பாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை





💧இலங்கையின் மறுபெயர்கள் ஈழம்,இலங்காபுரி,லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம், சின்மோன்டு, சேலான், தப்ரபேன், செரெண்டிப்.

💧  அன்னியர் ஆதிக்கம், போர்த்துக்கீசர்-1597, ஒல்லாந்தர்-1796, ஆங்கிலேயர்-1801.

💧  பிறநாட்டு வழமைகளுக்கு மாறாக இலங்கையில்  மட்டுமே  நிர்வாக சேவைகள் நேரடி அரச கட்டுப்பாட்டில் உள்ளன.

💧  இந்தியாவும் இலங்கையும் என்றும் பிரிந்திருக்காமல் கடல்மட்ட ஏற்ற தாழ்வுகளைப் பொருத்து சேர்ந்தும் பிரிந்தும் இருக்கின்றன. அதன் விவரம்,

💧 சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

💧சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

💧  சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின்கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன.

💧 இலங்கையில் அதி உயர்ந்த மலை, 2,524 மீட்டர் உயரம் கொண்ட பீதுறுதாலகாலமலை.

💧  இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி பம்பரகந்த.

💧 இலங்கையில் அதிகம் மழை பெறும் இடம் வட்டவளை.

💧 இயற்கை வளங்கள்: சுண்ணாம்புக் கல், காரீயம், கனிம மணல்கள், இரத்தினங்கள், பொஸ்பேற்றுகள், களி, நீர் மின்சாரம்

💧2012 கணக்கெடுப்பின்படி 20,277,597 மக்கள் இலங்கையில் வசிக்கிறார்கள். 

💧 இலங்கையின் சிங்களவர் மொத்த சனத்தொகையில் 74%மாக உள்ளனர். நாட்டின் சனத்தொகையில்18% தமிழர்உள்ளார்கள். இலங்கையின் இதர இனங்களாக சோனகர் (அராபியர், மலாயர்களின் வழிதோன்றல்கள் 7%), பறங்கியர் (ஐரோபிய வழிதோன்றல்கள் 1%), வேடர்கள் (காட்டு வாசிகள் 0.1%) உள்ளனர்.

💧 இலங்கையின்  பௌத்தம் (69%), இந்து சமயம் (18%) இஸ்லாம் (12%) , கிறிஸ்தவம் 5% (கத்தோலிகம் 2%, மறுசீரமைப்புக்கிறித்தவம் 0.5%), ஆகவும் உள்ளது.

💧இலங்கை பிரித்தானியாவிடமிருந்து 1948 பெப்பிரவரி 04 திகதி சுதந்திரம் அடைந்தது.

💧1972ல் மேலாட்சி நிலை ஒழிக்கப்பட்டு இலங்கை சனநாயக சோசலிசக் 
குடியரசானது.

💧 சுதந்திரமடைந்த போது இலங்கையின் பாதுகாப்பு படைகளில் 70% வீதமானோர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருந்தபோதும் தற்போது அது 2% உள்ளது.

💧 வருடத்தில் 25 நாட்கள் அரச விடுமுறைகளை இலங்கை கொண்டுள்ளது.

💧 இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து, , 1864 ஆம் ஆண்டு கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் முதலாவது சேவை ஆரம்பிக்கப்பட்டது.

💧உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு.(சிறிமாவோ பண்டாரநாயக்கா)

💧 ஆசியாவில் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.

💧ஆசியாவில் வானொலி ஒலிபரப்பை முதலாவதாக தொடங்கிய நாடு.


💧 ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு இலங்கையாகும்.

💧 உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு.

💧 உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கறுவாவை ஏற்றுமதி செய்யும் நாடு.

💧உலகின்முதலாவதுவனவிலங்குசரணாலயம்இலங்கையிலேயே அமைக்கப்பட்டது.

💧கிரிக்கட் உலகக் கிண்ணத்தை 1996ஆம் ஆண்டு இலங்கை வென்றெடுத்தது.

தொகுப்பு:செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment