"தொட்டால் கொரோனா மலரும்"
 [A poem on Coronavirus]
 [A poem on Coronavirus]

"தொட்டால் கொரோனா மலரும்
தொடாமலும் அது  பரவும்
பட்டால் முகம் சிவக்கும்
படாமலும் நீ சிவப்பாய் !"

"கண்கள் படாமல்,
கைகள் தொடாமல்
காய்ச்சல் வருவதில்லை
இருமல் வாட்டுவதில்லை!"

"நேரில் வராமல்
சந்திப்பு  செய்யாமல்
வேலை கெடுவதில்லை
காதல் தொலைவதில்லை !"

"தும்மல் வந்ததாலும்
இருமல் வந்ததாலும்
முகத்தை மூடிவிடு
திசுவால் தொடைத்துவிடு !"
 
"வெளியெ சென்றாலும்
உள்ளே இருந்தாலும் 
கையை கழுவிவிடு
சானிடைசர் தடவிவிடு !"

"வீட்டில் இருந்தாலும்
துப்பரவாய் இருந்தாலும்
பாதுகாப்பு  இல்லையேல்
கொரோனா மலர்ந்துவிடும் !"  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]0 comments:

Post a Comment