பேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்


பண்கலை பண் பாட்டுக் கழகம்:கனடா

பேச்சுப்போட்டி-2019
அறிவித்தல்

 மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில் நிகழும் 2019 ம் ஆண்டுக்கான பேச்சுப்போட்டி- {பிள்ளைகள்தற்போது கல்வி கற்கும்} -வகுப்புகளின் அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் பிள்ளைகளுக்குரிய சரியான தலைப்பினைத் தெரிவுசெய்து ஜூன் 02ம் திகதி இடம்பெற இருக்கும் பேச்சுப் போட்டிக்கு த்தயார்படுத்தும்படி பெற்றோர்களிடம் கழகம் கேட்டுக்கொள்கிறது.

-நிர்வாகம்
மேற்படி போட்டி ஜூன் 02ம் திகதி என்பதனை கவனிக்கவும்.இடம்,நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

பேச்சுப்போட்டி -2019இள மழழைகள் பிரிவு: ((j +s KG))

அம்மா


என்னை படைத்தவர் என் அம்மா.எனக்காக கண் விழித்தவர் என் அம்மா.எனக்காக பசி இருந்தவர் என்அம்மா.என்னைக் பாதுகாத்தவர் என் அம்மா.எனக்குப் பாலும் உணவும் ஊட்டியவர் என் அம்மா.என் கை பிடித்துஎன்னை நடக்கச் செய்தவர் என் அம்மா.எனக்கு பாடம் சொல்லித் தருபவர் என் அம்மா.என்னை அழகுபடுத்திமகிழ்பவள் என் அம்மா.அன்பின் உலகம் என் அம்மா.என் அம்மாவைப்போல் ஒரு தெய்வமில்லை.என்அம்மாவை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்.அவரின் விருப்பம் போல் நடப்பேன்.படித்துப் பெரியவர் ஆவேன்.அவரை மகிழ வைப்பேன். அதில் நானும் மகிழ்வேன்.இது உறுதி.நன்றிவணக்கம்

                                       📕📕📕📕📕📕📕📕📕📕📕📕📕📕📕

முதுமழழைகள் பிரிவு ((வகுப்பு:1-2))

சைவ சமயம்

எமது சமயம் சைவசமயம்.எனவே நாம் சைவர்கள் என அழைக்கப்படுகிறோம்.சைவசமயம் சிவனை முழுமுதல் கடவுளாகக் கொண்டுள்ளது. இம் மதத்தினை இன்று 220 மில்லியன் மக்கள் பின்பற்றுகிறார்கள்.

நாம் நல்வாழ்வு வாழ்வதற்குரிய வழிபாட்டு முறைகளை சைவ சமயம் கொண்டிருக்கிறது.சைவர்களாகிய நாம்ஒவ்வொருநாளும் காலையும் ,மாலையும் முதலில் உடலைச் சுத்தம் செய்தல் வேண்டும்.பின்னர் திருநீறுஅணிந்து இறைவனை வழிபட்டு உள்ளத்தினை சுத்தம் செய்தல் வேண்டும்.விசேட தினங்களில் ஆவது ஆலயம்சென்று வழிபாடு செய்தல் அவசியம் ஆகும்.

அன்பே சிவம் என்கிறது எமது சமயம்.பஞ்சமா பாதகங்களை மறப்போம். எல்லா உயிர்களிடத்தும் நாம்அன்புகொள்வோம்.நல்ல மனிதர்களாக வாழ்வோம், வல்லவர்களாக வளர்வோம் என்று

இந் நன்னாளில் உறுதி கொள்வோமாக!

நன்றி

வணக்கம்

🕮🕮🕮🕮🕮🕮🕮🕮🕮🕮🕮🕮🕮🕮🕮

மத்தியபிரிவு ((வகுப்பு:3-4))

தைத்திருநாள்

"தமிழர் போற்றும் நன்னாள்

உழவர் போற்றும் நன்னாள்"

என்று சிறப்பிக்கப்படுவது தைத்திருநாள்.அது சமயங்கள் கடந்து கொண்டாடப்படும் தமிழர் தைப்பொங்கல்ஆகும்.

பொங்கல் என்பதற்கு"பொங்கி வழிதல் என்பது பொருள்.பொங்கல் திருநாள் அன்று புதிய பானையில் புதியஅரிசியிட்டு பொங்கல் வைப்பார்.அப்பொழுது பொங்கலிலிருந்து பால் பொங்கி வருவதுபோல அன்றிலிருந்துமக்கள் அனைவரும் நல வாழ்வுடனும் வளமுடனும் சிறப்பாக வாழவேண்டும் என்று உரைப்பதே பொங்கல்திருநாளாகும்.

உழவர்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து மார்கழி மாத இறுதியில் நெற்கதிர்களை அறுவடை செய்து தைமுதலில் தங்கள் உழைப்பின் பயனை அனுபவிக்க ஆரம்பிக்கும் நாளே தைத்திருநாள்.அந்நாளில் தமதுஉழைப்பிற்கு உறுதுணையாக இருந்த நிலம் நீர் காற்று சூரியன் போன்ற இயற்கை சக்திகளுக்கு நன்றிதெரிவிக்கும் சிறந்த நாளே தைப்பொங்கல் ஆகும்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்."

என்ற பழமொழிக் கேற்ப உழவர்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்து நம் எல்லோருக்கும் உண்டி கொடுத்தஅந்த சக்திகளுக்கு அவர்களுடன் இணைந்து நன்றி செலுத்தி நாமும் மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

நன்றி ......வணக்கம்.

📙📙📙📙📙📙📙📙📙📙📙📙📙📙

மேற்பிரிவு (வகுப்பு:(5-6))

நூல் பல கல்

எண்ணும் ,எழுத்தும் மனிதனுக்கு இரு கண்கள் போன்றவை.அவை அறிவுக் கண்கள். அவற்றினைப் பெற்றவர்களே உயிர் வாழ்வபவர் ஆவர் என திருக்குறளில் வள்ளுவர் மிக அழகாகக் கூறியுள்ளார்.

அந்த அறிவினைப் பெறுவதற்கு நாம் நிறைய நன் நூல்களைப் வாசிக்க வேண்டும். அவைகள் மேன்மை ஆனவை. அவற்றினை விரும்பிப் படிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்.

நிலத்தினைத் தோண்டத் தோண்ட நீர் மேலும் மேலும் கிடைக்கும். அதேபோல சிறந்த நூல்களை வாசிக்க , வாசிக்க பொது அறிவு வளரும். எழுதும் ஆற்றல் ஏற்றம் கொள்ளும். பேச்சுத் திறன் பெருகும். உங்களின் அறிவு நீங்கள் படித்த நூல்களிலேயே தங்கியுள்ளது. இதனையே ஔவையாரும்

''நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்-தான் கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு ''

 என மூதுரை நூல் மூலம் கூறியுள்ளார்.

இன்று விஞ்ஞானம் வானம் கடந்துவிட்டது. உலகம் கணனி வடிவில் கையுள் அடங்கிவிட்டது. அறிவியல் நூல்களா,அல்லது ஆன்மீக நூல்களா உலகின் அனைத்துவகை நூல்களையும் நம்முன்னே கொண்டுவர அது தயாராகிவிட்டது. ஐரோப்பிய மொழிகளிலா,

அல்லது எம் தாய் மொழியிலா தடையேதும் கிடையாது. அனைத்தையும் நாம் இலகுவில்  கணனியில் பெற விஞ்ஞானம் வழி செய்துவிட்டது.

எனவே பக்கங்களைப் புரட்டுவோம். நல்லன பலதையும் படிப்போம். அறிவைப் பெருக்குவோம்.வாழ்வில் உயர்ந்து நிற்போம்.

நன்றி

வணக்கம்

📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚


அதிமேற்பிரிவு (வகுப்பு:(7-8))

கனடா

கனடா, வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடு.அது உலகத்தில் இரண்டாவது பெரிய நாடுஆகும்.கனடாவின் வடக்கே வடமுனை காணப்படுகிறது.

கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.தெற்கே அமெரிக்க ஒன்றியம் அயல் நாடாகஅமைந்திருக்கிறது.மேற்கே பசுபிக் சமுத்திரமும் அமெரிக்க அலாஸ்காவும் எல்லைகளாக இருக்கிறது.

கனடா பத்து மாகாணங்களையும்,மூன்று ஆட்சிநிலப் பகுதிகளையும் கொண்டது.ஆங்கிலம்,பிரஞ்சு என்பனகனடாவில் ஆட்சி மொழிகளாக உள்ளன.

"ஒட்டாவா" கனடாவின் தலைநகரம் ஆகும். நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் அவர்களுடைய மொழியான "இனுக்ரிருற்" ஆட்சி மொழியாக உள்ளது.

பிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் கனடாவுக்குள் வர ஆரம்பித்தனர்.பின்னர் ஆங்கிலேயர்1610 ஆம்ஆண்டில் குடியேறத் தொடங்கினர்.

பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா 1867ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன.நியூபௌன்ட்லாந்து 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.

1880களில் சீனர்கள் தொடருந்துப் பாதை கட்டமைப்பில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர்.1971 ஆம்ஆண்டு, உலக நாடுகளிலேயே முதலாவதாக, கனடா பல்லினப் பண்பாட்டுக் கொள்கையை அதிகாரப்பூர்வமாகஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு குடிவருவது அதிகரித்தது. 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆபிரிக்கர்கள் புதிய குடிவரவாளர்களில்கணிசமான தொகையாக இருந்தனர்.

கனடா இயற்கைவளம் மிக்க நாடு.கனடாவின் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்ஆகியவை உறுதியானவை.கனடா, ஓர் உயர்ந்த, தொழில்மயமாக்கப்பட்ட, அறிவு அடிப்படை பொருளாதரக்கட்டமைப்பைஉடையது.

கனடாவின் தேசிய கீதமாக " கனடா"இசைக்கப்பட்டு வருகிறது.

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் தமிழர்களாகிய நாங்களும் கனடியக் குடிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம்.நல் மக்களாக நாமும் வாழ்ந்து நாட்டுக்கும்,நமக்கும் பெருமைகள் சேர்ப்போமாக.

நன்றி

வணக்கம்

.↞↞↞↞↞↞😊↠↠↠↠↠↠
அறிவித்தல் 

பண்கலை  பண்பாட்டுக் கழகம்-கனடா  
தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019
முடிவுகள்⇛::::---


Gr,jk.sk
jasvin thayalaruban .........-FIRST
Namesan Sivanesan .......- FIRST
Trisnavy Tharmagopalan - SECOND
Abisan Gangatharan ........- THIRD

Gr.01:
Oviya  Palasingam-.................- FIRST
Agisha kulatheswaran .......- SECOND

Gr.02:
Shajin Selvachanthran .......- FIRST
aadarsh Ramesh ..................- FIRST
Kishanan Nanthakumar ....- FIRST
Kirushika Krishinakumar  ..- SECOND
Thisanth Theepavathanan - THIRD


Gr:03:
Thaniska Kugan .....................- FIRST
Prithiga Pulenthairan ...........-FIRST 
Shaanuja Suthakaran ............-SECOND
Aarthi Thusanthan ..................-THIRD   
jasmika vijaykumar .................


Gr,04:
Kishoen Thayalarupan .......- FIRST
Shakitjan Nanthakumar.... - SECOND
Taniskga Theepavathanan -SECOND 
Kanistiga Supenthiran .......- THIRD


Gr.05:
Kapishnan Krishnakumar – FIRST
Adithya   Palasinkam.........- SECOND
Prithikga Vinotharupan ...- SECOND
Krisanth Tharmagopalan - THIRD


Gr.06:
Thuvaraka Bashkaran .......- FIRST
Biranavy Tharmagopalan – SECOND
 Pakisan     Sivaneswaran....- THIRD
Lathujan Gangatharan ........-
dashmiga - 
Anojan Selvaratnam............... -


Gr.07:
Mathusan Selvaratnam – FIRST
Kenujan Gangatharan - SECOND
senusa selvachanthran – SECOND


Gr.08:
Abi Ravi ...............................- FIRST
Anoj Nadesan ...................- SECOND
Kajaanan Kirubainathan - THIRD

தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019
கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழக ,அங்கத்தவர்களின் பிள்ளைகளைத்  தயார்படுத்தும்படி பெற்றோர்கள் கழகத்தால் வேண்டப்படுகின்றனர். 
போட்டி நிகழும் காலம் , இடம்  விரைவில் அறிவிக்கப்படும்.

இளம் பாலர் பிரிவு-:[JK]
[சுயமாக அவர்கள் ஏற்கனவே படித்த சொற்கள்-20] 

முதுபாலர் பிரிவு-:[SK]
[சுயமாக அவர்கள் ஏற்கனவே படித்த  சொற்கள்-20]

வகுப்பு-01:
1.அடை  2.ஆடை  3.இடை 4.தடை  5.எடை 6.வடை 7.வாடை  8.கடை  9.நடை   10.உடை  11.குடை 12.விடை  13.படை 14.தடை 15.சடை 16.தாடை 17.ஓடை  18.வாடை 19. சடை 20.மடை 21. பாதி  22.ஆதி  23. சாதி 24.வீதி  25.நதி 26.பதி  27.அதி 28.குதி 29.வதி  30.மிதி 

வகுப்பு-02: 
1.படு 2.வடு 3.தடு 4.நடு 5.விடு 6.பாடு  7.வாடு 8.மாடு 9.நாடு 10.காடு 11.ஆடு 12.வீடு 13.ஓடு 14.இடு 15.அடி

16.ஆடி 17.இடி  18.வடி 19.கடி 20.படி 21.கண் 22.காது 23.ஊதி 24.மீதி 25.தாதி 26. பூதி 27.வாதி 28.விதி
29. மாது 30.இமை   

வகுப்பு-03: 
1.துடி   2.துதி 3.தாதி 4.கூடு 5.நாடி 6.துடை  7.பாதி  8.ஊசி 9.தூசி 10. திசை 11.கடி 12.முடி13.வடை  14.வதை 15.காலை 16.தசை17.பொது  18.கொதி  19.சொதி 20.கொடை 21.ஓசை 22. மாலை  23.மழை 24.இலை 25. கலை 26. விலை  27.சொல் 28.கொடி 29. நாள் 30.தோள் வகுப்பு-04:
 1.மேடை 2.மேதை 3.மீசை 4. வெடி 5.மாடி 6. எவை 7.உமை  8.இவை 9.அவை 10.பொதி 11.போதி 12.சோதி 13.சொதி  14.தோசை 15.கோடை  16.கோடி 17.தோடு 18.கோடு  19.போடு 20.பொறு  21.கொடு 22.தொடு 23.நொடி  24.சோடி 
25.பொடி 26.தேவை 27.தொகை 28.தோகை 29.கோழி 30.தோழி 
வகுப்பு-05: 
1.சட்டி 2.பயம் 3.அளவு 4.குட்டி  5.உணவு 6.மயிர் 7.பறவை 8.கோவம் 9.மங்கை 10.இங்கு 11.அக்கா 12.வயிறு 13.குட்டு 14.மூக்கு 15.பாடல் 16.வீரம் 17.பக்தி 18.மாதம் 19.பிறகு 20.ஆச்சி 21.அப்பு 22.தம்பி 23.சிறுமி 24.கதவு 25.வட்டி 26.அரிசி 27.ஆடல் 28 மலிவு 29.தெரிவு 30.கத்தி 


வகுப்பு-06:
1.பெட்டி 2.பாவம் 3.அழிவு 4.பாடம் 5.உண்மை 6.தயிர் 7.போதனை 8.கோவில்  9.தங்கை 10.அழுகை 11.கயிறு 12.கொட்டு 13.வாடகை 14.தேடல் 15.விரல் 16.வைரம் 17.புத்தி 18.ஆண்டு 19.கிழவி 20.பையன் 21.தொட்டி 22.கழிவு 23.முறிவு 24.சொத்து 25.அறிவு 26.பொட்டு   27.வெட்டு 28. தொன்மை 29. தோழன் 30.முள்ளு 
வகுப்பு-07:

1.ஒன்பது  2.சந்திரன்  3.கரும்பு   4.தும்மல்  5.சதுரம்  6.சூரியன்  7.விருந்து  8.பருப்பு   9.ஓட்டம்   10.சிவப்பு   11.இனிப்பு      12.நடிப்பு  13.கிராமம்  14.வட்டம்    15.கிழவன் 16.சிரிப்பு  17.இராகம் 18.கருத்து19.சூரியன்   20.தாக்கம்    21.ஓரளவு   22.வாகனம்  23.இன்பம்    24.உயரம்  25.சமயம்   26.பங்கிடு   27.முருகன்  28.இறங்கு    29.பக்கம்  30.அண்ணன் 

வகுப்பு-08:
     1.ஏராளம்  2.விளக்கு 3.மறுப்பு  4.நெருப்பு  5.படிப்பு  6.பேரறிவு  7.கழகம் 8.எழுத்து  9.புளிப்பு  10.ஒழுங்கு   11.தொலைபேசி  12. உழைப்பு  13.சொற்கள்    14.காலநிலை  15.குறும்பு  16.அணிதல்   17.வெறுப்பு   18.ஒற்றுமை  19.களைப்பு  20.சொந்தம்   21.வளைந்த 22.அழைப்பு    23.கரைசல்     24.பாடசாலை  25.தலையிடி 26.தலைவன்    27.குளிர்மை   28.பிழைப்பு 29.வெல்லம் 30.இலைகள் 

   குறிப்பு:இச்செய்தியினை அறிந்தவர்கள் உங்கள் உறவுகளுக்கும் எடுத்துக் கூறி அவர்கள் பிள்ளைகளையும் வர ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலதிக விபரங்களுக்கு மனு: 416 5695121.

0 comments:

Post a Comment