வாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி?

 


சுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள், பழக்கங்கள், மற்றவரிடம் அணுகும் முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் என்று பல அதனுள் அடங்கும். இதில் முக்கியமான ஒன்று, உங்கள் குறிக்கோளை நீங்கள் நிர்ணயிப்பதும், உங்கள் நேரத்தை சரியான விதத்தில் திட்டமிடுவதும் தான்.

பலர் தெளிவற்ற குறிக்கோள்களுடன் இருப்பதை நாம் காண்கிறோம். மேலும் பலர் தங்களது நேரத்தை சரியாகத் திட்டமிடத் தெரியாமல், வீணாக்குவதையும் நாம் காண்கிறோம். இப்படி சரியான குறிக்கோள் மற்றும் நேரத்தை திட்டமிடும் திறன் இல்லையென்றால், நீங்கள் என்ன தான் முயற்சித்தாலும்(self improvement) எந்த முன்னேற்றமும்(self improvement) இல்லாமல் ஒரே இடத்திலேயே நிற்ப்பீர்கள்.

 

சுய முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட பின், அதனை எப்படி செயல் படுத்துவது என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரும் என்னதான் சுய முன்னேற்றத்தின் முக்கியத்துவம் பற்றி புரிந்திருந்தாலும் எப்படி அதை செயல் படுத்துவது என்று தெரியாததால் வெற்றி பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க நீங்கள் சில விடயங்களை தெரிந்து கொண்டு அதனை பின்பற்றினால், உங்கள் முன்னேற்றத்தில் வெற்றி பெறலாம்.

 

முதலில் நீங்கள் எண்ணியதில் வெற்றி அடைந்து விட்டதாகவும், சாதித்து விட்டதாகவும் எண்ணுங்கள். இந்த எண்ணம் உங்களுக்கு உங்கள் முன்னேற்றத்தை(self improvement) நோக்கி முதல் படியை எடுத்து வைக்க உதவும். நீங்கள் எப்படி என்னுகுறீர்களோ அப்படியே உங்கள் வாழ்க்கை அமையும். அதனால் நீங்கள் வெற்றி பெற்று விட்டதாக அதிகம் கற்பனை செய்து பார்த்து உங்கள் ஆள் மனதிற்குள் ஒர் மகிழ்ச்சியையும், உற்ச்சாகத்தையும் ஏற்படுத்துங்கள்.

 

நீங்கள் முன்னேற முடிவு செய்து விட்டால், அடுத்ததாக உங்கள் குறிக்கோள் என்ன மற்றும் அதற்காக நீங்கள் எனென்ன செய்யப் போகுரீர்கள் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி பட்டியலிடுங்கள். இந்த குறிப்புகள் அவ்வப்போது, காலபோக்கில் நீங்கள் சரியாக செயல் படுகுறீர்களா அல்லது உங்கள் திட்டத்தில் ஏதாவது மாற்றங்கள் தேவைப்படுகிறதா என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள உதவும்.

 

தினமும் காலையில் எழுந்தவுடன் நீங்கள் எந்த கவனச்சிதறலும் இல்லாமல் உங்கள் குறிக்கோளை நோக்கி பயணிப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். எந்த காரணம் கொண்டும் நீங்கள் உங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்யும் போது உங்கள் முயற்சி(self improvement) தீவிரம் அடையும். நீங்களும் உங்கள் குறிக்கோளை விரைவாக அடைந்து விட முடியும்

 

நம் வாழ்க்கையில் நாம் எவ்வளவு முயற்சி(self improvement) செய்தாலும், நம்மை சுற்றி இருப்பவர்கள் நமக்கு சில மன உளைச்சல் மற்றும் சங்கடங்களை ஏற்படுவது இயல்பே. இதனால் நாம் கோபப் படுவது மற்றும் பதற்றம் அடைவது என்று நம் மனம் பாதிக்கப் படும். அவ்வாறு நேராமல், முடிந்த வரை உங்கள் எண்ணங்களை நேர்மறையாகவும், எந்த தடை ஏற்பட்டாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் உங்கள் குறிக்கோளை மட்டும் நோக்கி செல்ல வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது மேலும் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

 

நீங்கள் அவ்வப்போது சரியாகத் தான் உங்கள் சுய முன்னேற்றத்தை நோக்கி செல்குறீர்களா என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். சில சமயங்களை நாம் செய்யும் சில தவறுகளை கவனிப்பதில்லை. இது என்றாவது ஒரு நாள் நம்மை சிக்கலில் கொண்டு விடக்கூடும். அதனால் நீங்கள் அவ்வப்போது ஏதாவது சுய முன்னேற்ற முயற்சியில்(self improvement) தவறுகள் இருக்கிறதா, நாம் சரியாகத்தான் செயல் படுகிறோமா என்று உறுதி படுத்திக் கொள்வது முக்கியம்.

 

நீங்கள் ஒன்றை செய்ய முடிவு செய்துவிட்டால் அதை தள்ளிப் போட வேண்டாம். இப்போதே செயல் படுத்த தொடங்குங்கள். இது நீங்கள் விரைவாக உங்கள் வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்க உதவும்.

 

 

0 comments:

Post a Comment