விடுதலைப் புலிகளை....

அது ஒரு இழவு வீடு. அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அருகில் வந்து இருந்த அழகர் அம்மான்  , என்னுடன் மெதுவாகப் பேச ஆரம்பித்தார்.

''தம்பி, இவங்கள் எவ்வளவு அநியாயங்களை செய்தான்கள்.'' என்றார் அம்மான்.

நானும் புரியாமல் என்ன இன்று இறந்து போனவரை பற்றி இப்படி பேசலாமா என்ற  கேள்வியுடன் அவர் முகத்தினைப் பார்த்து விழித்தேன். அவரும் தொடர்ந்தார்.

''இவங்கள் தான் தம்பி. புலியள் , எத்தினை பேரை அநியாயமாக கொண்டான்கள். ஒருத்தனும் அவங்களை ஏசுறதை காணேல்லை '' என்று தனது கவலையினை   வெளிப்படுத்திக் கொண்டார் அம்மான். 

'' அண்ணை ,நீங்கள் சொல்லுறது சரியாக எனக்குப் படேல்லை.'' என்றேன் நான்.

''ஏன் தம்பி, நடந்ததெல்லாம் தெரிஞ்ச நீயும் அவங்களுக்குப் பாடுறியே ,நியாயமோ சொல்லு!'' என்று  வியப்புடன்  கேள்வி தொடுத்தார் அம்மான் .

'' அண்ணை , நானும் போராட்ட காலத்தில  பாதிக்கப்பட் டவன் தான். இப்ப நாங்கள் செத்தவீட்டில இருக்கிறோம். ஒரு மணித்தியால லீவு எடுத்து வந்து இந்த செத்த மனுஷனுக்கொரு இறுதி அஞ்சலி செலுத்தவே மனமில்லாமல் எத்தினை பேர் இப்ப வேலையில நிக்கினம் தெரியுமே? இந்த நேரம் வேலை இல்லாத படியாலதான் நீங்களும் நானும் இதில இருக்கிறம்.அவர்கள் புலியளோ  சொந்த ஊர்,பெற்றோர், கூடப்  பிறந்தவர்கள், மனுசி, பிள்ளைகள்,  கற்ற கல்வி, தொழில் , வாழ்க்கை, எதிர்காலம், நிம்மதி,  தங்கள் உயிர் அனைத்தையும் தியாகம் செய்துதான் போராடினவை அவங்களுக்கு மட்டும் வெளிநாடு வரத்தெரியாதோ, வாழத்தான் ஆசை இல்லையோ? அவர்கள் இழந்ததோட பார்க்கையில  நாங்கள் பட்டது மிக,மிக சொற்பம். '' என்றேன் நான்.

''போராடினவைதான்,பிழையலும்  விட்டவையெல்லே'' விடாப்பிடியாக நின்றார் அம்மான் .

''அண்ணை , இரண்டு பிள்ளைகள் இருக்கிற குடும்பத்திலேயே எவ்வளவு பிரச்சனையள் நடக்குது. வெளிநாட்டு வாழ்க்கையிலேயே  ஒரு மனுஷி 2பிள்ளைக ளை  சமாளிக்க ஏலாம குடும்பத்தை விட்டு ஓடுற மனுஷன்மாரும்,, ஒரு மனுஷனை சமாளிக்க முடியாம ஓடுற மனுஷிமாரும் இருக்கிற இந்த உலகத்தில எத்தனையோ ஆயிரம் புலிகளை ஒரு தலைவன் ஒன்றல்ல 33 வருடங்கள் கடினமான வழியில கட்டிக் காத்ததென்றால் அது ஒரு பெரிய சாதனை.நாங்கள் அவர்களை பாராட்ட வெல்லோ வேணும்.'' என்றேன் நான்.

''பிழையள் ... ...''என்று இழுத்த அம்மானை  இடைமறித்தேன்  நான்,

'' அம்மான்  மகாத்மா காந்தி,புத்தர், ஜேசு, சுப்பிரமணிய பாரதி இப்பிடி பலர் இன்றும் போற்றப்படுகின்றனர். அதே வேளையில அவர்கள் மேல இன்றும் குற்றச்சாட்டுகள் வீசுபவர்கள் ஒரு சிலர் இல்லாமல் இல்லை. அதற்காக அவர்கள் வாழ்ந்த வழி பொய்யாகிவிடுமா? அவர்களும் மனிதர்கள்.நாங்களும் மனிதர்கள்தான்..மனிதர்கள் எங்காவது  ,எதிலாவது தெரிஞ்சோ ,தெரியாமலோ  தப்பு பண்ணிக்கொண்டுதான்  இருக்கிறாங்கள்.அதுக்கு நானும் விலக்கு  இல்லை.நீங்களும் விலக்கு  இல்லை. எல்லாவற்றையும் ஆராய வெளிக்கிட்டால் எல்லோருமே  குற்றவாளியாய் த்தான் தெரிவினம்.
அதிலும் அவர்களெல்லாம் அழிக்கப்பட்டு விட்டார்கள். மறைந்தவர்களைக் கூடாம பேசுறதும்  அழகில்லை. அத்தோட உலகில இருக்கிற  போராட் டக் குழுக்கள் மாதிரியோ அல்லது அரச இராணுவங்கள் போலவோ அநியாயங்களை அக்கிரமங்களை மக்களுக்கு செய்யாத ஒரு கட்டுக்கோப்புள்ள இயக்கமாய்த்தான் இயங்கினது.இது எல்லாம் ஒரு சாதனை பாருங்கோ!

அம்மான்,நினைவிருக்கே ? கூட்டணி 1977 லிலை ஈழம்  கேட்டு தேர்தலிலை நிக்கேற்கை ஓடியோடி ஈழத்துக்கு நீங்கள் வாக்குப் போடேல்லையோ,அதேநேரம்  வேறு ஆட்களை போய் வாக்குப் போடுங்கோ எண்டு சொல்லித் தூண்டி அனுப்பேல்லையோ! என்ன ஈழம்  வந்து சும்மா குதிக்கும் எண்டா வாக்குப் போட்டனீங்கள். எல்லாத்துக்கும் அம்பை எய்தது நீங்கள்.குற்றம் அந்த அப்பாவிகளிலா!'' என்றேன் நான் .

எனது  பிரசங்கம் அம்மானை  மௌனமாக்கியதை உணர்ந்த நானும் அவ்விடத்தினை விட்டகன்றேன்.

அனுபவம் -:சண்டியன் சரவணை 










1 comments:

  1. நான் புலம் பெயர்ந்து வந்து கால் பதிந்த காலமது. அப்பொழுது எத்தியோப்பியாவில் எரித்திரியா நாடு கோரி ஆயுதப்போராடடம் நடந்துகொண்டிருந்தது. என்னைச் சந்தித்த ஓரு எத்தியோப்பியன் நான் என்ன நாட்டுக்காரன் என க்கே ட் டான். நான் சிறிலங்கா என்றேன்.அவனை நான் கேட்ட்டபோது தான் எரித்திரியா என்றான்.உலகப்படம் புரிந்த எனக்கு அவன் சொன்ன நாடு புரியவில்லை. அவன் விளங்கப்படுத்தினான். அதனால் .அவன் இனம் இன்று எரித்திரியா என்ற தனிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் நாம் இன்னும்....தாய் மொழி தமிழ் என்று பேசவே பின்னிற்கிறோம். அதனால் இன்னும் சிறிலங்காவில் .....

    ReplyDelete