கூறுவது, தவறா? அல்லது கூறியது தவறா?


எனக்கும்  ஒரு ரெயில் சிநேகிதர் இருக்கிறார்.. அவர் என்றும் இன்றய காலத்தின் பெரும்பாலானோர் போன்று மறுத்துப் பேசும் பழக்கம் கொண்டிருந்தார்.  
வேலைக்கு என்று தொடர் வண்டியில் ஏறிவிட்டால்  தினசரி அவருடன் 30 நிமிடங்கள் பயணம் செய்வது வழக்கமாகி, ரெயில் சிநேகிதர்  20 வருடங்களாக  என்னுடன் ஓடிக்கொண்டு இருக்கிறார்.
இதில் சிரிப்புக்கிடமானது  என்னவென்றால் நான் ஒரு தலைப்பில் கதைக்க ஆரம்பித்ததும் ,அவர் எனது கதையினை முழுமையாக கேட்காமலே மறுத்துக் கூற ஆரம்பித்துவிடுவார்.

உதாரணமாக, ஒரு உரையாடலை குறிப்பிடுகிறேன்.
 ''அவள் ஆனந்தி நேற்று தொலைபேசி எடுத்தாள்'' என்று அவள் கதையினைக்  கூறுவதற்கு முயன்று  மேலுள்ள ஒரு வரி கூட சொல்லி முடியவில்லை, அவர் குறுக்கிட்டு ''ஐயோ அண்ணை ,அவள் நல்லவள் '' என்று ஆரம்பித்துக் கொண்டார்.
''நானும் அதைத்தான் சொல்ல வந்தேன், வேறென்ன அவளைப் பற்றிக்  கூடா மலா கூற போகிறேன் '' என்று நான் கூறியதும் ,அவர் முகத்தினைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது.
  
ஒரு சம்பவம் தொடர்பாக கவலையாகக் கதைத்தாலே ,அதனைக் காவிச்சென்று சம்பந்தப் பட் டவரிடம் ,காது ,மூக்கு வைத்து , அவர் ஏசித்திரிவதாக ஒப்புவித்தல் என்பன வெல்லாம் ஆரோக்கியமான விடயங்களாக தோன்றவில்லை.

ஏன் ,மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள் இன்று புரியவில்லை. தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டியவைதான், ஆனால் ஒரு சீவனை வருத்துவதன் மூலம் சிலர் சந்தோஷமடைவதனை தவிர்த்து மனிதத்தினை வளர்த்துக் கொள்ளாமல் , அடுத்தடுத்து  ஆலயங்கள் சென்றென்ன, விரதங்கள் பிடித்தென்ன பயன்!!
சித்தர்கள் சீவனே சிவலிங்கம் என்று பலவகையில் கூறிச் சென்றார்கள். அப்படியாயின் இவர்கள் பாடுவது தேவாரம், இடிப்பது சிவன் கோவிலா? சிந்தித்துக் கொள்ளுங்கள். 

செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment