உயிர்களை உருவாக்கியது யார்?

நாம் வாழும் இவ்வுலகிலே பல விதமான உயிர் இனங்கள் வாழ்கின்றனஎத்தனைஎத்தனைமனிதர்கள்மிருகங்கள்பறவைகள்
பூச்சிகள்,  புழுக்கள்,  ஜெந்துக்களும்மற்றும் மரங்கள்கொடிகள்செடிகள்புல் பூண்டுகள் என்று அப்பப்பாஎத்தனை கோடிக்கணக்கான படைப்புகள்!

அத்தோடுஒரே உயிர் இனத்தை எடுத்தால்எந்த ஒரு இரண்டும் ஒரே மாதிரி உருவம் இருப்பதில்லைஒரே மாதிரி பேசுவதில்லைஅசைவதில்லைவாழுவதும் இல்லை!

எல்லா உயிரனத்தின் உடம்பினுள்ளும் எத்தனை விதமான வெளிஉறுப்புகள்உள் உறுப்புகள்இரத்த வகைகள்கலங்கள்எலும்புகள்தசை நார்கள்இரத்தங்கள் என்று அடே அப்பா!

இவற்றை எல்லாம் உருவாக்கியது மட்டுமல்லஎல்லா உறுப்புகளும் பிழையே விடாதுஓயாதுதொடர்ந்து இயங்கிக்கொண்டு இருப்பதற்குத் தேவையான சக்திகளை -புரதம்கொழுப்பு, இரத்தம் முதலியனஅளவோடு.அதாவது ஆகக் குறைவாயும் இல்லாமல்கூடுதலும் இல்லாமல் அளவோடு கிடைக்கச் செய்து இயந்திரத்தை நிற்காது ஓட வைத்துக்கொண்டிருக்கும் சக்திதான் என்ன?

இந்த மதி நுட்பமானசிக்கலான இயக்கங்கள் எல்லாம் எப்படித்தான் தொடங்கினதொடர்கின்றன என்பதை அறிந்துகொள்ள முடியாது போனதால்மனிதன் இலகுவான ஒரு முடிவுக்கு வந்தான்இதற்கெல்லாம் ஒரு'நுண்ணறிவுள்ள சிருஷ்டிகர்த்தா' ( Intelligent Designer / Creator ) என்ற ஒருவரால்தான் முடிந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்தான்அவருக்குக் கடவுள் என்று பெயரையும் வைத்துக் கொண்டான்ஆகஇந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் எதையும் உருவாக்கிபடைத்துகாப்பாற்றிஇயக்கிஇறுதியில் அழித்து விடுபவனும் கடவுளே என்று நம்பத் தொடங்கினான்அவர் இன்றி எதுவுமே அசையாது என்று முடிவு செய்தான்.

ஆனால்நிறுவல் இன்றி ஒன்றையும் ஏற்றுக்கொள்ள இணங்காத கடவுள்
மறுப்புவாதிகள்சமூக சீர்திருத்தவாதிகள் எல்லோரும் இப்படி முடிவு எடுப்பது மனிதனின் ஆற்றாத்தனம் என்றும்கடவுள் என்பது ஒரு மூட நம்பிக்கை என்றும் பறை சாற்றித் திரிவார்கள்.

இவர்களின் கூற்றுப்படி, 'அப்படி ஒரு கடவுளும் இருந்து இவற்றை எல்லாம் படைக்கவில்லை;  எல்லாம் இயற்கையாகவே தானாகவே உருவாகின்றன,  ஓர் உயிர் உருவாகத் தேவையான பொருட்கள் எல்லாம் என்றோஎப்போதோ காத்திராப் பிரகாரமாகஎதிர்பாராத சூழலில்,  தற்செயலாக,  என்னோ விதமாக சந்தித்துக் கலந்ததால் உருவானது முதல் தோன்றிய ஒற்றைக் கல உயிரில் இருந்துதொடர்ந்துகோடிக்கணக்கான வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பரிணாம வளர்ச்சியினால்வெவ்வேறு விதமான உயிரினங்கள் உருவம் பெற்றனஎன்பதுதான் உண்மை என்பார்கள்.

  •                                             

ஆனால்அளவற்ற சிக்கல் கொண்ட இந்த உடலமைப்பை உருவாகவோ,  இயக்கவோ,  பராமரிக்கவோ எப்படி அந்த இயற்கை என்பது உதவி செய்துகொண்டே இருக்கலாம்எவ்வளவு அழகான அதிசயமான பிறப்புகள் இவை எல்லாம்அது எப்படி பல விதமான உயிர் இனங்களும்இயற்கையாய் நடக்கும் பரிணாம சக்கரத்தில்தான் என்றாலும்ஒரு வித பிசகலும் இல்லாது பிறந்து,  வாழ்ந்துமடிந்துகொண்டே இருக்க முடியும்? 'காத்திராப்பிரகாரம்' எப்போதோ ஒருமுறை வரலாம்எப்பொழுதும்எந்நேரமும் வரமுடியுமா?

ஓர் உயிர் உருவாவதற்கு DNA, RNA என்னும் இரு வகை அமிலப் பொருட்கள் தேவையாகும்அமினோ அமிலம் எனப்படும் புரதக் கட்டமைப்பால் உருவாகப்பட்டது தான் உடம்பினுள் இருக்கும் எண்ணற்ற கலங்கள்ஓர் உயிரின் மரபணுவை DNA முடிவு செய்யஇதை எல்லாக் கலங்களுக்கும் இட்டுச் சென்று புரத உற்பத்திக்கு உதவி செய்வது RNA ஆகும்அதாவது, DNA ஒரு கணினி என்று வைத்தால்அதனுள் இருக்கும் மென்பொருட்கள் எல்லாம் RNA என்று வைத்துக் கொள்ளலாம்இன்னும் விளக்கமாகச் சொன்னால், DNAநிலையாய் இருந்து சிக்கலான பல தகவல்களை தன்பால் நீண்ட காலமாகச் சேமித்து வைத்திருக்க, RNA தன் பலவிதமான திறமைகளின் மூலம் நுண்ணுயிர்களின் பல பாகங்கள்பாலும் இட்டுச் சென்று எண்ணற்ற பணிகளைச் செய்கிறது.

இந்த DNA,  RNA என்பவற்றை செயற்கையாக உருவாக்க முடியுமாமுடியும் என்று ஓர் அடிப்படை உயிரணுவை செய்தும் காட்டியுள்ளார்கள்ஆனால்இவற்றை உருவாக்கிய மூலத் தனிமங்களை இவர்களா உருவாக்கினார்கள்இல்லையே!

இவ்வளவு அற்புதமான உயிரினம் ஒன்று உருவாவதற்கோவளர்ச்சி அடைவதற்கோ எப்படி இயற்கையானது அந்த அளவுக்கு உதவி இருக்க முடியும்இந்த தலைகண்காதுவாய்மூக்குகைகால் முதலான வெளி உறுப்புகளும்இதயம்சுவாசப் பைகுடல்ஈரல்இரைப்பை என்று எண்ணற்ற உள் உறுப்புகளும்எங்கும் சூழ்ந்திருக்கும் கலங்கள்,  தசைகள,  நார்கள் இரத்தம் என்று எல்லாமே எவ்வாறு அந்ததந்த இடத்தில்சரியான அளவோடு இம்மியளவும் பிழை விடாது பொருத்தப் பட்டிருப்பதற்குஅந்த இயற்கையாக நடந்த 'காத்திராப் பிரகாரமாக அதிசயச் சேர்ப்புச் சந்திப்புஎன்பது கொஞ்சம் நம்பவே முடியாத ஒரு நிகழ்தகவாய் (probability )இருக்கின்றதே!

சும்மா ஒருமுறை யோசித்துப் பாருங்கள்ஒரு கணினியையோ ராக்கற்றையோ உருவாக்குவதற்குத் தேவையான சகல இலத்திரமின் பொருட்கள்உலோக வகைகள் எல்லாம் காத்திராப் பிரகாரமாக இயற்கையில் ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கின்றதாஅல்லது தேவையான அளவு செங்கட்டிகள்,  சீமந்துமணல்கல் வகைகள்உலோகமரம்பலகைநீர்மின் கம்பிநீர் குழாய்கள்,  பிளாஸ்டிக்பெயிண்ட் வகைகள் எல்லாம் இயற்கையாக தற்செயலாகச் சந்தித்துஒன்று சேர்ந்துஅழகிய கனவு அரண்மனை ஒன்றைக் கட்டித் தரும் வாய்ப்பு இருக்கிறதாஇல்லவே இல்லை!

ஆதலால்தான் ஒரு முடிவுக்கு மக்கள் வந்தார்கள்எதோ ஒரு சக்திநம்மால் விளங்கிக் கொள்ள முடியாத மகா சக்திநம்மைச் சுற்றி இருந்து இவற்றை எல்லாம் சிருஷ்டி செய்துகொண்டு இருப்பதாக நம்பினார்கள்.

நம் குறுகிய அறிவுத் திறனுக்கு உட்பட்டு அந்த சக்திக்கான கர்த்தாவை அறிய முடியாதுஎங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பரிமாண எல்லைக் கூண்டுக்குள் இருந்து கொண்டு அந்தப் பல் பரிமாண சிருஷ்டிகரை உணர முடியாதுசாதாரண மக்களிலும் பார்க்கக் கூடிய அளவு புலனறிவுமற்றும் பரிமாண உணர்வு கொண்டவராய் அப்பப்போது பிறந்திருக்கும் சில ஞானிகளால்தான் அவரை ஓரளவுக்கு அறிந்திருக்க முடியும்.

ஆதலால்உயிர்கள் உருவாக்கியது இயற்கையாய் இருப்பதற்கான சாத்தியகூறுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.  என்பதால்கடவுள்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று முடிவு கட்டிவிட்டான் மனிதன்.

என்றாலும்சிருஷ்டித்தவரை வணங்கவேண்டும் என்ற கொள்கைதான் எப்படி உருவானது என்று புரியாமல் இருக்கின்றதுபடைத்தவர் அவர் என்றால் படைத்துப்போட்டுப் போகட்டுமேஏன்தான் அவரை வணக்க வேண்டும்?

நாம் அன்றாடம் உபயோகிக்கும் மிகவும் அத்தியாவசியமான சாதனங்கள்வாகனங்கள்பொருட்கள் என்று என்னென்னவெல்லாம் கண்டு பிடித்துஉருவாக்கிஇயக்கிக்கொண்டு இருக்கின்றார்களே பலர்இவர்கள் எல்லோரும் இவற்றை எல்லாம் உருவாகினார்கள் என்பதற்காக அவர்களுக்கெல்லாம் கோவில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டா இருக்கிறோம்அல்லவே!

இரண்டு பக்க விவாதங்கள் எல்லாமே வெறும் ஊகங்களை அடிப்படையாக வைத்துதான் பேசப்படுகின்றன.எது உண்மைஎது பொய் என்று காலம்தான் பதில் சொல்லும்.
                                                                                                                           ஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன்

7 comments:

  1. இறவன் மனிதன் கண்டுபிடிபதற்கு என்று
    சிலதை படைத்து இருக்குறான்
    1..ஒவ்வொரு மனிதனும் மூளையை ஒரேய் மாதிரி இருக்கும்
    ஆனால் சிந்தனைகள் வேறுபாடும் அது எப்படி என்று பார்த்தால் பதில் இல்லை
    சமயம் சொல்லுது அவரவர்கள் முன் ஜென்ம பாவங்களை பொருத்து
    அவர்களுக்கு அமைந்து இருக்குறது என்று
    2..அனுபவ சில உண்மைகள்
    .. உண்மையாக நேர்மையாக வாழ்பவன் மனம் நொந்தால்
    தாக்கம்
    ஒன்று கிடைக்கும் எதிரிக்கு இது எப்படி சாத்திய படுக்குறது
    இதற்க்கு சமயம் சொல்லுது ஒருவர் தருமா காரியங்கள் செய்து
    உயந்து இருக்கும் போது அவர்க்கு இறைவனின் அருள் கிடைக்குது என்று
    தொடரும் நாளைக்கு

    ReplyDelete
  2. முருகையாFriday, March 18, 2016

    அண்ணை/தம்பி!
    கொஞ்சம் என்ன சொல்ல வாறீங்கள் என்று வடிவாய் ஒருக்கால் எழுதுங்கோ!

    ReplyDelete
  3. மணியன்Friday, March 18, 2016

    நீங்கள் யார்? ஆஸ்திகனா? நாஸ்திகனா? அல்லது ஆஸ்திகனாக இருக்க விருப்பும் நாஸ்திகனா? நாஸ்திகனாக இருக்க விரும்பும் ஆஸ்திகனா? ஒரே குழப்பமாய் இருக்குது ஐயா!

    சும்மா குட்டையைக் குழப்பாமல் மனிதரை அவரவர் போக்கிலேயே போக விடுங்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. அப்போ திருக்குறள் லிருந்து நன் நூல் கள் அவசியமற்றவை என்று கூ று கிறீர்களா

      Delete
  4. சந்திரகாசன்Saturday, March 19, 2016

    நான் இரண்டுமே அற்ற ஒரு மனிதன். எல்லோரும் அவரவர் போக்கில் போகலாம்; ஆனால் ஒவ்வொருவரும், அவரவர் விடயத்தை சொந்த விடயம் என்று தன் அறைக்குள்ளே வைத்திருக்கும்வரை!

    அவர் அறைக்கு வெளியே அதைக் கொண்டுவந்தால் அது குடும்ப விடயம். வெளியில் எடுத்துச் சென்றால் அது ஊர், சமூகம், நாடு, உலகம் என்று பரவி பல சச்சரவுகளுக்கு அடி கோலு கின்றதே! மாற்றுக்கருத்து உள்ளவர்களை மட்டம் தட்டிக் கொள்கின்றார்களே!

    ReplyDelete
  5. vasan
    அன்பான உறவுகளே !!
    உங்கள் சிந்தனைக்கு என் சிந்தனையில் உருவாகிய சில கருத்துக்கள்!!

    1. நாம் இன்று வரை பாவிக்கும் எதாவது ஒன்றை கடவுள் கண்டு பிடித்ததோ?அல்லது
    மனிதன் கண்டுபிடித்ததோ? (மொபில் , கணனி கப்பல் கார் அணுக்குண்டு பேனா பென்சில்வரை)

    2. இன்று எங்களால் முடியாது என்பது எப்பவும் எங்களால் முடியாதோ?
    ( முன்பு சில நோய்கள் வந்தால் குணமாக்க முடியாது . தன்னால் முடியாது என்றால்
    மனிதன் மருந்துகள் , வைத்திய முறைகள் ஒன்றையும் மனிதன்கண்டுபிடித்திருக்கமுடியாது. )


    3 மனிததேடலின் முற்றுபுள்ளி , சிந்தனைக்கு போட்ட விலங்குதான் கடவுள் ! ஏன் ; எதற்க்கு என்று
    கேளாமல் நம்பு , நம்பு என்கிறது

    4 சில அறிவியல் விதிகளின்படியே உலகம் இயங்கிறது ஆனால் முற்றிலும் எல்லாவற்றுக்கும்
    தற்போதய மனிதானால் விளக்கம் சொல்ல முடியவில்லை இன்று விளக்கம் சொல்லமுடியாத
    இடங்களில் கடவுளை போட்டு நிரப்புகிறார்கள் ஆனால் இன்று கண்டுபிடிக்காதவை நாளை
    அல்லது நானூறு வருடத்தின் பின்பும் கண்டுபிடிக்கபடலாம்.

    5 ஆண்டவன் சந்நிதியின் வாசலில் தினமும் பிச்சை காரர் சாமி, சாமி என்று தினமும்
    வேண்டுகிறார்கள் அவர்களுக்கு கிடைத்த வரம் என்ன?? வாரத்தில் ஒருநாள் சென்று
    சாமியை வேண்டி உனக்கு வரம் கிடைக்கும் என்றால்,
    தினமும் சாமியை வேண்டுவோர் நிலை?

    6 கடவுள் காப்பாற்றுவார் என்றால் வருத்தம் வந்தால் ஏன் வைத்தியரிடம் செல்வது ஏன்??

    ReplyDelete
  6. Anonymous

    1.கடவுள் கண்டுபிடிப்புக்கு என்று வைத்ததை தான் நீங்கள் (மனிதன் )கண்டுபிடிக்கிறான் ..விஞ்ஞான கண்டிபிடிப்புகு அடித்தளம் அமைப்பவை மெய்ஞானம்(சமயம்)
    2.ஆதி கால மனிதன் கடவுளை நம்பினான் அவன் நோய் நொடி இன்றி
    நிண்ட நாள் வாழ்ந்தான்(பல நோய்களை இறவன் துணை கொண்டு நிக்கி இருக்குறான் வாக்கு சொல்லும் முறை இறவன் சக்தி கொண்டு இப்பவும் பல நோய்களுக்கு தீர்வு சொல்லுறான் ) இப்பொழுது புதிய புதிய நோய்கள் வருகுறது
    அதற்கான மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை இனி கண்டுபிடிப்பான்
    என்பது உண்மை .. மருந்து கம்பனிகளின் கையில் தான் இருக்குறது ஏன் என்றால் அவன் தான் புதிய புதிய நோய்களை உருவாக்குறது
    அவன் தான் தெய்வம் மாதிரி இருக்குறான் படித்தவனுக்கு
    3..இறவன் ஒருநாளும் சொல்லவில்லை தேடல் இன்றி வாழு என்று
    ஒருவன் இந்த பிறப்பில் செய்யும் பாவம் அடுத்த பிறப்பில் அனுபவித்து
    தான் ஆகனும் இது இறைவனின் படைப்பு (இந்த பிறப்பில் நீ புனியங்கள் செய்து நேர்மையாக இருப்பாய் எனின் கட்டையம் உன் பிரசனை குறைப்பான் இறவன் இல்லை எனின் துன்பம் தொடர்ந்து கொண்டு இருக்கும் )
    4..உங்கள் கருத்துன் படி அறிவியல் மூலம் தான் உலகம் இயங்கி கொண்டு இருக்குறது என்றால் ஏன் அப்பா நீங்கள் உங்கள் விஞ்சான
    கண்டுபிடிப்புக்கு கருபொருளை மெய்ஞானத்தில்(சமயம்)தேடி கொண்டு இருகுறிங்கள்

    5..6 வினாவுக்கு பதில் சொல்லி இருக்கேன் முன்பு அதை பார்க்கவும்

    ReplyDelete