இறுதியாக தலைவன்பிரபாகரன் செய்த மாபெரும் தியாகம்.


இலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இயக்கங்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டன. 2007 வரை ஈழப்போரில் குறைந்தது 70,000 பேர் உயிரிழந்தனர். 2008 இன் இறுதிப் பகுதியிலும், 2009 ஆரம்பத்திலும், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படைத்துத்துறையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. இரு தரப்புக்குமிடையே அப்பாவித்  பொதுமக்களும் அகப்பட்டனர் .
 2009 மே 18 விடுதலைப் புலிகளின் தலைவரைத் தாம் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.போரின் இறுதிக் கட்டத்தில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் வரை இறந்தனர் என ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவித்தது.

எண்பதுகளின் இறுதியில் புலிகளின் ஆதரவுடன்  அதிகரித்த ஜேவிபி யினரின்  நடவடிக்கைகள் இலங்கை அரசுக்கு பெரும் தலையிடியாக மாறிய வேளையில் வடகிழக்கில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய அரசின்  பிரசன்னம் அரசின் தலையிடிக்கு மருந்தானது. அச் சந்தர்ப்பத்தினை உபயோகித்து பிரேமதாச அரசு ஜேவிபியினரை அழிக்கும் போரினை ஆரம்பித்தது. சிங்கள இனமாக இருந்தும் ஜேவிபி தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவி சிங்களர் உட்பட பல ஜேவிபி உறுப்பினர்களை வகை தொகையின்றி  சிங்கள அரசு கொன்று ஒழித்தது. ஊடகங்கள் கொன்றொழித்ததோர் தொகையினை இருட்டடிப்பு செய்தது வும் அனைவரும் அறிந்ததே.

இதில் நான் கூற முனைவது என்னவெனில் , நீண்டகாலமாக கெரில்லா போராட் டமாக  வடகிழக்கில் செயல்பட்ட  விடுதலைப் புலிகள்  இராணுவ மரபு முறைக்கு இறுதியில் மாற்றிக்கொண்டதுமல்லாமல் ஓரிடமாக வேறு முள்ளிவாய்க்காலில் ஒதுங்கிக் கொண்டனர். [இது கூட இலங்கை அரசுக்கு வாய்ப்பாகவே மாறியது] புலிகளில் தீவிர நம்பிக்கை என்று கூறுவதை விட  புலிகளை எதோ தமிழ்  சினிமாவில் பத்து பீரங்கித் தாக்குதல்களையும் முறியடித்து வென்று வரும் கதாநாயகன்  போன்று கற்பனை பண்ணிக்கொண்டு அவர்களுடன் போன அப்பாவித தமிழர்களும் புலிகளுடன் ஒதுங்கிக்கொண்டனர்.

இறுதி போரில் இறந்தோர் தொகை என்பது ஜீரணிக்கமுடியாததுதான். அது ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் மாறாத காயமாகிவிட் டது. அனால் நாம் இன்று இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும். புலிகள் முள்ளிவாய்க்காலில் ஒதுங்காது வடகிழக்கில் ,அல்லது வடக்கில் பரவி செயல்பட்டிருந்தால் வடகிழக்கில் ,அல்லது வடக்கில்இன்று வாழும் 90 விதமான தமிழர்களும் புலி அழிப்பு போரில் கொல்லப்பட்டிருப்பார்கள். ஜேவிபி யினரை சாட்டி தன்  இனத்தினையே அழித்த அரசுக்கு தமிழரை புலி என்று அழிப்பது பெரிய விடயமல்ல [யானைக்குக் கரும்பு கிடைச்சமாதிரி.]. உலக நாடுகளும் போர் முடிந்த பின் இன்றுபோல் வெறும் அறிக்கை நாடகங்களை ஆடிக்கொண்டிருக்கும்.

எனவே, இலங்கையில் நடைபெற்றிருக்கக் கூடிய முழுத்  தமிழ் இன 
சுத்திகரிப்பு  தலைவன் பிரபாகரனால் தடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக தியாகம் செய்த அனைத்து போராளிகள் மக்களுக்கும் நாம் தலை வணங்க க்கடமைப் பட்டிருக்கிறோம்.

-ஊரிலிருந்து, சண்டியன் சரவணை .0 comments:

Post a Comment