இயற்கை வழிபாட்டிலிருந்து சிலை வழிபாடு


ஆன்மிக வாதிகளுக்கும் , அரசர்கட்கும் அவர்கள் இறந்தபின் சிலை வைக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. இக்காலத்தில், இலக்கியம், நுண்கவின் கலைகள், அரசியல், சமூகப் பணி முதலியவற்றுள் எந்தத் துறையில் அரும்பெருஞ்செயல் புரிந்தவர்க்கும் சிலை வைக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.

அக்காலத்தில் ஒருவர் இறந்த பின்பே அவருக்குச் சிலை வைக்கப்பட்டது. இக்காலத்திலோ, ஒருவர் உயிரோடு இருக்கும்போதே வைக்கும் அளவுக்குச் சிலை வைக்கும் வழக்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அக் காலத்தில் இறந்த பின்பே சிலை வைப்பு நிகழ்ந்தது என்ப தற்கு ஒரு சான்று வருமாறு :

 அயோத்தி நகரைத் தலைநகராகக் கொண்டு கோசல நாட்டைத் தசரதன் என்னும் பேரரசன் ஆண்டான். அவனுக்கு, இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கனன் என மக்கள் நால்வர் இருந்தனர். அவர்களுள் பரதனும் சத்துருக்கனனும் கேகய நாட்டுக்குச் சென்றிருந்தனர். அரசியல் சூழ்நிலை காரணமாக இராமனும் இலக்குவனும் காட்டுக்குப் போய் விட்டனர். மன்னனுக்கு மூத்த பிள்ளை இராமன் மீது பற்று மிகுதி. அவனது பிரிவாற்றாமையால் தசரத மன்னன் இறந்து விட்டான். பரதன் என்னும் மகன் கேகய நாட்டிலிருந்து கோசல நாட்டுக்குத் திரும்பினான். தந்தை தசரதன் இறந்து போனது பரதனுக்குத் தெரியாது: பரதன் அரண்மனை வாயிலுக்குள் புகுந்து உள்ளே போய்க்கொண்டிருந்தபோது, வழியில் இருந்த ஒரு பகுதி அவன் கண்ணுக்குத் தென்பட்டது. முன்னர் இறந்து போன மன்னர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருந்த பகுதி தான் அது. அந்தப்பகுதியில் தந்தை தசரதனது சிலையும் வைக்கப்பட்டிருந்ததைப் பரதன் கண்டு திடுக்கிட்டான்தந்தை இறந்து விட்டார் போலும் என்று முதலில் ஐயுற்றான்.பின்னர் மற்றவரை வினவி உண்மையறிந்து அழுது அரற்றினான்.இது, ‘பாசகவிஎன்னும் கவிஞர் இயற்றிய பிரதிமா என்னும் சும்சுகிருத நாடகத்தில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதி.
எம்.ஜி ஆர் நினைவு இல்லத்தில் வணங்கும் நிலை ஆரம்பம் 
இவ்வரலாற்றால், இறந்தவர்க்கே சிலை வைக்கும் வழக்கம் அக்காலத்தில் மரபாக இருந்தது என்பது புலனாகும். இவ்விருபதாம் நூற்றாண்டில், இறந்தவர்- இருப்பவர்-எல்லாருக்குமே சிலை வைப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இச்சிலைகளாக நிற்பவர்கட்குள் யார் யார் எதிர் காலத்தில் கடவுளர்களாக மாற இருக் கின்றார்களோ - தெரியவில்லை

இதுகாறும் பல்வேறு கோணங்களில் நின்று விளக்கிய சான்றுகளால், கட்வுள் என்பது ஒருவகைக்கற்பனைப் படைப்பே-அரும் பெருஞ் செயல்கள் ஆற்றிய ஆன்றோர் களே கடவுளர்களாக ஆக்கப்பட்டனர்-அவர்கட்கு முன்பு, பல்வேறு இயற்கைப் பொருள்களே கடவுள்களாக வழிபடப்பட்டன-நாளடைவில் கடவுள் வழிபாடு படிப் படியாக வளர்ந்து, இப்பொழுது உள்ள பெரிய நிலையை அடைந்துவிட்டது-என்னும் உண்மை தெளிவாகும்.

வழிபாடு :
இப்போது மக்கள் ஒருவரை ஒருவர் நேரில் கண்டால் வணக்கம் செய்து கொள்கின்றனர். உயர்ந்த பண்பாளர்கள் தாழ்ந்த இயல்பினரைக் கண்டாலும் முறைப்படி வணக்கம் செய்கின்றனர். இருக்கும் போது கூறும் வணக்கம் இறந்த பின் செலுத்தும் போது அது வழிபாடாக உணரப்படுகிறதுஎனவே மறைந்து  தெய்வமாக மாறியவர்களை- மனிதத் தெய்வங்களை வணங்குவதில் தவறு ஏதும் இல்லை. அந்தத் தெய்வங்களின் பெயரால் உள்ள கோயில்களில் வழிபாடு செய்வதும் தவறு இல்லை. ஆனால், வழிபாடு என்னும் பெயரில், ஆரவாரச் செயல்களும் செலவுகளும் அர்த்தமில்லாதவை. வழிபாடு ஒன்றே போதும். அத்தெய்வங்களாக உயர்ந்தவர்களிடத்தில் இருந்த உயர் பண்பை, வழிபடுபவர்களும் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். பக்தி என்னும் பெயரால் வழிபடும் பலரிடத்தில் பண்பு இல்லை. பக்தியினும் உயர் பண்பே இன்றியமையாதது. கடவுள் வழிபாடு செய்து கொண்டே இழி செயல்கள் புரிபவர்களினும், கடவுள் வழிபாடு செய்யாமல் உயரிய செயல்கள் புரிபவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். கடவுள் வழிபாட்டின் நோக்கமும் பயனும் உயரிய நெறியில் நின்று ஒழுகி உயர் நிலை பெறுவதாகும்; அதுவே வீடுபேறு ஆகும்.
கருத்து வழங்கிய கருவூல நூல்கள்
மலரும் மாலையும்-கோவில் வழிபாடு-1 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
மணிமேகலை- : 70, 71-சீத்தலைச் சாத்தனார், புறநானூறு-பக்குடுக்கை நன்கணியார் -பாரதியார் பாடல்-பாரத மக்களின் தற்கால நிலைமை -1- சுப்பிரமணிய பாரதியார்,-திருக்குறள்-169 திருவள்ளுவர், திருக்குறள்-619, 620-திருவள்ளுவர், கொன்றை வேந்தன்-16-ஒளவையார், திருக்குறள்- 850 – திருவள்ளுவர், திருவாசகம்-4 : 47-மாணிக்க வாசகர்- சைவ சமய நெறி-பொது-408 உரை-மறைஞான சம்பந்தர் 44.காஞ்சிப் புராணம்-கழுவா. 208-சிவஞான முனிவர்
திருக்குறள்-கடவுள் வாழ்த்து-2- திருநாவுக்கரசர் தேவாரம்-பொது, திருவாய் மொழி-3-5-10-நம்மாழ்வார், திருவாசகம்-திருச்சதகம்-46-மாணிக்க வாசகர்
நீதிநூல்-வேதநாயகம் பிள்ளை,  -115-திருமூலர் -தாயுமானவர் பாடல்
மலரும் மாலையும்-கோவில் வழிபாடுகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
பட்டினத்தார் பாடல்-பொது-6, சிவ வாக்கியர் பாடல்-520, திருமந்திரம்-724-திருமூலர், பெரிய புராணம் - கண்ணப்ப நாயனார்-177, 178 சேக்கிழார்
திருவாசகம்-ஆசைப்பத்து - 2 - மாணிக்க வாசகர், சீவக சிந்தாமணி-கனக மாலையார் இலம்பகம்--21-திருத்தக்க தேவர்
பாகவதம்-5, 2 : 31-செவ்வைச் சூடுவார்
பெரிய புராணம்-தடுத்தாட் கொண்டபுராணம்-106 - சேக்கிழார்
🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑🜑

0 comments:

Post a Comment