒருத்தி அவனை ஏறெடுத்தும் பார்க்காதவள் என்றே பொருள்.
அப்பு,உங்கள் சுகத்தையும் தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.மீண்டும் அடுத்த மடலுடன் சிந்திப்போம்.
இப்படிக்கு
உங்கள் மகன்
ம.வேந்தன் .

1 comments:

  1. உண்மையான செய்திகள்

    ReplyDelete