பழுத்த வெற்றிலை வேதாசலம்






 பல வருடங்களுக்கு முன் பழுத்த வெற்றிலை வேதாசலம் என அழைக்கப்பட்ட ஒரு விவசாயி ஊரில் இருந்தான். அவன் காலையும் ,மாலையும்  தினசரி பாக்கு வெற்றிலை போடும் பழக்கமுடையவன். எனவே அவனது வீட்டில் தட்டு நிறைந்து பாக்குவெற்றிலை      அவன் கூடவே இருக்கும்.  

ஒவ்வொருநாளும் அவன் காலையிலும் ,மாலையிலும்  பாக்கு,வெற்றிலை தட்டினை எடுக்கும்போது   ''அடடே! வெற்றிலை 2/3 பழுத்துவிட்டதே, விட்டால் அழுகியிடுமே'' என்று அந்த பழுத்த வெற்றிலையையே தினசரி சாப்பிடும் வழக்கத்தினைக் கொண்டிந்ததால் அவனை 'பழுத்த வெற்றிலை வேதாசலம்' என்றே ஊரில் அனைவரும் குறிப்பிட்டு வந்தனர்.

ஒருநாளும் பச்சை வெற்றிலை சாப்பிட்டு அனுபவியாமல் ஒரு நாள் இறந்துவிட்ட  வேதாசலத்தின் இறுதிக்கிரிகையின் போது ,மனைவி குறுக்கிட்டு '' அவருக்கு பச்சை வெற்றிலை பிடியாது, பழுத்த வெற்றிலை வையுங்கோ' என்று ஓலமிட்டு வேதாசலத்தின் இறந்த உடலுக்குக் கூட  கடைசி நேரத்தில் இறந்த  புது வெற்றிலையினை அனுபவிக்க கொடுத்து வைக்காமையினை அங்கு பலரும் முணுத்தமையினை அவதானிக்க முடிந்தது.

இப்படியே தான் ,தற்காலத்தில் குளிர் சாதனப் பெட்டிக்குள் பொருட்களை வேண்டி அடைத்துவிட்டு, பழைய இருப்பில் வாழ்ந்துகொண்டிருப்போரும், பிள்ளைகள்  அவர்கள் கல்வியினை முடித்து வேலைக்கு சென்றபின்னரும்அவர்கள் சுமைகளை  தாங்கள் சுமந்துகொண்டு இன்னும் வாழாது 2,3 வேலை என்று பழைய ஓட்டம் ஓடிக் கொண்டு இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.
 -என்று மாறும் மனிதர் மனம்.

செ.மனுவேந்தன்

1 comments:

  1. மனம் மாறப் போவது மரணத்தின் போதுதான் போலும்

    ReplyDelete