🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today

இலங்கை,இந்தியா, உலகம்
 
🔻🔻🔻🔻🔻🔻

[மேலும்  இலங்கை,இந்திய,உலக  செய்திகளுக்கான  வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர்  links இறுதியில்  இணைக்கப்பட்டுள்ளது.]


வாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரும்புக் கம்பிகள், கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள சுமார் 10,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு சீனாவிலிருந்து மர்மமான விதைகள் பார்சலில் வந்திருப்பதாகவும் அந்த விதைகள் குறித்து அமெரிக்க விவசாயத்துறை சந்தேகம் அடைந்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
சிங்கப்பூர் பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளி வழக்கறிஞர் பிரீத்தம் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
கொரோனா வைரஸ் முதல் முறை தொற்று ஏற்பட்டு, 3 மாதங்கள் முதல் 1 ஆண்டு ஆன பின்னர் அதே நபர் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
இலங்கையில் கொரோனா வைரஸ்   பாதிப்பு இன்று வரையில் [ஒருநாளில்+00=]2,810       பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,296   ஆகவும்,    503     பேர் வைத்திய கவனிப்பிலும்,   உயிரிழந்தோர் எண்ணிக்கை  [+00]=11 ஆகவுள்ளது.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை ஜெயந்தியாய குளத்தில் தாமரைப்பூ பறிக்க தோணியில் சென்ற தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி, திருப்பெருந்துறை 5ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராசா சத்தியா என்பவர் காணாமல் போயுள்ளதுடன், ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம்  (29) பகல் இடம்பெற்றுள்ளது.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கறுத்தப்பாலம் அருகில் ஆற்றில் இருந்து மாட்டுவண்டியில் மணல் ஏற்றச் சென்ற, கொடுவாமடு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய கதிர்காமத்தம்பி மயில்வாகனம் என்பவர்முதலை இழுத்துச் சென்று காணாமல்போயுள்ள சம்பவம் (29) காலை இடம்பெற்றுள்ளது.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தீர்மானித்துள்ளது என்று அதன் தேசிய அமைப்பாளர் ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
கைது செய்யவதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, சிறைச்சாலை கைதிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த மூன்று சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரிகளும் ,   (29) நீர்க்கொழும்பு நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூல பரீட்சையில் சித்தியடையச் செய்து தருவதற்காக 5000 ரூபா இலஞ்சம் பெற்ற ஹம்பாந்தோட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் அபிவிருத்தி உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களை அச்சுறுத்தி, கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, 10 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
குப்பிளான் பகுதியில் ,குடும்பத் தகராறு காரணமாக பிரிவாழும் ,ஊரெழுவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 34 வயதுடைய குடும்பப் பெண்ணை வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்ற கணவர், சித்திரவதையின் பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ள நிலையில் வைத்திய சாலையில்  அனுமதிக்கப்
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
சென்னை : 'ஆன்லைன்' சூதாட்டங்களை தடை செய்ய, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வரவேற்றுள்ளார்.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
சென்னை : பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களை தண்டிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
சென்னை : சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' பெண் பத்திரிகையாளர்களை கேவலமாக சித்தரித்து கருத்து வெளியிட்ட, கிஷோர் கே சுவாமி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
ராமநாதபுரம் : ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறையில் உள்ள தோப்பில் தமிழ், அரபி எழுத்துகள் உள்ள கி.பி., 16ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
குஜராத்தில் ரூ.கோடி செல்லாத நோட்டுகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரிய வழக்கு தொடர்பாக, தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் இன்று வரையில் பா திக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒருநாளில் தொற்று +275,855 பேர் ஆக 17,160,303 மொத்தம்  பேர் ஆகவும்,   மீண்டவர்களின் எண்ணிக்கை 10,671,245         பேர் ஆகவும் , ஒருநாளில் பலியானவர்கள் +6,593 ஆக மொத்தம் 662,470  பேர் பலியாகியுள்ளனர்.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
சீனாவில் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பிருப்பதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠
உலகில் சிலநாடுகளில்
🌍கொரோன வைரஸினால் இதுவரையில் பாதிக்கப்பட்டவர்கள் தொகை,
🌎ஒருநாளில் பாதிக்கப்படடவர்கள் தொகை
🌐 இதுவரையில் இறந்தவர்கள் மொத்த தொகை
🌏ஒரு நாளில் இறந்தவர்கள் தொகை
 முறையே……..🌍……………………..+🌎………..... 🌐……........+🌏
அமெரிக்கா-4,557,904          +59,177  153,551    +1,260   
பிரேஸில்-2,555,518            +70,869  90,188  +1,554
இந்தியா-1,584,384                    +52,249  35,003   +779
ரஷ்யா-828,990                      +5,475   13,673   +169
இங்கிலாந்-301,455            +763           45,961   +83
இத்தாலி-246,776                    +289           35,129   +6 
ஜெர்மனி-208,811                  +860            9,212   +5 
பிரான்ஸ்-185,196                  +1,392          30,238   +15
கனடா-115,431                    +437            8,917   +5 
சுவீடன்-79,782                    +27             5,730   +9
சிங்கப்பூர்-51,531                  +334                27           +00
சுவிஸ்-34,802                    +193             1,979   +1 
டென்மார்க்-13,634                  +57                614   +1 
அவுஸ்திரேலியா-15,580     +276   176          +9 

நோர்வே-9,172                    +22             255          +00

🔻🔻🔻29.07.2020🔻🔻🔻

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தாம் பூரண ஆதரவினை வழங்குவதாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 பொது அமைப்புகள் கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
தற்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை திருப்பி நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை ஜூலை 31ம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
இலங்கைபொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் அனைத்து அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
இளைஞர்களின் ஆற்றல்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தி சிவில் மற்றும் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன்  யாழ் சித்தங்கேணிப்பகுதியில் ´நல்லிணக்க மையம்´ ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
லடாக் எல்லை மோதலைத் தொடர்ந்து, இந்தியா சீனாவுக்கு எதிராக, இந்திய பெருங்கடலில் அதிக அளவில் போர்க்கப்பல்களை நிறுத்தி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்து வருகிறது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
பாகிஸ்தானில் உள்ள தேவாலயம் ஒன்றை மர்ம கும்பல் தீ வைத்து எரிக்கும் காட்சியும் , அதன் அருகில் இருக்கும் பள்ளிக்கூடமும் தாக்கப்படுவதும் அடங்கிய பகீர் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
இலங்கையில் கொரோனா வைரஸ்   பாதிப்பு இன்று வரையில் [ஒருநாளில்+05=]2,810       பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,296   ஆகவும்,    503     பேர் வைத்திய கவனிப்பிலும்,   உயிரிழந்தோர் எண்ணிக்கை  [+00]=11 ஆகவுள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
கட்டாரில் 19 வருடங்களாக வசித்து சர்வதேச தொடர்புகளை பேணிவந்த நவ்பர் மௌலவி என்பவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி. என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன சாட்சியமளித்துள்ளார்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
வவுனியாவில் பொலிசார் திருடப்பட்ட 7 சைக்கிள்களை மீட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
இரத்தினபுரி மாவட்ட செயலக வளாகத்தில், நீண்ட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் ஒருவரும், மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
கனடா - ரொறன்ரோவில் பிரபல தமிழ் வர்த்தகரான மனோ என்பவர் ,திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், வீட்டில் இருந்த போது, அங்கு வந்தவர்களால்   துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
தமிழகத்தில்  கொரோனா வைரஸ்    பாதிப்பு ஒருநாளில் தொற்று +6,972 பேர் ஆக இன்றுவரையில் மொத்தம் 2,27,268 பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை [ஒருநாளில்+4,707=] மொத்தம் 1,66,956 பேர் ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை [ஒருநாளில் +88]3,659 ஆகவும் உயர்ந்துள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ முகாமில் தினமும் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக குவிந்து வருகின்றனர்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
சென்னை பாரிமுனை முத்தியால்பேட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பெயர் சூட்டி சமூக நலத்துறையிடம் ஓப்படைத்தார்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
சென்னையில் 20 முதல் 29 வயதினரை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
மதுரை, கீழ்மதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே தி.மு.க., நிர்வாகி வீட்டில், மண்ணெண்ணெய் குண்டு வீசிய, நான்கு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
'போதை பொருள் கடத்துபவர்களுடன், போலீசாரும் கை கோர்ப்பதாக வரும் தகவல் கவலை அளிக்கிறது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
சோழவரம் : இறைச்சிக்காக வீடு மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகளை திருடி, கொடூரமாக கொன்று குவிக்கும் சமூக விரோதிகள் மீது, காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாடு வளர்ப்பவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில்கொரோனா ஊரடங்கால், கோவில் மூடப்பட்டுள்ள வேளையில் ஊரடங்கு விதிகளை மீறி, சிவன்மலை கோவிலில், தென்மண்டல ஐ.ஜி., சுவாமி தரிசனம் செய்தது, சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் இன்று வரையில் பா திக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒருநாளில் தொற்று +247,239 பேர் ஆக 16,883,451 மொத்தம்  பேர் ஆகவும்,   மீண்டவர்களின் எண்ணிக்கை 10,445,764         பேர் ஆகவும் , ஒருநாளில் பலியானவர்கள்+5,556 ஆக மொத்தம் 662,470  பேர் பலியாகியுள்ளனர்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
ஆபத்தான கொரோனா நோயாளிகளை முன்கூட்டியே கணித்து சிகிச்சை அளிக்கும் வழிமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி கண்டுபிடித்துள்ளனர்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள ராணுவத் தளத்தில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அங்குள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அந்த நாட்டின் படை வீரர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
உலகில் சிலநாடுகளில்
🌍கொரோன வைரஸினால் இதுவரையில் பாதிக்கப்பட்டவர்கள் தொகை,
🌎ஒருநாளில் பாதிக்கப்படடவர்கள் தொகை
🌐 இதுவரையில் இறந்தவர்கள் மொத்த தொகை
🌏ஒரு நாளில் இறந்தவர்கள் தொகை
 முறையே……..🌍……………………..+🌎………..... 🌐……........+🌏
அமெரிக்கா-4,498,006          +64,392  152,309  +1,234
பிரேஸில்-2,484,649            +41,169    88,634  +955   
இந்தியா-1,532,135                    +49,632    34,224  +776   
ரஷ்யா-823,515                     +5,395   13,504  +150
இங்கிலாந்-300,692           +581            45,878  +119
இத்தாலி-246,488                   +181            35,123  +11
ஜெர்மனி-207,951                   +572              9,207  +2 
பிரான்ஸ்-183,804                  +725           30,223   +14
கனடா-114,994                    +397         8,912          +11
சுவீடன்-79,494                    +39          5,702         +10 
சிங்கப்பூர்-51,197                  +359            27           +00
சுவிஸ்-34,609                    +132         1,978          +00
டென்மார்க்-13,577                  +30            613          +00
அவுஸ்திரேலியா-15,302  +367           167          +6

நோர்வே-9,150                     +18            255           +00
🔻🔻🔻28.07.2020🔻🔻🔻
இலங்கையில் போதைப்பொருள், பாதாள குழுக்களின் குற்றச்செயல்கள் மற்றும் பணம் பறித்தல் தொடர்பில் முறையிட பொலிஸாரால் 1997@police.lk and 1917@police.lk ஆகிய ஈமெயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
குருநாகல் – வெல்லவ பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் 22 ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் நேற்று  திருகோணமலைக்கு, விஜயம் செய்தபோது கிழக்கு மாகாண ஆளுநரை  [அனுராதா யஹம்பத்] சந்தித்து கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
➼➼➼➼➼➼➼➼➼➼
கண்டி – பேராதனை – கம்பளை வீதியின் கெலிஓயா பகுதியில் நேற்று (27) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்ட பாதசாரி, பின்னால் வந்த முச்சக்கரவண்டியிலும் மோதி விபத்துக்குள்ளாகி,தொடர்ந்து, குறித்த முச்சக்கரவண்டி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காருடன் மோதி குடை சாய்ந்து இடம்பெற்ற விபத்தில் தம்பதியினர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
➼➼➼➼➼➼➼➼➼➼
கொரோனா காரணமாக தொழிலை இழந்த இலங்கை பணியாளர்கள் பேர் 340  ஜோர்தானில் சிக்கியுள்ள நிலையில், தம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு அவர்கள் கோரி, இலங்கை தூதரக அதிகாரிகள் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது ,அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப் புகை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.
➼➼➼➼➼➼➼➼➼➼
லிந்துலை ஆகரகந்தை தோட்டத்தில் இன்று (28) காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
➼➼➼➼➼➼➼➼➼➼
வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ,பணமோசடியில்  ஏமாற்றிய ,ஆந்திரப் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
➼➼➼➼➼➼➼➼➼➼
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் மற்றும் இறுதி கட்ட மனித சோதனைகளுக்கு இந்தியா முழுவதும் ஐந்து தளங்கள் தயாராக உள்ளன என்று உயிரி தொழில்நுட்பத் துறை (டிபிடி) செயலாளர் ரேணு ஸ்வரூப் தெரிவித்தார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த பரிசோதனையில் 30 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
➼➼➼➼➼➼➼➼➼➼
ஆஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல், அவர்களை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

➼➼➼➼➼➼➼➼➼➼
இலங்கையில் கொரோனா வைரஸ்   பாதிப்பு இன்று வரையில் [ஒருநாளில்+23=]2,805       பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,121   ஆகவும்,    673     பேர் வைத்திய கவனிப்பிலும்,   உயிரிழந்தோர் எண்ணிக்கை  [+00]=11 ஆகவுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
இணையம் ஊடாக வெளிநாட்டில் தொழில் புரிவோரிடம் சலுகை கடன் தருவதாக கூறி வங்கி விபரங்களை பெற்று நிதி மோசடியில் ஈடுபட்ட ஐவர் கொழும்பு – கிருலப்பனயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
➼➼➼➼➼➼➼➼➼➼
நீண்ட காலமாக ரகசியமாக சட்டவிரோத சிகரெட்டுக்களை கடத்தி வந்ததுடன் , மாணவர்களுக்கு போதைப்பொருள் மாத்திரை விநியோகத்திலும் ஈடுபட்ட கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பேலியகொடை மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு 125  மீற்றர் தூரத்திலுள்ள மன்னார் பெரிய கடை பகுதியில் ஒரு அரச ஊழியருடைய வீட்டில் துணிகரமான முறையில் பணம், நகைகள் திருடப்பட்டுள்ளதாக மன்னார் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
2023 ஆம் ஆண்டுவரை தலைமைப்பதவியில் இருப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2019 இல்கூடிய ஐக்கிய தேசியக் கட்சி சம்மேளனம் அனுமதி வழங்கியுள்ளது என தெரிய வந்துள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில், நேற்றய  தினம், றிசாட்பதியுதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், 4பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
➼➼➼➼➼➼➼➼➼➼
தமிழகத்தில்  கொரோனா வைரஸ்    பாதிப்பு ஒருநாளில் தொற்று +6,999 பேர் ஆக இன்றுவரையில் மொத்தம் 2,20,716 பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை [ஒருநாளில்+5723=] மொத்தம் 1,62,249 பேர் ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை [ஒருநாளில் +77]3,571 ஆகவும் உயர்ந்துள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசு உற்பத்தி தடுப்புக்கான நவீன உபகரணங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநகராட்சி கமிஷனரிடம் வழங்கினார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
சென்னை விசுவ இந்து பரிஷத் அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (சேகர்-வயது47) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
செருப்பு இல்லாமல் வந்த மாணவிக்கு, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி  செருப்பு வாங்க ரூ.2 ஆயிரம் கலெக்டர் வழங்கினார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் 4 மாதங்களாக மூடிக்கிடப்பதால், தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பிய, கருப்பர் கூட்டம் சுரேந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
➼➼➼➼➼➼➼➼➼➼
சென்னை : 'வெளிநாட்டில் இருப்பவர்களுடன், தொலைபேசி வழியாக சிறை கைதிகள் பேச, சட்டத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
'நடிகை விஜயலட்சுமியின் தற்கொலை முயற்சிக்கு காரணமான, சீமான் மற்றும் அவரது ஆதரவாளர் ஹரி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதும் வாடகைக்கு குடியிருந்தவர்களை வீட்டு உரிமையாளர் பூட்டிவைத்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் இன்று வரையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒருநாளில் தொற்று          
 +203,643பேர் ஆக 16,621,267  மொத்தம்  பேர் ஆகவும்,   மீண்டவர்களின் எண்ணிக்கை10,215,534 பேர் ஆகவும் , ஒருநாளில் பலியானவர்கள்+3,847 ஆக மொத்தம் பேர் 655,730 பலியாகியுள்ளனர்.
➼➼➼➼➼➼➼➼➼➼
 சீனாவின், ஷாங்காய் நகருக்கு மிக அருகே, இரண்டு போர் விமானங்களை, அமெரிக்கா பறக்கவிட்டு  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
ஓமன் வளைகுடா பகுதியில், பிரமாண்ட போர் ஒத்திகைக்கு தயாராகும் வகையில், விமானம் தாங்கி போர்க் கப்பலை, ஈரான் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
அமரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை வெறும் 30 நொடிகளில் கண்டறியும் அதி நவீன கருவியொன்றை தயாரித்துள்ளதாக இஸ்ரேலை சேர்ந்த நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
சீனாவிற்கு எஸ்-400 வகை ஏவுகணைகளை அனுப்ப மாட்டோம் என்று ரஷ்யா உறுதியாக கூறியுள்ளது. சீனாவிற்கு நண்பனாக இருந்த ரஷ்யா தற்போது சீனாவிற்கு மிக முக்கியமான ராணுவ உதவி ஒன்றை மறுத்துள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
சீனாவின் ஜின்ஜியாங் என்ற மிகப்பெரிய பகுதியில், சம கால உலகின் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடந்து கொண்டு இருக்கிறது. உய்குர் இனத்தைச் சேர்ந்த சுமார் 10 லட்சம், ஆண்கள், முகாம்கள் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய சிறைச்சாலைகளில் உள்ளனர். முஸ்லீம் பெண்கள், சீன ஆண்களால், பலாத்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
➼➼➼➼➼➼➼➼➼➼
உலகில் சிலநாடுகளில்
🌍கொரோன வைரஸினால் இதுவரையில் பாதிக்கப்பட்டவர்கள் தொகை,
🌎ஒருநாளில் பாதிக்கப்படடவர்கள் தொகை
🌐 இதுவரையில் இறந்தவர்கள் மொத்த தொகை
🌏ஒரு நாளில் இறந்தவர்கள் தொகை
 முறையே……..🌍……………………..+🌎………..... 🌐……........+🌏
அமெரிக்கா-4,430,315           +58,476  150,395   +547
பிரேஸில்-2,443,480             +23,579    87,679    +627   
இந்தியா-1,482,503                     +46,484    33,448    +636
ரஷ்யா-818,120                       +5,635     13,354    +85
இங்கிலாந்-300,111             +685              45,759     +7
இத்தாலி-246,286                     +170               35,112    +5
ஜெர்மனி-207,379                     +638               9,205    +2
பிரான்ஸ்-183,079                     +514                   30,209    +9
கனடா-114,597                       +686               8,901    +11
சுவீடன்-79,395                       +12                     5,700    +11
சிங்கப்பூர்-50,838                     +469                    27            +00
சுவிஸ்-34,477                       +65                      1,978   +1   
டென்மார்க்-13,547                     +109                         613    +00
அவுஸ்திரேலியா-14,935  +532                          161   +6   

நோர்வே-9,132                        +15                         255    +00


                                                         🚩🚩🚩🚩
↶மேலும் விரிவான செய்திகளுக்கு அழுத்தவும் ↷

⬐ [இலங்கை]வீரகேசரி ⬎
           https://www.virakesari.lk/

⬐ [இந்தியா]வெப்துனியா ⬎ 
      https://tamil.webdunia.com/

⬐ [இலங்கை]தினகரன் ⬎
  https://epaper.thinakaran.lk/Home/FullPage

⬐ [இந்தியா]⬎
https://www.dinamalar.com/inner_main.asp?cat=89

⬐ சமூகம் காணொளிச்  செய்திகள்⬎   https://www.youtube.com/channel/UCorkJqjwtQMy3BObeN_kuFw
 samugam corona china
                    tags:-Aishwarya Rajesh Sanchita Shetty     sanmugam sri lanka ibc                Samantha  Oviya          Kalavani     Amy Jackson                 Chandini Tamilarasan                  
                    Srushti Dange               Taapsee Pannu             Hansika Motwani         Janani Iyer Pranitha    Nithya Menen              Shruti Haasan               
                    Rakul Preet Singh         Radhika Apte                Nandita Swetha                                Gayathrie   Varalaxmi Sarathkumar                    Mahima Nambiar        
                    Nazriya Nazim               Sri Divya     Catherine Tresa            Nikki Galrani                 Keerthy Suresh            
Aari             Atharvaa Murali           Arulnithi    Harish Kalyan                Vidharth     Vijay Sethupathi           Ashwin       Sivakarthikeyan                    Sri              
                    Udhayanidhi Stalin      Dinesh        Attakathi    Vijay Antony                 Vikram Prabhu             Gautham Karthik                    Ashok Selvan               
Bobby Simha                 Kathir         Madha Yaanai Koottam                  Naveen Chandra          Bramman   Koottam Kalaiyarasan
                    G. V. Prakash Kumar surya vijay karththik kamalhasan rajanikanth Srikanth suri vavelu
தேடல் துணைகள்: thamizh, tamil, sampanthar, vadakilakku, vadakku, kizhakku, arasu, maiththiri, ranil, muslim, hindu, jesu, pothai, heroyin, val, jaffna, kilinochchi, maddakkalappu, butticola , ponnampalam, malaiyakam thondamaan, tiger, koddiya, ilankai ,ceylon, sinkalese , unp, slfp, suren  ragavan, vigginesvaran,tricomalai , vavuniya, mullaitivu, mannar , puththalam, kandy,achchuvely araly, ariyalai, allarai, allaippiddi, alvay, alaveddy, anailaithivu
aththiyadi,avarankal, anaikkoddai, edaikadu, enuvil, erupalai, elakkanavaththai,elavalai, echchankadu, echchamoddai, evinai, uduppiddi, udivil urumpirai, urelu, eluthumadduval, elalai, oddakappulam, kachchay, kaddudai, kadduvan, kantharmadam, kantharodai, kamparmalai, karanavay, karanthan, karampon, karaveddi, kalvayal, kalviyankadu, kalapumy, kankesanthurai, kks, karainagar, kirimalai, kuppilan, kurunakar, kurumpasiddi, kerudavil, kerpeli, kerudavil, kerpely, kaithadi, kokkuvil, kodikamam, kommanthurai, kollankaladdi, kolumpuththurai, kondavil, koppai koyirkudiyiruppu, sankaththanai, sankanai, sankuveli, sandilippay,sarasalai, savakachchery,singanagar.siththankeny, sinthupuram, sillalai, siruvilan,siruppiddi,sundikkuly, suthumalai,sunnakam, chulipiram, choliyapuram, thachchanthoppu, thanankilappu, thavady,thirunelvely, thunnalai, thellippalai, thevapuram,thaiyiddi, thondaimanaru, tholpuram, nainadivu, nallur, navakkiry, navaly, nagarkovil, nayanmarkkaddu, naranthanai, navanthurai, nilavarai, nirvely, niraviyady, nunavil, nelliyady, pandaththeruppu, pandaththarippu, pannagam, paththameny, pointpirro, paruththithurai, palaly ,pannalai, panippulm, pasaiyur, palavy, puththur
puloly, puliyankudal, punnalaikkadduvan, periyavilan, ponnalai, madduvil, mandaidivu, mandaithivu, maruthanarmadam, mallakam, maravanpulavu, masiyappiddi, mathakal, mavaliththurai, maviddapuram, manippay,mirusuvil, mesalai, mulai, vaddukkoddai, vadamarachchi, vadaliyadaippu, vannarpannai, vayavilan, varany, vallipuram, valveddiththurai, varuththalaipilan, viyaparimulai,velanai thevu, punkuduthevu,

10 comments:

 1. இனியா, பரமன்Wednesday, April 24, 2019

  This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. Anujan saravananWednesday, May 22, 2019

  This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. "கனடாவில் இரகசியமாகப் பெண்களை படம் பிடித்த இளைஞன் கைது"
  இதுவும் ஒரு மன நோயாளனாக இருக்குமோ?

  ReplyDelete
 4. news:விகாரைக்கு அருகில் அமைந்துள்ள பதுலு ஓயாவில் இருந்து சுமார் 2 கிலோ கிராம் நிறையுடைய மிதக்கும் கல் ஒன்று விகாரையின் தேரர்கள் சிலரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  கருத்து: அட நம்ம ஜனங்க இந்த கல்லை கண்டிருந்தா , அது கடவுளின் அற்புதம் என்று விளம்பரப்படுத்தி ,குறிகள் போட்டு ,அதுக்கு பூஜையே பண்ணி அசத்தியிருப்பாங்க

  ReplyDelete
 5. இன்று நம்மவர் மத்தியில் காணப்படும் அதிகளவிலான வன்முறைகள் செய்திகள் இப்பக்கத்தில் இடம்பெறுவதன் காரணம் தவறு செய்தவர்கள் எப்படியும் அதிகாரிகளிடம் அகப்படத்தான் நேரிடும்.தண்டனைகள் கிடைக்கத்தான் போகிறது.இதனை ஒவ்வொருவரும் புரிதல் அவசியம்.அதேவேளை இலங்கை,இந்தியாவில் கொடுக்கப்படும் தண்டனைகள் கனம் இன்னும் அதிகரிக்கப்படல் அவசியம் என்பது அதிகரித்துவரும் வன்முறைகள் ,அதிலும் பாலியல் வன்முறைகள் எடுத்துக் காட்டுகின்றன.

  ReplyDelete
 6. உண்மையான செய்திகளை இலகுவாக அறியக்கூடியதாக உள்ளது. நன்றி.

  ReplyDelete
 7. உண்மையான செய்திகளை இலகுவாக அறியக்கூடியதாக உள்ளது. நன்றி.

  ReplyDelete
 8. பூந்தமல்லி பிரவீண் அவர்களின் பணி போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய மிகவும் சிறப்பான தொண்டாகும்.
  திரு ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
  செட்டிகுளம் பகுதி சிறுவர்களின் துணிச்சலான ஆராய்ச்சி கவலை அளிப்பதாக உள்ளது.
  கொரோனா மரணங்கள் குறைந்த பாடு இல்லை. நன்றி.

  ReplyDelete
 9. t .கலைமகன்Sunday, May 31, 2020

  செய்திகளின் சிறப்பான தொகுப்பும் , சுருக்கமான முழுமையான தகவல்களும் மிக நன்று

  ReplyDelete
 10. கொரோனா முடியும் முன் அமேரிக்கா கலவரங்களும் நிகழ்வுகளும் வேதனை அளிக்கிறது. வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு சேதம் இல்லை என்பது ஆறுதல் தருகிறது. காரணம் வெட்டு கிளிகளின் தாக்கம் பற்றி ஏதோ வைபிளில் எழுதி உள்ளதாம், வெட்டுக்கிளியை சமாளித்தாலும் இந்த மதகாரர்களின் போதனைகளை கேட்டு பைத்தியம் பிடித்து விடும்.. தொடரும் செய்திகள் உலக நாடுகளின் நிலவரங்களை அறியக் கூடியதாக உள்ளது நன்றி.

  ReplyDelete