நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?[7B]

 [சீரழியும் சமுதாயம்] 

இணைய கலாச்சாரம் செய்யும் பெரிய தீங்கு, எதுவெனில்  பெருமளவில் உடல் உழைப்பு தேவைப்படாத ஒரு வாழ்க்கை பணிக்கு [sedentary lifestyle] ஒருவரை உள்ளாக்குவது ஆகும் .கிட்டத் தட்ட அனைத்தையும் ஓர் சில அழுத்தத்தின் [clicks] மூலம் கையாளலாம் என்றால். யார் தான் தமது உடலை அசைக்க [physical movement] விரும்புவர் ? இது தான், இந்த குறைபாட்டிற்கு காரணம். வைப்பிடுதல், வணிகம், வைத்தியசாலைக்கு முன்பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் அல்லது உங்கள் கனவு வீட்டை தேடுதல் [banking, shopping, booking hospital, paying bills or searching your dream home] போன்ற அத்தனையையும் இணையத்தில் மிகவும் எளிதாக நாம் செய்யலாம். ஆனால் இது உண்மையில் இளைஞர்களை நோய்க்கு உள்ளாக்கி விடுகிறது. எனவே நாம் உடல்பருமன், இதய நோய்கள் மற்றும் மனத் தளர்ச்சி [Obesity, Heart Ailments and depression] ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பல வழிகளில் அம்பலப்படுத்துவது, மக்கள் தமது கருத்துக்களை மற்றவர்களுக்கு கட்டாயப்படுத்தி திணிப்பது, மற்றும் முக்கிய அரசாங்கத் தகவல்களை திருடுவது போன்ற கெட்ட செயல்களுக்கும் இது உடந்தை யாவது எம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இவைகளுடன் குழந்தை பாலுணர்வு [ஆபாச] படைப்புக்கள், பயங்கரவாத நோக்கங்களுக்காக ஆட்சேர்ப்பு [Child Pornography, Recruitment for terrorism purposes] மற்றும் மக்களை தீவிரப்படுத்துதல் [radicalize people], துன்புறுத்தல் [Harassment] போன்ற செயகளுக்கும் இணையம் வழிவகுக்கிறது.

எனவே இணைய பாவனை ஒரு வழியில் ஒழுக்க சீர்கேடுகளையும் [moral decadence] சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது. இதில் முக்கியமானது பாலுணர்வு [ஆபாச] படைப்புக்களாகும். மற்றது தவறான மற்றும் தப்பு வழியில் அழைத்துச் செல்லக்கூடிய [false and misleading] செய்திகளை, தகவல்களை பரப்புதலாகும். ஆகவே எம்மில் எழும் முக்கிய கேள்விகள்,

1] நிகழ்நிலை [online] யில் செலவழிக்கும் காலம் அவர்க ளின் நேரடியான சமூக இணைப்புகளை பாதிக்கிறதா [social connections] ?
2] இணையம் சமூக நெறி முறைகளின் வலுவை அல்லது பிடியின் செறிவை குறைக்க [dilution of social norms] பங்களிப்புச் செய்கிறதா ?

இணையம் பொதுவாக மக்களை, மக்களுடனான நேரடி தொடர்பில் இருந்து [in-person contact] தூக்கி எறிந்து, அந்நியப்படுத்துவதுடன், நிஜ உலகத்துடனான தொடர்புகளுக்கான வாய்ப்புகளை துண்டிக்க ஊக்கு விப்பது, இன்று ஒரு பரவலான கவலையாக உள்ளது. இணையம் மக்களை வசப்படுத்தி, இயங்கலையில் [online] பல மணிநேரம் செலவழிக்க தூண்டுகிறது. அதனால், அவர்கள் கணனி திரைக்கு முன், வெளியே அயலவருடன், நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் கூடிப் பேசாமல், கதிரையில் இருந்து காலம் கழிக்கிறார்கள். இப்படி எதுவாகினும் உங்கள் நேரத்தில் கூடிய பங்கை எடுப்பது, உங்கள் ஆரோக்கியத்தை, கட்டாயம் எதோ ஒரு வழியில் பாதிக்கும்.

மேலே கூறியவாறு சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி இருக்கும் மக்கள் ஒரு எதிர்மறையான பக்க விளைவுகளை அதிகமாக சந்திக்கலாம். உதாரணமாக, கண்கள் சோர்வு அடைதல், சமூகத்தில் இருந்து ஒதுங்குதல், அல்லது தூக்கம் இல்லாமை போன்றவை [eye strain, social withdrawal or lack of sleep.] வரக்கூடும். அது மட்டும் அல்ல, கணனியில் ஆய்வுகளில் ஈடுபடுபவர்களும் அல்லது மக்களுடன் பலமணிநேரம் வாதிடுபவர்களும் கூட இதே நிலையைத்தான் பெறுவார்கள். என்றாலும் சமூக ஊடகத்தில் அடிமையாகிறதே எல்லாவற்றையும் விட கொடுமையானது. இன்று இந்த நவீன உலகில்,  ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற இணைய சாதனங்களை [smartphones and other devices] பலர் தம்முடன் எடுத்து செல்வதால், இணையத்தில் இருந்து தப்பிப்பது மிக மிக கடினமாகும். மேலும் அவர்கள் இந்த வசதிகளால் கூடுதலான நேரம் தம்மை அறியாமலே முகநூல், கீச்சகம் மற்றும் படவரி [Facebook, Twitter and Instagram ] போன்ற சமூக ஊடகங்களில் கூடுதலான நேரம் செலவளிக்கிறார்கள். இந்த தளங்களுக்கு பழக்க அடிமையாகி விடக்கூடியவர்களுக்கு, இது அவர்களின் வாழ்க்கையிலும், அவர்களுடைய ஆரோக்கியத்திலும் கட்டாயம் ஒரு தீங்கு விளைவிக்கும், உதாரணமாக, வேலை, உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடு மற்றும் முகத்திற்கு முகம் சந்திக்கும் உறவு போன்றவற்றை குறைத்து விடும். இந்த நடவடிக்கைகளில் சில மிகவும் நடுநிலையானவை, அவைகள், உதாரணமாக கட்டணங்களை செலுத்துவது, பொருள்கள் வாங்குவது, வேலைக்கு மனு செய்வது, மற்றவருடன் தொடர்பு கொள்வது, போன்றவை  இன்றைய உலகில் சில சில விடயங்களுக்கு தேவையானவை, ஆனால் மற்றவைகள், உதாரணமாக, ஆபாசமான புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் , ஒன்லைன் உறவுகள், போன்றவை வலுவான உணர்ச்சிகளை, அதனால் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியவை.

நாம் வாழும் இன்றைய நூற்றாண்டு நம் கையை விட்டு நழுவி பெரும்பாலும் இணையத்தின் பிடியில் அகப்பட்டுள்ளது. இந்த இணையம் என்ற தளமும் பிற தளங்களை போன்று மக்களை காக்கவும்  செய்கிறது, அழிக்கவும் செய்கிறது. இணையத்தில் வாழ்ந்தார்கள் என்பதை விட இன்று அழிந்தார்கள் என்பது கூடிக்கொண்டு போகிறது. உதாரணமாக, இணையத்தை அதிகம் பயன் படுத்துபவர்கள் 14 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட  இளைஞர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. அத்துடன் இவர்கள் அதிகமாக, தினமும் பயன்படுத்தும் சூழலையும் காண்கிறோம். இன்றைய இணையத்தில் பெருவாரியான ஆபாச செயல்கள் பயன்படுத்தப் படுகிறது என்று ஒரு கணிப்பு சுட்டிக் காட்டுகிறது. இன்றைய இளைய சமுதாயம் ஆபாச மயமாகி வளர சந்தர்ப்பம் அதிகமாகிறது. இப்படியான ஆபாசத்தின் விளைவுகள், உதாரணமாக, சுயஇன்பம், விபச்சாரம், ஓரினசேர்க்கை, என்று பல வித பாதிப்புக்களை இந்த சமூகத்தில் உருவாக்கி உள்ளது. இன்றைய காலக் கட்டத்தில் கைத்தொலை பேசி, நம் வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. கை, கால்கள் போல, நம் உடலின் ஓர் பகுதி ஆகிவிட்டது. உதாரணமாக கைத்தொலை பேசியின் திரையில், பெரும்பாலோனோர் கட்டுண்டு கிடக்கின்றார்கள். ஆரம்ப காலங்களில், நாம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திய கைத்தொலை பேசி, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால். கணனியில் இருக்கும் அத்தனை வசதிகளையும் இன்று கொண்டு உள்ளது.

ஒரு நாளைக்கு நீங்கள் இணையத்துடன் எத்தனை மணி நேரம் செலவிடுகின்றீர்கள்? செல விட்ட நேரத்தில் நீங்கள் எதனைக் கற்றுக் கொண்டீர்கள்? இந்தக் கேள்விகளுக்கு தைரியமான பதிலொன்று உங்களிடமிருந்து கிடைக்கு மெனில் உங்களைப் பற்றி கவலையடையத் தேவயில்லை. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதுவதால் உண்மை எது, பொய் எது என்று புரியாமல் தடுமாறுகிறோம். எனவே,இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான செய்திகளை நாம் “கண்னால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பார்வையில்தான் அணுக வேண்டும். இணையத்தில் சிறந்த கருத்துக்கள், வரலாறுகள், கலைகள், செய்திகள், விஞ்ஞானம், மருத்துவம், தொழில் நுட்பம் என எண்ணிலடங்கா விடையங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றில் உங்களுக்கு விரும்பிய உங்களை வளப்படுத்தத் தேவையான வற்றை தேடிப் படியுங்கள். உங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இணையம் என்பதை நல்லவிதமாக அணுகினால், அது நன்மையை மட்டுமே பயக்கிறது. அதை ஆயுதமாகக் கருதினால் அழிவையே தந்துவிடும். சமூகத்தின் பார்வையில் இணையம் இருமுனையிலும் கூரானக் கத்தியாகவே காணப்படுகிறது.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 08A  தொடரும்
 பகுதி1A வாசிக்க அழுத்துங்கள்→ 
   Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

பகுதி: 08A வாசிக்க அழுத்துங்கள் → 
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?[8A]

3 comments:

  1. Nageswary UruthirasingamFriday, January 24, 2020

    சத்தியமான உண்மை. அத்தனை வரிகளிலும் உண்மை உண்மை உண்மை ஆழிக்கடல் போல் ஆழமாக உள்ளது. வாழ்க்கை யாதார்த்தத்தை நன்கு புரிந்து கொண்ட எத்தனை பேர் இந்த இணையத்தளங்களில் இருந்து வெளியே வர முடியாமல் சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டு இருக்கின்றோம் என்று என்னுடன் சேர்த்து சொல்லுங்கள் பார்க்கலாம்.

    ReplyDelete
  2. உங்களுக்கு விரும்பிய உங்களை வளப்படுத்தத் தேவையான வற்றை தேடிப் படியுங்கள். உங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இணையம் என்பதை நல்லவிதமாக அணுகினால், அது நன்மையை மட்டுமே பயக்கிறது. அதை ஆயுதமாகக் கருதினால் அழிவையே தந்துவிடும்.

    ReplyDelete
  3. Kandiah Manoharan ManoharFriday, January 24, 2020

    அருமை அருமை உண்மை.காலோசித பதிவு.காலத்தின் கட்டாய தேவை.இருந்தும் என் சிற்றறிவுக்கு எட்டியவரை சில விமர்சனம்
    இந்த இலத்திரன் டிஜிற்றல் இணைய தளம் முகநூல் கையடக்க தொலைபேசிகளுக்கு முன்பே ஆயிரமாயிரம் ஆண்டு களுக்கு முன்பே இங்கு குறிப்பிட்ட சகல சமூக சீர்கேடுகள் சீரழிவுகள் அரங்கேறியவையே
    அதன் வீரியம் potentiality இன்று அதி வேகத்தில் உச்சகட்டத்தில்்
    அதில் இருந்து எமை காக்க உபாய மார்க்கமொன்றுண்டு
    கடவுள் எமக்களித்த ஆறாவது அறிவை உபயோகிக்க வேண்டும்.
    நல்லவை தீயவையை இனம் காணவேண்டும்
    மூன்று விடயம்
    ஒன்று உங்கள் பிள்ளைகளின் கணனி கையடக்க தொல்லை பேசி பாவனையை அவர்கள் அறியாமலேயே அவதானியுங்கள்.Monitering without their knowledge.
    அடுத்து இன்று வெப் தளங்களில் ஒரு சொல்லை அடிக்க விரல் நுனியில் அனைத்தும்
    மனோவியாதி உடையோர் ஆபாச பக்கங்கள் போவார்கள். சகதியில் இறங்குவோரை நாம் காப்பாற்ற முடியாது.கடவுள் தான் காக்க வேண்டும்
    மூன்றாவது முகநூல்

    ReplyDelete