ஓட்ஸ் டயட் ரொட்டி [சமையல் பகுதி ]



   



ஓட்ஸ் - 3 கப்
ஆட்டா மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு





தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதனுடன் ஆட்டா மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்

பிசைந்த மாவை தேவையான அளவில் உருண்டையாக உருட்டி ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

பிறகு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.

விருப்பமான குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிட ஓட்ஸ் டயட் ரொட்டி தயார்.

சாதாரணமாக சப்பாத்தி மாவுக்கு ஊற்றும் நீரைவிட சிறிது அதிகமாக ஊற்றி பிசைய வேண்டும்.

வெயிட் குறைக்க விரும்புவர்களுக்கு ஏற்ற ரொட்டி இது.
-நன்றி ----------------திருமதி. ஸ்ரீவித்யா

0 comments:

Post a Comment